வேளாண்மை :: பயறு வகைகள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாள் அவரை ( கனவேலியா க்லேடியேடா)
பயிர் மேம்பாடு எஸ்.பி.எஸ்1 வாள் அவரை அறிமுகம் செய்யப்பட்டது. இவை ஒளியுணர்வு இல்லாத காய்கறி பயிர்களில் ஒன்றாகும். இந்த அவரை 110-120 நாட்களுக்குள் முதிர்ச்சி அடைந்து விடும். இதனை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம் மற்றும் பாசனத்திற்கு மிகவும் எற்றது. விதைத்த 75 வது நாளில் இதன் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். தனிப்பயிராக எக்டருக்கு 1356 கிலோ விதை மகசூலையும், 7500 கிலோ காய் மகசூலையும் தரவல்லது. மேலும் இதனை வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் நிழல் பயிராகவும் பயிரிடலாம். பருவம் : ஜூன் - ஜூலை (மானாவாரி), செப்டம்பர் - அக்டோபர் (நபி), பிப்ரவரி - மார்ச் (கோடை). எஸ். பி. எஸ் 1 இரகத்தின் விவரங்கள்
பயிர் மேலாண்மை விதை அளவு (கிலோ/எக்டர்) : 110-120 (தனிப்பயிர்) உரங்கள் (கிலோ/எக்டர்) : 25 தழைச்சத்து, 50 மணிச்சத்து இடைவெளி : 45 x 30 செ.மீ (இறவை), 30x20 செ.மீ மானாவாரி
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |