| 
        
          | 
            
              | மாவட்டம் /பருவம் | ரகம் |  
              | பாசனம் |  |  
              | மார்கழிபட்டம் (டிசம்பர் – ஜனவரி) |  |  
              | கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் | கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1 |  
              | சித்திரைப் பட்டம் (ஏப்ரல் – மே) |  |  
              | கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் | கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, |  
              | மானாவாரி |  |  
              | ஆடிப்பட்டம் (ஜீன் – ஜீலை) |  |  
              | கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் | பையூர் 1, கோ 13, கோ.ஆர்.ஏ14, பையூர் 2 |  
              | புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் – அக்டோபர்) |  |  
              | கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் | பையூர் 1, கோ13, கோ.ஆர்.ஏ14 |  |  |  கேழ்வரகு கணம் பற்றிய விவரங்கள்  
        
          | விபரங்கள் | கோ 9 | கோ 13 | கோ.ஆர்.ஏ14 |  
          | பெற்றோர் மரபு | EX 4336 x PLR 1 | கோ 7 X TAH 107 | மாளவி 1305 x கோ 13 |  
          | காலம் (நாட்கள்) | 100-105 | 95-100 | 105-110 |  
          | பருவம் |  |  |  |  
          | மானாவாரி /பாசனம் | இரண்டும் | இரண்டும் | இரண்டும் |  
          | தானிய விளைச்சல் கிலோகிராம்/ஹெக்டர் |  |  |  |  
          | பாசனம் | 4500 | 3600 | 2892 |  
          | மானாவாரி | 3100 | 2300 | 2794 |  
          | வைக்கோல் விளைச்சல் கிலோ/ஹெக்டர் |  |  |  |  
          | பாசனம் | 8000 | 10000 | 8113 |  
          | மானாவாரி | 6500 | 7500 | 8503 |  
          | தண்டு | செங்குத்தாக | செங்குத்தாக | செங்குத்தாக |  
          | உயரம் (செ.மீ) | 75-80 | 85-90 | 115-120 |  
          | பக்கத்தூர்கள் | 5-8 | 3-5 | 8-9 |  
          | 50% பூக்கும் நாட்கள் | 65-70 | 55-60 | 72 |  
          | கதிரின் வடிவம் | உள்நோக்கி வளைந்த கேழ்வரகு | திறந்த | நுனி வளைந்த |  
          | கேழ்வரகு கதிர் | 8-9 | 10-17 | 9-12 |  
          | கதிரின் உயரம் (செ.மீ) | 8 | 8-10 | 10-12 |  
          | தானியத்தின் நிறம் | வெள்ளை | வெளிர் பழுப்பு | பழுப்பு |  
          | 1000 தானியத்தின் எடை (கிராம்) | 2.7 | 1.7 | 3.1 |    
        
          | விபரங்கள் | பையூர் 1 | டி.ஆர்.ஒய் 1 | பையூர் 2 |  
          | பெற்றோர் மரபு | PR 722 லிருந்து கலப்பில்லாத சந்ததி தேர்ந்தெடுத்தல் | HR 374 ல் தேர்ந்தெடுத்தல் | VL 145 x தேர்ந்தெடுத்தல் 10 |  
          | காலம் (நாட்கள்) | 115-120 | 102 | 115 |  
          | பருவம் |  |  |  |  
          | மானாவாரி /பாசனம் | மானாவாரி | காடைப்பருவம் களர்மண் /உப்பு மண் பாசனம் | மானாவாரி |  
          | தானிய விளைச்சல் கிலோ கிராம்/ ஹெக்டர் |  |  |  |  
          | பாசனம் | -- | 4011 | -- |  
          | மானாவாரி | 3125 | -- | 2527 |  
          | வைக்கோல் விளைச்சல் கிலோகிராம்/ஹெக்டர் |  |  |  |  
          | பாசனம் | -- | 6800 | -- |  
          | மானாவாரி | 5750 | -- | 4200 |  
          | தண்டு | செங்குத்தாக | செங்குத்தாக | செங்குத்தாக |  
          | உயரம் (செ.மீ) | 110 | 100 | 90 |  
          | பக்கத்தூர்கள் | 1-3 | 5-7 | 3-4 |  
          | 50% பூக்கும் நாட்கள் | 80 | 78 | 81 |  
          | கதிரின் வடிவம் | திறந்த | உள்வளைந்த | உள்வளைந்த |  
          | கேழ்வரகு கதிர் | 6-8 | 5-8 | 7-8 |  
          | கதிரின் உயரம் (செ.மீ) | 8 | 7.6 | 7.0 |  
          | தானியத்தின் நிறம் | பழுப்பு | பழுப்பு | பழுப்பு |  
          | 1000 தானியத்தின் எடை (கிராம்) | 2.7 | 2.74 | 2.9 |  
 இறவைப் பயிர்  பயிர் மேலாண்மை  நாற்றாங்கால் தயார் செய்தல் ( நாற்றங்கால் பாசனம்) நிலம் தயாரித்தல்   
        ஒரு எக்டர் வயலில் நடவு செய்யத் தேவைப்படும் நாற்றுகள் வளர்க்க 12.5 சென்ட் (500மீ) நாற்றாங்கால் பரப்பு தேவை.37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 500 கிலோ தொழுஉரம் கலந்து, நாற்றாங்கால் பாத்திகளில் சீராக பரப்பிவிடவும்.இறக்கை கலப்பைக் கொண்டு 2-3 முறை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு 5 முறை உழ வேண்டும். மேட்டுப்பாத்தி தயாரித்தல்  
        3 மீ x 1.5 மீ அளவுள்ள 6 பாத்திகள் அமைக்கவும்.   ஒவ்வொரு பாத்திக்கும் நீர் பாய்ச்ச 30 செ.மீ இடைவெளி விடவும். இடைவெளியில் உள்ள மண்ணை 15 செ.மீ ஆழத்தற்கு தோண்டி வாய்க்கால் ஆக்கவும். தோண்டிய மண்ணை பாத்திகள் மேல் போட்டு சமப்படுத்தி விடவும். 
   காளான் கொல்லி முன் விதை நேர்த்தி  
        அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/ எக்டர் (600 கிராம்/எக்டர்) மற்றும் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யவும் அல்லது அசோபாஸ் (1200 கிராம்/எக்டர்) பயன்படுத்தவும் ஒரு பாலித்தீன் பையில் திரம் 4 கிராம்/கிலோ அல்லது கேப்டான் 4 கிராம்/கிலோ அல்லது கார்பன்டாசிம் 2கிராம்/கிலோ மருந்துகளுடன்  விதைகளை கலந்து ஒரு சீரான பூச்சை விதைகளில் ஏற்படுத்தவும். விதைத்தல் மற்றும் விதைகளை மூடுதல்  
        விரலால் படுக்கையின் மீது ஒரு கோடிட வேண்டும். அதன் மீது விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தூவ வேண்டும்.கையினால் மண்ணை தூவி விதைகளை மூட வேண்டும்.500 கிலோ தொழு உரத்தை பாத்திகளின் மேல் தூவிவிட்டு விதைகளை மூடிவிட்டு மேற்பரப்பை இளக்கமாக்கவும்  குறிப்பு : விதைகளை ஆழமாக விதைத்தால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். நீர் மேலாண்மை  
        ஒவ்வொரு நாற்றாங்காலுக்கும் ஒரு       உள்வாயில் அமைக்கவும்.உள்வாயில் மூலம் தண்ணீர்       விட்டு       வாய்க்காலைச் சுற்றி தண்ணீர்       விடவும்.       மேட்டுப்பாத்திகள் ஈரமடையும் வரை, வாய்க்காலில்       தண்ணீர்       விட்டு       பின்       நிறுத்திவிடவும்.மண்ணின்       வகையைப்       பொருத்து,       நீர்       பாசன       இடைவெளி       மாறுபடும். 
