சர்க்கரைச்சோளம் (சொர்கம் பைகலர்)
பயிர்மேம்பாடு
பருவம் மற்றும் இரகங்கள்
பருவம் |
இரகங்கள் |
மாவட்டங்கள் |
ஆடிப்பட்டம் (ஜீலை-ஜீலை) |
எஸ்.எஸ்.வி.84 ஆர்.எஸ்.எஸ்.வி.9 |
நீலகிரி மாவட்டம் தவிர தமிழகத்தின் எல்லா மாவட்டங்களும் |
புரட்டாசிப்பட்டம்
(செப்-அக்டோபர்) |
எஸ்.எஸ்.வி.84
ஆர்.எஸ்.எஸ்.வி.9 |
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், நீலகிரி தவிர மற்ற எல்லா மாவட்டங்களும் |
சித்திரைப்பட்டம்
(மார்ச்-ஏப்ரல்) |
எஸ்.எஸ்.வி.84
ஆர்.எஸ்.எஸ்.வி.9 |
நீலகிரி தவிர மற்ற எல்லா மாவட்டங்களும் |
குறிப்பு: ஜீலை மாதத்தின் பிற்பகுதி ஆகஸ்டு மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை விதைப்பு செய்யக் கூடாது
சர்க்கரைச்சோள இரகம் பற்றிய குறிப்பு
இரகம் |
: |
எஸ்.எஸ்.வி.84 |
வயது (நாட்கள்) |
: |
110-115 |
பயிரிடும் பகுதிகள் |
: |
எல்லா மாவட்டங்களிலும் (நீலகிரி நீங்கலாக) |
பட்டம் |
: |
தை, சித்திரை, ஆடி (இறவை) புரட்டாசி (மானாவாரி) |
தானிய மகசூல் (கி,எக்) |
: |
1770 (இறவை) |
தட்டை மகசூல் (டன்,எக்) |
: |
43.58 (இறவை) |
தண்டின் உயரம் (செ.மீ.) |
: |
273.9 |
சாறு பிழியும் திறன் (சதம்) |
: |
47.1 |
பிரிக்ஸ் அளவு (டிகிரி) |
: |
16.5 |
மொத்த கரையும் திடப்பொருள் (சதம்) |
: |
14.1 |
நீர்க்கும் சர்க்கரை அளவு (சதம்) |
: |
2.1 |
சர்க்கரை (சதம்) |
: |
11.8 |
எத்தனால் உற்பத்தி (லி, எக்டர்) |
: |
2,500-3,000 |
வணிக ரீதியான சர்க்கரை (சதம்) |
: |
9.20 |
வணிக ரீதியான சர்க்கரை (கு,எக்டர்) |
: |
24.30 |
இலை உறையின் நிறம் |
: |
பச்சை |
கணுவின் நிறம் |
: |
பச்சை |
இலை நடு நரம்பின் நிறம் |
: |
வெளிர்ப்பச்சை |
கதிரின் வடிவம் |
: |
நீளமான உருளை |
கதிரின் தன்மை |
: |
ஒரளவு குவிந்து |
தானியத்தின் நிறம் |
: |
முத்துப்போன்ற வெண்மை |
சிறப்புகள் |
: |
எல்லா பருவத்திற்கும் இறவையில் சாகுபடிக்கு ஏற்றது |
விவரங்கள் |
எஸ்.எஸ்.வி 84 |
ஆர்.எஸ்.எஸ்.வி 9 |
பெற்றோர் |
IS 23568 லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது |
RSSV X SPV 462 |
வயது (நாட்கள்) |
120-125 |
115-120 |
பயிரிடும் பகுதிகள் |
எல்லா மாவட்டங்களிலும் |
எல்லா மாவட்டங்களிலும் |
பருவம் (பட்டம்) |
ஆடிப்பட்டம் |
ஆடிப்பட்டம் |
தானிய மகசூல் கிலோ/எக்டர் |
1000- 1200 |
800-1000 |
தட்டை மகசூல் (டன்/எக்டர்) |
30-35 |
35-40 |
தண்டின் உயரம் (செ.மீ.) |
190- 210 |
240- 270 |
சாறு பிழியும் திறன் (%) |
25.4 |
26.2 |
பிரிக்ஸ் அளவு (%) |
17-19 |
18-20 |
மொத்த கரையும் திடப்பொருள் (%) |
11.6 |
13.6 |
நீர்க்கும் சர்க்கரை அளவு (%) |
3.18 |
1.81 |
சர்க்கரை (%) |
9.6 |
11.4 |
எத்தனால் உற்பத்தி (கி.லி/எக்டர்) |
800- 1000 |
1000 -1200 |
வணிக ரீதியான சர்க்கரை (குயிண்டால் / எக்டர்) |
16.5 |
25.8 |
இலை உறையின் நிறம் |
NT |
NT |
கணுவின் நிறம் |
9-10 |
11-14 |
இலை நடு நரம்பின் நிறம் |
பச்சை |
வெளிர்ப்பச்சை |
கதிரின் வடிவம் |
நீளமான உருளை |
நீளமான உருளை |
கதிரின் தன்மை |
ஒரளவு குவிந்து |
ஒரளவு குவிந்து |
தானியத்தின் நிறம் |
வெள்ளை |
முத்துப்போன்ற வெண்மை |
விதை நேர்த்தி
- விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கேப்டான் அல்லது திரம் பூஞ்சாண மருந்து அல்லது 4 கிராம் மெட்டாக்ஸில் மருந்துடன் கலந்து விதைப்பதால் அடிச்சாம்பல் நோயிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம்.
