Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::பாசிப்பயறு

Zinc

துத்தநாகக் குறைபாடு

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் துத்தநாகக் குறைபாடு தோன்றுகிறது. தர்மபுரி, சேலம், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதன் தீவிரம் சற்று குறைவாகக் காணப்படுகிறது.

மணற்பாங்கான, சுண்ணாம்புச்சத்து மற்றும் காரு அமிலத்தன்மை 7-க்கு அதிகமாக உள்ள நிலங்களிலும், அங்ககப் பொருட்கள் குறைவாக உள்ள மண்ணிலும், துத்தநாகக் குறைபாடு தோன்றும்.

அறிகுறிகள்

விதைத்த ஒரு மாதத்திற்குள் இளம்பயிரில்  அறிகுறிகள் தோன்றும் பயிர் வளர்ச்சி குன்றியும், இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்திலும் சிறுத்தும் காணப்படும். இலை நரம்புகள் மட்டும் பச்சையாக தோற்றமளிக்கும்.

நிவர்த்தி

எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும் அல்லது 0.5 சதம் (5 கிராம்/லிட்டர்) துத்தநாக சல்பேட் கரைசலை 20, 30 மற்றும் 40-வது நாட்களில் பயிர்களின் மேல் தெளிக்க வேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam