Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::துவரை

Potassium

துவரையில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலை முனை மஞ்சளாகவோ, பழுப்பு நிறமாகவோ காணப்படும்
  • இலை முனையிலிருந்து இலை விளிம்புடன் சேர்த்து மஞ்சள் நிறமாக மாறும்
  • பின் ஒன்றுசேர்ந்து ஒரே மாதிரியான இடங்களில் பக்க இலை நரம்புகளின் இடையிலும் நிறம் மாறி காணப்படும்
  • இலை முனைகள் காய்ந்து காணப்படும். அறிகுறிகள் அதிகமாக இலை முனைகளில் தென்படும்
  • இலை முனையில் காய ஆரம்பித்து இலையின் விளிம்புகள் முழுவதும் காய்ந்துவிடும்
  • காய்ந்த பகுதிகளின் இடையில் மஞ்சள் நிற கீற்று உருவாகும். முன் பருவத்தில் திடமான பச்சை நிற திசுக்கள் காணப்படும்
  • பாதிக்கப்பட்ட இலைகள் அறிகுறிகளை தோற்றுவிக்காது. பொதுவாக ஆழந்த பச்சை நிறத்தில் தென்படும்.
  • வளர்ச்சி குன்றி காணப்படும்

நிவர்த்தி

தழை தெளிப்பான் பொட்டாசியம் க்ளோரைட் 1%ஐ ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam