| 
 
      |
 
        |  | நிலக்கடலையில் இரும்புச்சத்து  பற்றாக்குறை
 
 அறிகுறிகள் : 
            
              இளம்       இலைகளில் முதலில் நரம்புகள் தவிர மற்ற பகுதிகள் இளம் பச்சையாக மாறும்.
              தீவிர       பற்றாக்குறையினால் மஞ்சள் நிறப் பகுதிகளில் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும்.
              சுண்ணாம்புச்சத்து       அதிகமாக உள்ள நிலங்களில் இக்குறைபாடு தோன்றும். நிவர்த்தி : 
            
              பெர்ரஸ்       சல்பேட்டையும் (5 கிராம்) யூரியாவையும் (10 கிராம்) ஒரு லிட்டர்நீரில் கரைத்து,       10 நாட்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.
              சுண்ணாம்புச்சத்து       அதிகம் உள்ள நிலங்களில் தழைச்சத்து, தொழு உரம் இடவேண்டும். |  |