        
          | பாசன எண்ணிக்கை | செம்மண் | கடின மண் |  
          | 1 பாசனம் | விதை்த உடன் | விதைத்த உடன் |  
          | 2 வது பாசனம் | விதைத்த பின் 3 –ம் நாள் | விதைத்த பின் 4 –ம் நாள் |  
          | 3 வது பாசனம் | விதைத்த பின் 7-ம் நாள் | விதைத்த பின் 9-ம் நாள் |  
          | 4 வது பாசனம் | விதைத்த பின் 12-ம் நாள் | விதைத்த பின் 16-ம் நாள் |  
          | 5 வது பாசனம் | விதைத்த பின் 17 –ம் நாள் | -- |  குறிப்பு : 
        செம்மண்ணிற்கு மூன்றாவது நாள்நீர் பாய்ச்சி, கடின மேற்பரப்பு இலகுவாக்கப்படுகிறது. இதனால் நாற்றுகள் எளிதாக முளைக்கும்.முறையாக, சீரான நீர் பாய்ச்சி, நாற்றங்கால் பாத்தியில் பிளவுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்றுகளை நடவிற்காக பிடுங்கி நடுதல்          விதைத்த 17-20 ஆம் நாட்களில் நாற்றுகளை, நடவிற்காக பிடுங்கலாம். 
 நடவு வயலை தயார் செய்தல்  நிலத்தை உழுதல்          மண் நன்றாக கட்டிகளின்றி உடையும் வரை அச்சு கலப்பை கொண்டு 2 முறையும், மர கலப்பை கொண்டு மூன்று முறையும் உழ வேண்டும். உரம் அல்லது தொழுவுரம் இடுதல்          ஹெக்டருக்கு 12.5 டன்  தொழுவுரம் அல்லது மட்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பை கொண்டு உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும்.  குறிப்பு : உரங்கள் வயலில் நன்றாக பரப்பவில்லையென்றால் ஊட்டச்சத்துகள் வீணாகும்.  உர பயன்பாடு  
        மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில்  மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி உரங்கள் அளிப்பதால் பயிர் விளைச்சலில் இலக்குகளை அடையலாம். உயர் தீவர பயிர் அமைப்பை கொண்ட மண் அதாவது கேழ்வரகு – மக்காச் சோளம் – தட்டைபயறு இம்மண்ணிற்கு பொட்டாசியம் 310 கி/ஹெக்டருக்கு தேவைப்படும். முடிந்தவரை மண் பரிசோதனையின் படி தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தை மண்ணிற்கு அளிக்க வேண்டும். மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் தழைச்சத்து 60கி, மணிசத்து30 கிலோ, மற்றும் சாம்பல் சத்து 30 கிலோ ஒரு ஹெக்டருக்கு இட வேண்டும். நடவிற்கு முன் தழைச்சத்தில் பாதியளவும், சாம்பல்சத்தில் பாதியளவும், மணிசத்து முழுவதையும் சேர்த்து அடியுரமாக இட வேண்டும்.  உரகலவையை கடைசி உழவிற்கு முன் மண்ணில் இட்டு நாட்டுக் கலப்பை கொண்டு  உழுது மண்ணுடன் உரகலவையை ஒன்றிணைக்க வேண்டும்.10 பாக்கெட்டுகள் /ஹெக்டர் (2000 கிராம்) மற்றும் 10 பாக்கெட்டுகள் (2000 கிராம் /ஹெக்டர் பாஸ்பரஸ் பாக்டீரியா அல்லது 20 பாக்கெட்டுகள் அசோபாஸ் (4000 கிராம்/ஹெக்டர்) இவற்றுடன் 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழுவுரம் கலந்து நடவிற்கு முன் இட வேண்டும். படுக்கை மற்றும் வாய்க்கால் அமைத்தல்  
        10 ச.மீ – 20 ச.மீ என்ற அளவிற்கு படுக்கை அமைத்தல் வேண்டும்.தேவையான அளவிற்கு பாசன வாய்க்கால்களை அமைக்க வேண்டும். நுண்ணூட்டக் கலவை அளித்தல்  
        தமிழ்நாடு வேளாண்மைத்துறை அறிவுறுத்தலின் படி 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையுடன் போதுமான மண் கலந்து அதை 50 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் அளிக்க வேண்டும்.நுண்ணூட்டக்கலவையை பாத்திகளின்  மீது சமமாக இட வேண்டும்.கலவையை மண்ணில் இட்டு கலக்க கூடாது. பிராதான நில நிர்வாகம்   நாற்று நடுதல்  
        படுக்கை சமமாக இருந்தால் நீர் போக எளிதாக இருக்கும்.ஒரு குத்துக்கு 2 நாற்றுகளாக நடுதல் வேண்டும் நாற்றுகளை 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.18 – 20 நாட்களுடைய நாற்றுகளை நட வேண்டும் 30x10 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.நேரடி விதைப்பாக இருந்தால் 22.5x10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.வேர்களை நனைக்க அசோஸ்பைரில்லம் சேற்றுக் குழம்பு தயாரிக்க, அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் (1000 கிராம் /ஹெக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 பாக்கெட்டுகள் மற்றும் அசோபாஸ் 10 பாக்கெட்டுகள்  இவற்றை  40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேற்று குழம்பு தயார் செய்தல் வேண்டும். இச்சேற்றுக் குழம்பில் நாற்றுகளை நடுவதற்கு முன்  15 -30 நிமிடம்   நனைக்க வேண்டும்.  களை நிர்வாகம்  
        விதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைப்பதற்கு முன் ஆக்ஸிபுளோர்பன் 0.05 கிலோ/ஹெக்டர் 500 லிட்டர் தண்ணீரில் பேக் - பேக்-பேக்/நேப்சேக்/ராக்கர் தெளிப்பான் உதவியால் தெளிக்கவும். விதைத்த 20 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுக்க வேண்டும்.மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் களைகொல்லியை தெளிக்க வேண்டும். அல்லது களைகொல்லி தெளித்தவுடன் பாசனம் செய்ய வேண்டும்.களை முளைப்பதற்கு முன் களைகொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 10 மற்றும் 20 நாட்களில் இரண்டு முறை கையினால் களை எடுக்கவும் மானாவாரி நேரடி விதைப்பு முறையில் களை முளைத்த பிறகு, ஹெக்டருக்கு 0.5 கிலோ 2,4-டி.இ.இ அல்லது   2,4-டி சோடியம் உப்பினை விதைத்த 10 வது நாளில் ஈரபதத்தினை பொறுத்து தெளிக்கவும்.  
 கை களையெடுத்தல் 
  மண்வெட்டியால் இளகிய மண்ணாக இருந்தால் நடவு செய்த 15ம் நாளில், கடின மண்ணாக இருந்தால் நடவு செய்த 17 ம் நாளில் கையினால் களையெடுக்க வேண்டும் பின்னர் அதேபோல் 30 மற்றும் 32ம்  நாட்களில் களையெடுக்க வேண்டும்.களையை 2 அல்லது 3 நாட்கள் உலர விட்டு பின் பாசனம் செய்ய  வேண்டும். குறிப்பு: களைகொல்லி பயன்படுத்துவதாக இருந்தால் கையினால் களையெடுக்க வேண்டியதில்லை. நீர் நிர்வாகம்   பயிர் வளர்ச்சிக்கான பின்வரும் பாசன முறைகளை கையாள வேண்டும்  
  
    | நிலைகள் | பாசன எண்ணிக்கை | 80 நாட்கள் | பயிர் காலம் 100 நாட்கள்
 | 120 நாட்கள் |  
    | தழைப்பருவம் (பண்ணை) |  | 1 – 16 | 1-18 | 1-20 |  
    | தழைப்பருவம் (நடவு வயலில்)
 |  | 1-18 | 1-20 | 1-22 |  
    | பூக்கும் பருவம் |  | 19-40 | 21-55 | 23-69 |  
    | முதிர் பருவம் |  | 40 நாட்களுக்கு மேல் | 55 நாட்களுக்கு மேல் | 69 நாட்களுக்கு மேல் |  
    | கடின மண் |  |  |  |  |  
    | நிறுவுதல் | 1 | 1ம் நாள் | 1ம் நாள் | 1ம் நாள் |  
    | (1-7 நாட்கள்) | 2 | 5ம் நாள் | 5ம் நாள் | 5ம் நாள் |  
    | தழைப்பருவம் | 1 | 18ம் நாள் | 20ம் நாள் | 20ம் நாள் |  
    | (8-20 நாட்கள்) | 2 | 31ம் நாள் | 33ம் நாள் | 30ம் நாள் |  
    | பூக்கும் பருவம் | 1 | 41ம் நாள் | 42ம் நாள் | 37ம் நாள் |  
    | (21-55 நாட்கள்) | 2 | 51 ம் நாள் | 52ம் நாள் | 44ம் நாள் |  
    |  | 3 | -- | -- | 63 ம் நாள் |  
    | முதிர் பருவம் | 1 | 61ம் நாள் | 62ம் நாள் | 78ம் நாள் |  
    | (56-120 நாட்கள்) | 2 | -- | -- | 93ம் நாள் |  
    | இதன் பிறகு பாசனம் வேண்டியதில்லை |  |  |  |  |  
    | இளகிய மண் |  |  |  |  |  
    | நிறுவுதல் | 1 | 1 ம் நாள் | 1 ம் நாள் | 1ம் நாள் |  
    | (1-7 நாட்கள்) | 2 | 5ம் நாள் | 5ம் நாள் | 5ம் நாள் |  
    | தழைப்பருவம் | 1 | 15ம் நாள் | 16ம் நாள் | 16ம் நாள் |  
    | (8-20 நாட்கள்) | 2 | 26ம் நாள் | 28ம் நாள் | 28ம் நாள் |  
    | பூக்கும் பருவம் | 1 | 36ம் நாள் | 36ம் நாள் | 36ம் நாள் |  
    | (21- 55 நாட்கள்) | 2 | 45ம் நாள் | 45ம் நாள் | 45ம் நாள் |  
    |  | 3 | -- | 54ம் நாள் | 54ம் நாள் |  
    | முதிர் பருவம் | 1 | 58ம் நாள் | 69ம் நாள் | 78ம் நாள் |  
    | (56-120 நாட்கள்) | 2 | 70ம் நாள் | 85ம் நாள் | 93ம் நாள் |  
    | இதன் பிறகு பாசனம் செய்ய தேவையில்லை |  |  |  |  |  
    | குறிப்பு : இந்த பாசனம் அட்டவணை ஒரு வழிகாட்டலே இது வானிலை மற்றும் கிடைக்கும் மழையின் அளவிற்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள வேண்டும் |  அறுவடை செய்தல்  அறுவடையை  தீர்மானித்தல்  
  ராகி பயிர் அனைத்தும் ஒரே சீராக முதிர்ச்சியடைவதில்லை எனவே இரண்டு முறையாக அறுவடை செய்ய வேண்டும்.தானிய கதிரில் 50% கதிர்கள் பழுப்பு நிறமடைந்தபிறகு அதை அறுவடை செய்யலாம்.  பயிர் அறுவடை முதல் அறுவடை
 
  முற்றி பழுப்பு நிறமடைந்த அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும்.தானியத்தை காயவைத்து, கதிரடித்து தூற்றி சுத்தம் செய்ய வேண்டும். இரண்டாம் அறுவடை  
  முதல் அறுவடைக்கு பிறகு 7ம் நாளில், அனைத்து தானியகதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும்.அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன்  குவியலாக நிழலில் ஒரு நாள் வைப்பதன் மூலம் வெப்பநிலை அதிகரித்து தானியத்தை தரமாக்க வேண்டும்.உலர்ந்த தானியத்தை கதிரடித்து, புடைத்து, சுத்தம் செய்து சாக்கு பைகளில் சேமிக்க வேண்டும். கதிரடித்தல்    தானியக்கதிரை அறுவடை செய்யும் போது முற்றாத கதிரை தவிர்த்து உலர்த்தி, சுத்தம் செய்து தரப்படுத்த வேண்டும். தானியகதிரில் ஈரப்பதம் 15% அளவிற்கு இருக்கும் போது அதை கையினால் அல்லது மூங்கில் குச்சியால் கதிரடித்து சுத்தம் செய்து  சேமித்து வைக்க வேண்டும். முன்தூய்மிப்பு மற்றும் உலர்த்துதல்    தானிய விதைகள் வெயிலில் உலர்த்துவதன் முன் முன்தூய்மிப்பு செய்ய வேண்டும். விதைகள் தரப்படுத்துவதற்கு முன் உலர்த்தவேண்டும். சேமிக்கும் போது பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு    தானியம் நிலை: தானிய நிலைக்கு விதைகளை 10% குறைவான ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.விதை நிலை: 100 கிலோ விதைக்கு வெண்களிமண் ஒரு கிலோ அல்லது மாலத்தியான் 5% டி. சாக்கு அல்லது பாலித்தீன் உறை கொண்ட சாக்கு பைகளில் சேமிக்கவும்.
 குறிப்பிட்ட சிக்கல்கள் 
  வேர் அசுவிணி பூச்சி : டைமெத்தோயேட் 3 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து  பாதிக்கப்பட்ட செடியின் வேர் சூழ் மண்டலத்தை அந்த பூச்சிகொல்லி கலவையில் நனைக்க வேண்டும்.மானாவாரி கேழ்வரகு : அசோஸ்பைரில்லத்துடன் தொழுவுரம் கலந்து வயலுக்கு அளிப்பதால் 40 கிலோ /ஹெக்டருக்கு நைட்ரஜனுக்காக செலவு செய்ய வேண்டியதில்  50 % செலவு சேமிக்கப்படுகிறது. மானாவாரியில் கேழ்வரகில் வயதான நாற்றுகளின் கட்டுப்பாடு : 21 நாட்கள் தாண்டிய கேழ்வரகு நாற்றுகள் நடவு செய்யும் போது, மகசூல் இழப்பை குறைக்க (ஒரு குத்திற்கு 3 நாற்றுகள்)  3/குத்து மற்றும் தழைச்சத்து பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் 25% மகசூல் இழப்பை குறைக்கலாம்.ரெனிஃபார்ம் நூற்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த நாற்றங்காலில் ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் வேம் பயிர் வளர்ப்பினை இட வேண்டும் மற்றும் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் கொண்டு விதை நேர்த்தி, நாற்று நனைத்தல் செய்ய வேண்டும் மற்றும் மண்ணில் இட வேண்டும். ராகி : மானாவாரி  மழை     450-500 மிமீ சராசரி மழை கேழ்வரகிற்கு போதுமானது. பருவகாலம்    கேழ்வரகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பருவங்களில் வளர்ந்து வருகிறது. இது ஒரு மானாவாரி பயிராகவும், பொதுவாக தமிழ்நாட்டில் ஜீன், ஜீலையில் வருகின்றது. தமிழ்நாட்டில் குளிர் காலத்தில் (ராபி) இது செப்டம்பர்- அக்டோபர் மாதத்திலும், கோடைகால பாசன பயிராக ஜனவரி - பிப்ரவரி மாதத்தில்  நடவு செய்யப்படுகிறது. பண்படுத்துதல்   சாகுபடிக்குரிய நிலத்தை பயிரிடுவதற்கு முன்பே, கோடை உழவு செய்து, ஈரப்பதத்தை சேமிக்க வேண்டும். ஏப்ரல் அல்லது  மே மாதத்தில் இறக்கை கலப்பை கொண்டு ஒரு முறை ஆழமாக உழுது, இரண்டு முறை  நாட்டு மரக்கலப்பை கொண்டும் உழவு செய்வதும் அவசியம். கொத்துக் கலப்பை அல்லது பலபல் கொண்ட கொத்து கொண்டு நல்ல மென்மையான விதைப் பாத்திகள் விதைப்பிற்கு முன் தயார் செய்யவும்.
