|   துவரை  துத்தநாகச்சத்து குறைபாடு தமிழகத்தில் எல்லா  மாவட்டங்களிலும்  துத்தநாகக் குறைபாடு காணப்படுகிறது.  தர்மபுரி, சேலம், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதன் தீவிரம் சற்று குறைவாக  இருக்கும். மண்ணின் கார அமிலத்தன்மை 7-க்கு மேல் இருப்பினும், களிமண் âமிகளிலும், சுண்ணாம்புச்சத்து  அதிகம் உள்ள மற்றும் அங்ககப் பொருட்கள் குறைவாக உள்ள மண்ணிலும் பற்றாக்குறை காணப்படும். குறைபாட்டின்  அறிகுறிகள் பயிரின் வளர்ச்சி குன்றி,  குட்டையாக இருக்கும். இலைகள் சிறியதாக அடுக்கடுக்காக நெருங்கிக் காணப்படும். இளம் இலைகள்  மஞ்சள் நிறமாகவும், பின் வெளிர்மஞ்சள் நிறமாகவும் தோன்றும். குறைபாட்டைக்  களையும் முறைகள் துத்தநாக சல்பேட்டை  எக்டருக்கு 25 கிலோ அடியுரமாக இடவேண்டும். அல்லது விதைத்த 25 முதல் 30 நாட்கள் கழித்து,  7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் 0.5 சதம் (5 கிராம்/லிட்டர்) துத்தநாக சல்பேட் கரைசலை  இரண்டு அல்லது மூன்று முறை இலைகள் மேல் தெளிக்க வேண்டும். |