- ஒரு எக்டேருக்குத் தேவையான விதைகளை 3 பாக்கெட் (600 கிராம்) அஸோஸ்பைரில்லம், 3 பாக்கெட் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியம் அல்லது 6 பாக்கெட் (1200 கிராம்) அஸோபாஸ் நுண்ணுயிர்க் கலவையுடன் தேவையான அளவில் அரிசிக் கஞ்சி கலந்து விதைநேர்த்தி செய்யலாம்
குறிப்பு: பயிர்களின் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்க விதைகளை ஒரு கிலோ விதைக்கு 4 மிலி குளோர்பைரிபாஸ் (20 ஈசி) அல்லது 4 மி.லி. மானோகுரோட்டோபாஸ் (35 ஈசி) அல்லது 4 மி.லி. பாசலோன் (35 ஈசி) மருந்தினை 0.5 கிராம் ஒட்டும் பசையுடன் 20 மி.லி. நீரில் கலந்து கரைசலுடன் கலந்து பின் விதைகளை நிழலில் உலரவைத்து பிறகு விதைக்கலாம்
நிலம் தயாரிப்பு
நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிலத்தை தேர்வு செய்து புழுதிபட நன்கு உழுது பின் 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்
விதைப்பு
ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும்.இவ்விதைகளை விதை நேர்த்தி செய்த பின் 45 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்ட பார்களுக்கு பக்கவாட்டில் செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு சுமார் 2 செ.மீ. ஆழத்தில் குழிக்கு 2 விதைகள் வீதம் விதைக்க வேண்டும் விதைத்த குழிகளை மணல் கொண்டு மூட வேண்டும்
குறிப்பு: குருத்து ஈ தாக்குதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் எக்டருக்கு 12.5 கிலோ விதைகளைப் பயன்படுத்தி, பூச்சிகளால் தாக்கப்பட்டு இளம் செடிகளை பயிர்கலைக்கும் சமயம் அகற்றிவிட்டோ அல்லது சிறிய நாற்றங்கால் விதைகளை விதைத்து அதில் சேர்க்கப்பட்ட நாற்றுகளை இடைவெளியில் நடவு செய்தோ பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்
உரமேலாண்மை
- கடைசி உழவின் போது எக்டருக்கு 12.5 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும்
- ஒரு எக்டருக்கு 10 பாக்கெட்டுகள் (2 கிலோ) அஸோஸ்பைரில்லத்துடன் 10 பாக்கெட் (2 கிலோ) பாஸ்போ பாக்டீரியம் அல்லது 20 பாக்கெட் (4கிலோ) அஸோபாஸ் நுண்ணுயிர்க் கலவையை இடவேண்டும்
- ஒரு எக்டருக்கு சோளத்திற்கு இடவேண்டிய நுண்ணூட்டச்சத்து கலவையை 12.5 கிலோ அளவில் 50 கிலோ மணலுடன் கலந்து பார்களின் மேலாகத் தூவவேண்டும்
- நிலத்தில் எடுக்கப்பட்ட மண்ணைப் பரிசோதனை செய்து அதற்குப் பரிந்துரை செய்யப்பட்ட அளவில் இரசாயன உரமிடுதல் அவசியம், பரிசோதனை செய்யாத நிலையில் ஒரு எக்டருக்கு சராசரிப் பரிந்துரையாக தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
உரமிடும் காலம் மற்றும் அளவு
- நுண்ணூட்டச்சத்து மற்றும் நுண்ணுயிர் உரம் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்
- பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்து அளவில் பாதியும், முழு அளவில்மணி மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இடவேண்டும்
- பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தில் 25 சதவீதம் அளவை முறையே விதைத்த 15 மற்றும் 30வது நாளில் மேலுரமாகவும் இடவேண்டும்
களைக்கட்டுப்பாடு
