|| | ||||
எங்களைப் பற்றி :: வேளாண் அறிவியல் நிலையங்கள்
 

காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர்

ஆராய்ச்சி நிலையம் தோன்றிய விதம்
            இந்நிலையமானது தமிழ்நாட்டில் வடகிழக்கு மண்டல விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக நிலத்தின் இரண்டாவது வேளாண்மை ஆராய்ச்சி நிலையமாக 1905 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, நிலக்கடலை பயிரை மையமாக கொண்டு 1905 முதல் 1950 வரை செயல்பட்டது. மேலும் பலப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையமாகவும் (1951-1980) வரை செயல்பட்டது. பிறகு இந்நிலையமானது 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டு வந்துது. பிறகு1989 -ம் ஆண்டு முதல் காய்கறி ஆராய்ச்சி நிலையமாக பெயர் மாற்றப்பட்டு தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளை விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செய்து வருகிறது.
காய்கறி ஆரயர்ச்சி நிலையத்தின் பரப்பளவு

மொத்த பரப்பளவு  :   55.000 ஏக்கர்
கட்டிடங்கள் மற்றும் பாதை : 08.15 ஏக்கர்
பயிரிடப்படும் மொத்த பரப்பளவு   : 46.85 ஏக்கர்
நன்செய்  : 21.00 ஏக்கர்
பழத்தோட்டம் மற்றும் பல்லாண்டுப்பயிர்கள்     : 12.40 ஏக்கர்
அட்ச ரேகை      :   110.45’N
தீர்க்க ரேகை         : 750 40’E
கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம்   : 13.2 மீட்டர் (MSL)

காய்கறி ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கங்கள்:

  • காய்கறிப் பயிர்களில் அதிக மகசூல் தரக்கூடிய உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்குதல்.
  • காய்கறிப் பயிர்களில் தரமான, அதிக மகசூல் தரக்கூடிய புதிய உயர் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி மூலமாக கண்டறிதல்.
  • பழமரப்பயிர்களில் உயர் விளைச்சல் மற்றும் தரமான செடிகளை கண்டறிந்து அவற்றினை உற்பத்தி செய்தல்.
  • காய்கறி விதைகள், நெல் மற்றும் பயறு வகைகளில் வல்லுநர் விதை, ஆதார நிலை விதை, உண்மை நிலை விதைகள் உற்பத்தி செய்தல்.
  • காய்கறி விதை உற்பத்தி தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் விதைகளின் சேமிப்பு திறனை அதிகரிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து கண்டறிதல்.
  • வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பயிற்சி மற்றும் அனைத்து ஊடகங்களின் மூலம் விவசாயிகளிடம் சென்றடைய முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
  • விவசாயிகளின் வேளாண் பிரச்சனைகளை ஆய்வு செய்து, பரிந்துரை மேற்கொள்ளுதல்.

ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள்
ஆராய்ச்சி
வெளியிடப்பட்டுள்ள இரகங்கள்


வ.எண்.

பயிர்

இரகம்

வெளியிடப்பட்ட ஆண்டு

1.

கத்தரி

பி.எல்.ஆர்.1

1990

2.

பலா

பி.எல்.ஆர்.1

1992

3.

மிளகாய்

பி.எல்.ஆர்.1

1994

4.

பலா

பி.எல்.ஆர்..(ஜே)2

2007

5.

புடல்

பி.எல்.ஆர்.(எஸ்.ஜி)1

2007

6.

கத்தரி

பி.எல்.ஆர்.(பி.ஆர்.)2

2008

7.

புடல்

பி.எல்.ஆர். .(எஸ்.ஜி)2

2009

1.கத்தரி-பி.எல்.ஆர்.1(1990)

  • அதிக மகசூல் (25 டன் /ஹெக்டர்)
  • பளபளப்பான குரு நீல வண்ணக் காய்கள்
  • கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்
  • 8-10 நாட்களுக்கு வாடாத காய்கள்
  • எல்லா பருவத்திற்கும் ஏற்றது
  • நடுத்தர உயர செடிகள்
  • நெருக்கு நடவுக்கு ஏற்றது

2.பலா பி.எல்.ஆர் 1 (1992)

  • ஆண்டிற்கு இருமுறை காய்க்கும்
  • (ஏப்ரல் -ஜ%ன், நவம்பர்- டிசம்பர்)
  • உயர் விளைச்சல் ரகம் (79 காய்கள்/மரம்)
  • நல்ல தரமிக்க, மிக இனிப்பு வகைகள்
  • கவர்ச்சியான பொன்னிறமுடையகளைகள்
  • அடர் நடவிற்கும், வீட்டுத்தோட்டங்குள்ககும் ஏற்றது.

3.மிளகாய்-பி.எல்.ஆர்1(1994)

  • பளபளப்பான குண்டு மிளகாய், அதிக மகசூல் (18 டன் /ஹெக்டர்)
  • பச்சை மிளகாய் இரகம்
  • மோர் மிளகாய் செய்ய ஏற்றது.
  • உவர் தன்மையதை் தாங்கி வளரும்.
  • டிசம்பர்-ஜனவரி பருவத்திற்கு ஏற்றது.

4.பலா பி.எல்.ஆர் (ஜே)2 (2007)

  • அதிக மகசூல் (107 காய்கள் /மரம் ) தரக்கூடிய மிதமான

உயரமுடைய மரம்

  • அடர் நடவிற்கு ஏற்றது.
  • அதிக இனிப்புடைய, ஒட்டாதகளைகள்
  • அதிக வைப்புத்திறன் கொண்டது.
  • அதிக சுவையுடையது.
  • வியாபாரத்திற்கும் மற்றும் வீட்டுத்தோட்டத்திற்கும் ஏற்றது.

5.புடல் (வெள்ளை நீட்டு) - பி.எல்.ஆர்.(எஸ்.ஜி)1(2007)

  • அதிகம மகசூல் (40டன் /ஹெக்டர்)
  • தமிழ்நாட்டின் வடகிழக்கு மண்டலத்திற்கு பயிரிட ஏற்றது.
  • கவர்ச்சியான வெள்ளை நிறம்
  • காய்கள் முறுக்கும் தன்மையற்றவை.
  • குறைந்த நார் உடையவை.
  • குறைந்த வாசனையுடையது.
  • கல் கட்டா ரகம்.

6.கத்தரி-பி.எல்.ஆர் (பி.ஆர்)2 (2008)

  • அதிக மகசூல் (38-40 டன்/ஹெக்டர்)
  • அடர் ஊதாவுடன் இளஞ்சிவப்பு நிறமுடைய, முட்டை வடிவ

பளபளப்பு காய்கள்

  • சமையலுக்கு ஏற்ற தரமான இரகம்
  • எல்லா வகையான சமையல் தயாரிப்புகளுக்கும்

பயன்படுத்தக்கூடியவை

  • நகரச்சந்தையில் அதிகமாக விரும்பப்படுகிறது.
  • சந்தையில் அதிக விலைப்போகின்றது.
  • காய் மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்பு சக்தி வாய்ந்தது.
  • எல்லா பருவங்களிலும், பலவகையான மண் வகைகளிலும் பயிரிட ஏற்றது.
  • கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு ஏற்றது.

7.புடல் (வெள்ளை குட்டை)-பி.எல்.ஆர்.(எஸ்.ஜி)2 (2009)

  • அதிக மகசூல் (35 டன் /ஹெக்டர்)
  • காய்கள் பருமனாகவும், நல்ல வெண்மை நிறம்

கொண்டதாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் இருக்கும்.

  • நல்ல தரமுடைய, பல வகை சமையலுக்கும் ஏற்றது.
  • எல்லா பருவங்களிலும் பயிரிட உகந்தது.
  • பல வகையான மண் வகைகளிலும் பயிரிட ஏற்றது.
  • கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு ஏற்றது.
  • ஒரு காயின் சராசரி எடை 600 கிராம்.

8.சிறு கீரை - ஏ 8

  • சிறப்பியல்புகள்
  • சிறுகீரையில் இதுவே முதல் ரகம்.
  • திருவண்ணாமலையிலிருந்து தேர்வு செய்யப்பட்டதாகும்.
  • மிக குறுகிய கால ரகம் (20-21 நாளில் அறுவடை செய்யலாம்).
  • உயர் விளைச்சல் திறன் (8-9 டன்/ ஹெக்டர்).
  • அதிக நார்ச்சத்து மற்றும் இரும்பு, விட்டமின் சத்துக்களை உடையது.
  • மிதமான பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுடையது.
  • பல வகையான சமையல்களுக்கு ஏற்றது.

(பொரியல், கடையல், கூட்டு மற்றும் வடை).

  • எல்லா பருவத்திற்கும் ஏற்றது.
  • பல வகையான மண் வகைகளிலும் பயிரிட ஏற்றது.
  • கடந்த மூன்று வருடங்களின் விதை உற்பத்தி

காய்கறி விதைகள்

காய்கறி விதைகள்


வ.எண்.

பயிர்

இரகம்

நிலை

2010-11

2011- 12

2012 – 13 (டிசம்பர் ’12 வரை)

மொத்தம் (கிலோ)

1.

கத்தரி

பி.எல்.ஆர்.1

உண்மை நிலை விதை

-

6.500

-

6.500

2.

கத்தரி

பி.எல்.ஆர்.2

195.350

830.000

378.000

1,403.350

3.

கத்தரி

அண்ணாமலை

22.200

105.600

71.500

199.300

4.

கத்தரி

அரியாங்குப்பம்

2.000

-

-

2.000

5.

தக்காளி

பி.கே.எம்.1

1.500

3.100

2.000

6.600

6.

புடல்

பி.எல்.ஆர்.1

84.200

58.450

15.000

157.650

7.

புடல்

பி.எல்.ஆர்.1

43.500

36.000

-

79.500

8.

வெண்டை

அர்காஅனாமிகா

528.500

228.000

76.900

833.400

9.

பாகல்

கோ1

122.000

53.100

12.000

187.100

10.

பீர்க்கன்

பி.கே.எம்.1

31.000

7.200

20.250

58.450

11.

பீர்க்கன்

லோக்கல்

4.000

8.100

-

12.100

12.

சாம்பல்பூசணி

கோ1

25.400

30.000

2.250

57.650

13.

சாம்பல்பூசணி

கோ2

0.500

-

-

0.500

14.

அமாரான்தஸ்

ஏ8

118.500

13.500

140.500

272.500

15

அமாரான்தஸ்

அரைக்கீரை

4.000

-

-

4.000

16

அமாரான்தஸ்

கோ1

2.000

-

-

2.000

17

அமாரான்தஸ்

ஏ13

2.000

-

-

2.000

18

அமாரான்தஸ்

ஏ10

16.000

-

-

16.000

19

அமாரான்தஸ்

ஏ18

1.000

-

-

1.000

20

அமாரான்தஸ்

பி.எல்.ஆர்.1

14.150

19.500

9.000

42.650

21

பரங்கிகாய்

கோ2

3.750

16.200

13.000

32.950

22

பரங்கிகாய்

லோக்கல்

14.000

-

-

14.000

23

கொத்தவரை

பி.என்.பி.

2.000

-

8.000

10.000

24

முருங்கை

பி.கே.எம்.1

0.175

-

-

0.175

மொத்தம்

1,237.725

1,415.250

748.400

3,401.375

II.  நெல் விதைகள்


வ.எண்.

பயிர்

இரகம்

நிலை

2010-11

2011- 12

2012 – 13
(டிசம்பர் ’12 வரை

மொத்தம்

1

நெல்

சி.ஆர்.1009

ஆதார விதை

16,470

19,000

-

35,470

2

நெல்

மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி

ஆதார விதை

5,575

-

 

-

5,575

3.

நெல்

ஏ.டி.டீ.43

ஆதார விதை

7,050

13,830

6,360

27,240

4.

நெல்

ஏடிடீ.37

ஆதார விதை

12,180

-

-

12,180

மொத்தம்

41,275

32,830

6,360

80,465

III.பயிர் வகை விதைகள்


வ.எண்.

பயிர்

இரகம்

நிலை

2010-11

2011- 12

2012 – 13
(டிசம்பர் ’12 வரை

மொத்தம்

1

உளுந்து

ஏடீடி5

பயிர் வல்லுநர் விதை

880

707

-

1,587

2

உளுந்து

ஏடீடி5

கரு விதை

19

-

-

19

3

உளுந்து

ஏடீடி5

ஆதார விதை

-

-

1464

1464

4.

உளுந்து

வி.பி.எண்.3

ஆதார விதை

-

428

-

428

5.

பச்சைப்பயிர்

கோ6

ஆதார விதை

-

-

368

368

6.

தட்டைப்பயிர்

கோ6

ஆதார விதை

-

-

432

432

7.

உளுந்து

ஏடீடி5

உண்மை நிலை விதை

100

90

-

190

 

மொத்தம்

999

1225

2,264

4488

IV.  பசுந்தாள் விதைகள்


வ.எண்.

பயிர்

இரகம்

நிலை

2010-11

2011- 12

2012 – 13
(டிசம்பர் ’12 வரை)

மொத்தம்

1.

சணப்பு

கோ1

உண்மை நிலை விதை

60

250

250

560

V. வீட்டு காய்கறித்தோட்ட விதைப் பைகள்


2010 - 11

2011 - 12

2012 – 13

எண்ணிக்கை

வரவு (ரூபாய்)

எண்ணிக்கை

வரவு(ரூபாய்)

எண்ணிக்கை

வரவு(ரூபாய்)

12,265

2,45,300

14,041

2,80,820

19,563

3,91,260

VI.பழக்கன்றுகள் மற்றும் அலங்கார வகை செடிகள்


வ.எண்.

விவரம்

2010-11

2011-12

2012-13
(டிசம்பர் ’12 வரை)

மொத்தம்

1

மா

11,880

21,571

10,252

43,703

2.

பலா

8,759

12,252

5,507

26,518

3.

கொய்யா

5

-

698

703

4.

சப்போட்டா

2,267

2,158

2,714

7,139

5.

அலங்கார வகை செடிகள்

4,364

4,661

2,226

11,251

 

மொத்தம்

27,275

40,642

21,397

89,314

 

தொடர்புக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
காய்கறி ஆராய்ச்சி நிலையம்
பாலூர்-642 101
.
Phone:04142-275222
Email:hrspalur@tnau.ac.in

Updated on Nov 2013

 
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013