|  |  |  |   மண்ணின்  வெப்பநிலை மாறக் கூடியது. பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை  மற்றும் அதன் முக்கியத்துவம்: 
        பயிர்       வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணி.மண்ணின்       வெப்பநிலை மாற்றங்கள் அதன் தன்மையை அதிக அளவில் பாதிக்கின்றன. 
 மண்ணின் வெப்பநிலையும் பயிரும்: 
        மண்       வெப்பநிலையானது விதையின் முளைப்புத்திறன் மற்றும் வேரின் செயல்களில் மிகுந்த பாதிப்பை       ஏற்படுத்துகின்றன. (நெல் – 10o செ , கோதுமை – 3 0 செ       )அதிக       வெப்பநிலை வேரின் வளர்ச்சியைத் தடைப் படுத்துவதோடு , தண்டில் சிறு சிறு தடிப்புகளைத்       தோற்றுவிக்கும்.மிக       குறைந்த வெப்பநிலை ஊட்டச் சத்துகள் உறிஞ்சுவதைத் தடைசெய்கின்றன.மண்ணின்       வெப்பநிலை 1o செல்சியத்திற்கும் குறைவாகச் செல்லும் போது பயிர்கள்       மண்ணிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதை நிறுத்திக் கொள்கின்றன.பகலில்       பயிர்களில் நீர் ஆவியாதல் அதிகம் நடைபெறுவதால் அதன் உள்வெப்பநிலையைச் சரியான அளவு       பராமரிக்க மண்ணின்  வெப்பநிலை அவசியம்.உருளைக்கிழங்கு       போன்ற சில பயிர்களுக்கு அதிக மண் வெப்பநிலை, பூச்சிகள் அதிகமாகப் பரவ வழி வகுக்கிறது.       இப்பயிருக்கு ஏற்ற வெப்பநிலை 17 0 செல்சியஸ். வெப்பநிலை 29 0       செல்சியஸிற்கு அதிகமாகும் போது கிழங்கு உருவாவது தடைபடுகிறது.சோளத்தில்       வெப்பநிலை 15 0 செல்சியஸிலிருந்து 27 0 செல்சியஸ்ஸிற்கு       உயரும்போது உற்பத்தி அதிகரிக்கின்றது.மிக       அதிக / குறைந்த வெப்பநிலை மண்ணிஉள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கையையும் மக்கும்       அளவையும் பாதிக்கும்.மண்       வெப்பநிலை அதிகரிக்கும் போது அங்ககப்பொருட்களை சிதைவுறச்செய்யும் தன்மை அதிகரிக்கும். மண் வெப்பநிலையைப் பொருத்தே மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகள்         அளவும் அமையும்.         மண் வெப்பநிலையைப் பாதிக்கும்  காரணிகள்  சரிவு: 
        குளிர்       மிதவெப்பப் பகுதிகளில் சரிவு ஒரு முக்கியக் காரணி.வடக்குப்       பகுதிகளில் தென் பக்கம் நோக்கிய சரிவுகள் வட திசை நோக்கிய சரிவுகளை விட வெப்பம்       மிகுந்தவை. உழவு: 
        மேலோட்டமான       அதிக ஆழமற்ற உழவு தூசிப் போர்வையை உருவாக்குவதால் மேற்புற மண்ணின் வெப்பநிலையைக்       குறைக்கிறது.பயிரிடப்படாத       களர் நிலங்களை விட பயிர் செய்யும் நிலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்.பகல்       நேரங்களில் பயிரிடப்படும் நிலங்களில் மண்ணிலிருந்து 1 அங்குல உயரம் வரை உள்ள காற்றின்       வெப்பநிலை பயிரிடப்படாத காற்றின் வெப்பநிலையை விட 50  - 10 0 செல்சியஸ் வரை அதிகமாக       இருக்கும். மண்ணின்  தன்மை:  
        மணற்பாங்கான  நிலம் களிமண்ணை விட அதிக வெப்பத்தைக் கொண்டிருக்கும்.குளிர்  காலங்களிலும் மண்ணின் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும். மண்ணின்  ஈரப்பதம்: மண்ணில் தேவையான  அளவு ஈரப்பதம் இருந்தால்தான்  வெப்பநிலையை சரியாக  பராமரிக்க இயலும்.
 அங்ககப்பொருட்கள்:  
        மண்ணில்       உள்ள அங்ககப்பொருட்கள் அதன் வெப்பநிலையைக் குறைக்கக் கூடியவை. மேலும் மண்ணின்       கடத்துதிறன் மற்றும் சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்.கோடைகாலங்களில்       அங்ககப்பொருட்கள் நிறைந்த மண் தாதுக்கள் நிறைந்த மண்ணைவிட எளிதில் வெப்பமடைந்து       எளிதில் குளிர்கின்றன. தகவல் : www.fao.org |  |  |