 விதை வீதம் மற்றும் நடவு      நல்ல மகசூல் பெறுவதற்கு, ஒரு எக்டருக்கு 4-5 லட்சம் பயிர் எண்ணிக்கை அவசியம். இதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பயிர் எண்ணிக்கை இருந்தால், மகசூல் குறையும். கேழ்வரகு சாகுபடியில் பல முறைகள் உள்ளன. வரிசைக்கு வரிசை 22.5 – 30 செ.மீ இடைவெளி கொடுக்க வேண்டும். கேழ்வரகு விதைகள் மிகவும் சிறியதாக உள்ளதால்(400 விதைகள்/கிராம்) ஒரு ஹெக்டருக்கு 15 -20 கிலோ விதைகள் அதாவது 4 மில்லியன் விதைகள் தேவைப்படும். விதையிடும் கருவியைப்  பயன்படுத்தி, செடிக்கு செடி 7.5-10 செ.மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.     விதையிடும் கருவி மூலம் வரிசை விதைப்பில் விதையுடன் உரமும் சேர்த்து அளிப்பதால் ஊட்டச்சத்துகள் பயன்பாடு செடிக்கு திறம்பட கிடைக்கிறது மானாவாரி பயிரில் அதிக மகசூல் பெற சரியான அளவு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். குறைவான மழையளவு உள்ள பகுதிகளில், விதைப்பிற்கு பின் தேவையான அளவு ஈரம் இல்லாமல் இருந்தால், முளைப்புத்திறன் பாதிக்கும்.  இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், விதை கடினமாக்குதல் முறையை பின்பற்றினால் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாற்றுகளுக்கு, வீரியம் உண்டாவதுடன், வறட்சியைத் தாங்கும் திறன் ஏற்படுகிறது.
 விதைகளை கடினமாக்குதலின் செயல்முறை: 
    விதைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை வடித்துவிட்டு விதைகளை ஈரத்துணியில் 2 நாட்கள் கட்டி வைக்க வேண்டும்.இந்த நிலையில் விதைகள் முளைக்க துவங்கிவிடும்.ஈரத் துணியிலிருந்து விதைகளை அகற்றி பின்னர் வறண்ட துணியில் 2 நாட்கள் நிழலில் உலர வைக்க வேண்டும்.இவ்வாறு கடினமாக்கப்பட்ட விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும். உரமிடுதல்       மானாவாரி கேழ்வரகு பயிரில் உரமிடுதல் குறிப்பாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சரியான முறையில் அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் உரபயன்பாடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. பொதுவாக பரிந்துரைக்கப்படும் அளவு தழைச்சத்து/மணிச்சத்து/சாம்பல்சத்து முறையே 40:20:20 கிலோ/ஹெக்டர். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து முழுவதும் விதைத்தவுடனும், தழைச்சத்து அளவை 2 அல்லது 3 ஆக பிரித்து ஈரப்பதத்தை பொறுத்து அளிக்க வேண்டும். நல்ல மழையளவும் ஈரப்பதமும் உள்ள பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 50% விதை விதைக்கும் போதும் மீதி உள்ள 50% இரண்டு சம பகுதியாக பிரித்து விதைத்த பிறகு 25-30 மற்றும் 40-45 நாட்களில் அளிக்க வேண்டும். குறைந்த மழையளவு உள்ள பகுதியில், 50% விதை விதைக்கும் போதும் மீதி உள்ள 50% விதைத்த பிறகு 35 நாட்களில் அளிக்க வேண்டும். உயிர் உரங்கள்      ஒரு கிலோ விதைக்கு 25 கிராம் அசோஸ்பைரில்லம் ப்ரேசில்லன்ஸ் மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் அவமோரியை கொண்டு  விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி ரசாயனத்தில் விதைகளை முதலில் விதைநேர்த்தி செய்து பிறகு உயிர் உரக்கலவையில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல் 