- விதைப்பு செய்த மூன்று நாட்களுக்கு அட்ரசின் 50 சத நனையும் தூள் களைகொல்லி 500கிராம் வீதம் ஒரு எக்டேரில் தெளித்து (நிலத்தில் ஈரப்பதத்தில்) களைகளைக் கட்டுப்படுத்தலாம். பிறகு விதைத்த 45வது நாளில் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்
- களைக்கொல்லியை பயன்படுத்தாத நிலையில் விதைத்த 15 முதல் 20 நாளில் ஒரு முறையும் பிறகு 30 முதல் 40வது நாளில் ஒரு முறையும் கைக்களை எடுக்கவேண்டும்
நிர்வாகம்
சர்க்கரைச் சோளத்தில் அதிக தட்டை மற்றும் தானிய மகசூல் பெற நீர்ப்பாசனம் அவசியம். சுமார் 400 முதல் 450 மீ.மீட்டர் அளவில் தண்ணீர் தேவைப்படும்
பயிரின் பருவம் |
நீர்ப்பாசன எண்ணிக்கை |
விதைத்த நாட்கள் |
சாதாரண நிலம் |
விதைகள்முளைப்பு |
1 |
முதல் நாள் |
இளம்பயிர் |
2 |
4வது மற்றும் 15வது நாள் |
வளரும் பயிர் |
1 |
28வது நாள் |
பூக்கும் பருவம் |
3 |
40வது, 52வது மற்றும் 64வது நாள் |
முதிர்ச்சி பருவம் |
2 |
75வது, 88வது நாள் |
கடினமண் நிலம் |
விதைகள் முளைப்பு |
1 |
முதல் நாள் |
இளம்பயிர் |
2 |
4வது மற்றும் 17வது நாள் |
வளரும் பயிர் |
1 |
30வது நாள் |
பூக்கும் பருவம் |
3 |
40வது 52வது மற்றும் 64வது நாள் |
முதிர்ச்சி பருவம் |
1 |
90வது நாள் |
நீர்ப்பாசனம் மிகவும் முக்கியம்
அறுவடை
- சாகுபடி செய்யும் இரகங்களின் வயதை மனதிற் கொண்டு பயிரைக் கவனித்து வரவேண்டும். சுமார் 100 முதல் 110 நாட்களில் பயிர்கள் விதை முதிர்ச்சி அடைந்து விடும் இத்தருவாயில் தானியங்கள் வெளிர் நிறமடைந்து கதிருடன் சேர்ந்திருக்கு காம்பு பாகம் கருத்து காணப்படும். இதுவே அறுவடை செய்ய ஏதுவான தருணமாகும். சர்க்கரை ஆலைகளின் அனுமதி பெற்று அறுவடை செய்யலாம்.
- கதிர்களைக் தனியாக அறுவடை செய்து வெயிலில் உலர்த்த வேண்டும்.
- பசுந்தட்டைகளை அதன் அடியினில் வேர்பாகத்தைத் தவிர்த்து அரிவாள் கொண்டும் அறுவடை செய்ய வேண்டும். இலைகளை நீக்க வேண்டும்
- பத்து முதல் 15 தட்டைகளை ஒன்றாகச் சேர்த்து இலைகளால் அல்லது கயிறுகளால் கட்டுகளாகக் கட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும்
- அறுவடை செய்யப்பட்ட தட்டைகளை வெயிலில் காய விடாமல், பசுந்தோகைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்
அறுவடை செய்யப்பட்ட பசுந்தட்டைகள் 48 மணி நேரத்திற்குள் அறவைக்கு கொண்டு செல்லப்படவேண்டும்
விதை சேமிப்பு
விதைகளை 10% கீழ் ஈரப்பதம் இருக்குமாறு உலர்த்த வேண்டும். நெல் அந்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த 100 கிலோ தானியங்களை 1 கிலோ கயோலினுடன் கலந்து வைக்கலாம்.
சேமிப்புகிடங்குகளில்வைக்கப்பட்டுள்ளபைகளின்மீதுமாலத்தியான் 50EC யை 10 மி.லி/லிட்டருக்குகொண்டு 100 சதுரமீட்டருக்கு 3 லிட்டர்வீதம்தெளிக்கவேண்டும்
சர்க்கரை சோளத்திலிருந்து எத்தனால்
- மகசூல் திறன் – 80 – 100 டன் / எக்டர்
- நீண்ட கால முதிர்ச்சி மகசூல் - 100 டன் / எக்டர்
- எத்தனால் மகசூல் – 2639 லி/ எக்டர் (பிரேசில்) – 7000 லிட்டர் (சீனா) – 3000 லிட்டர் (தென் ஆப்ரிக்கா) – 4790 லிட்டர் (அமெரிக்கா)
- இந்தியாவின் தேசிய இரகம் எஸ்.எஸ்.வி 84 -40-50 டன் / எக்டர் தட்டு, 40% - சாறு மகசூல் மற்றும் எத்தனால் – 4500 லிட்டர் / எக்டர் (NRCS அறிக்கை)
|