    பயிருக்கு தேவையான உயிர் உரத்தை ஒரு கிலோவுக்கு 25 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.விதைகளில் நன்றாக ஒட்டுவதற்கு ஒட்டும் கரைசல் அவசியம். இதற்கு 250 மில்லி தண்ணீரில், 25 கிராம் வெல்லம் (அ) சர்க்கரையை கரைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இவ்வாறு தயாரித்த பின் ஆறவைக்க வேண்டும்.விதைகளின் மேல் நன்றாக கரைசல் ஒட்டும் அளவிற்கு கலந்து, பிறகு உயிர் உரத்தை விதைகளுடன் கலந்து விதைகளின் மேல் படுமாறு நன்றாகக் கலக்கி விட வேண்டும்.விதைகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதவாறு தனியாக நிழலில் உலர்த்த வேண்டும்.இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்கப் பயன்படுத்த வேண்டும். களை கட்டுப்பாடு    வரிசை விதைப்பு பயிருக்கு 2-3 இடையுழவு அவசியம். மழை உத்திரவாதமுள்ள மற்றும் பாசன வசதி உள்ள பகுதிகளில், 2, 4D சோடியம் உப்பு @ 0.75 a.i./ கிலோ/ஹெக்டர் போன்ற களை முளைத்த பின்  பயன்படுத்தும் களைக்கொல்லியை விதைத்த 20-25 நாட்களுக்கு பிறகு தெளித்து   களை கட்டுப்படுத்த வேண்டும்.ஐசோபுரோடியுரான்  @ 0.5 a.i./ஹெக்டர் என்ற களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளித்து களையைக் கட்டுப்படுத்தலாம். இரண்டு முறையான கை களையெடுப்பின் மூலம்  இடையுழவு செய்யமுடியாத பகுதிகளில் களை முளைப்பு கட்டுப்படுத்தப்படும்.
   மானாவாரி நேரடி விதைப்பு கேழ்வரகில் களை முளைத்த பிறகு களைக்கொல்லி தெளிப்பு   2,4 டி சோடியம் உப்பு (அல்லது) EE தயாரிப்பை ஹெக்டருக்கு 0.5 கிலோ விதைத்த 10 நாட்களுக்கு பிறகு மற்றும்  ஹெக்டருக்கு  0.75 கிலோவை விதைத்த 15 நாட்களுக்கு பிறகு தெளிப்பதால் களையை நன்றாக கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கிறது. பயிரிடும் முறைகள்  பயிர் சுழற்சி    பச்சை பயறு/உளுந்து/கொள்ளு/சோயாபீன்/மொச்சை அல்லது வேர்கடலை இப்பயிர்களுடன் ராகியை தென் மாநிலங்களில் பயிர் சுழற்சி முறையில் பயிரிடுகின்றனர். இம்முறையில் ரசாயன உரங்கள் குறைத்து பயன்படுத்துவதால் அதிக வளைச்சல் கிடைக்கின்றது. கலப்புப் பயிர்  மானாவாரி பகுதியில் கேழ்வரகுடன் பொதுவாக துவரையை கலப்புப்பயிராக 4:1 என்ற விகிதத்தில் பயிர் செய்வதால் அதிக விளைச்சல் கிடைக்கும்.     பயிர் பாதுகாப்பு  அறுவடை பின்சார் தொழில்நுட்பம்  இந்தியாவில் விளையும் உணவு தானியத்தில் 25 சதவீதம் ராகி விளைகிறது.  அரிசி மற்றும் கோதுமையைவிட ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும்.  ராகியில் அமைந்துள்ள புரதமானது புராலமின் மற்றும் குளுட்டனின் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும், ராகியில் காணப்படுகின்றன.  இது நார்ச்சத்து நிறைந்தது ஆகும்.  பைட்டேட் மற்றும் டேனினும் பி வைட்டமினும் நிறைந்தது.  முளைகட்டி குழந்தைகளுக்கு மால்ட் தயார் செய்து பழங்காலந்தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது.மேலும் விபரங்களுக்கு
 |