Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை


அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வேளாண் வணிகத்துறையின் விதிமுறைகள்


வேளாண் வணிகத்துறையில் அரசு நிகழ்ச்சிகள்
வணிகத்துறையில் தொழில் தொடங்குவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய மற்றும் மாவட்ட அரசாங்கம் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது சிறு அளவுத் தொழில்கள், காதி ஊரகத் தொழில்கள், சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் பெரிய தொழிகளானது நிதி முதலீட்டை பொருத்தது போன்று பலவகைப்படும். இது மட்டுமல்லாமல் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டபின் ஏற்றுமதி சந்தையிலும் ஈடுபடுகிறது. இந்த ஏற்றுமதி சந்தையானது, ஏற்றுமதி செயலகமாகி (EPZ) அதன் பின் சிறப்புப் பொருளாதார வட்டாரமாக (SEZ) மாறியது. அதன் பின் இந்த SEZ ஆனர் வேளாண் ஏற்றுமரி வட்டாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தனியார் முதலீட்டாளர்கள் அரசாங்கத்தால் ஈர்க்கப்பட்டு, குளிர் பதன சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்து, இரயில்வே, கடல் மற்றும் காற்று வளி போக்குவரத்தினை உயர்த்துதல் போன்ற பல்வேறு வகையான அடிப்படை வசதிகளில் முதலீடு செய்யப்படுகிறது.

சிறு மற்றும் மிகச்சிறிய தொழில்கள், நார் தொழில்கள் போன்றவற்றின் வளர்ச்சியை அதிரிக்கப்பதற்காக சிறு அளவு தொழில்கள் மற்றும் வேளாண் மற்றும் ஊரகத் தொழில்களின் அமைச்சர், கொள்கைகளை உருவாக்கி, வடிவமைத்து மற்றும் அதனை நடைமுறைப்படுத்தினர்.

இந்த அமைச்சரவையான மற்ற அமைச்சர்கள் அல்லது துறைகளுடன் இணைந்து சிறு அளவு தொழில்களின் (SSI) வளர்ச்சியை உயர்த்துகின்றனர். இந்தக் கொள்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் / திட்டங்கள் மூலம் சிறு தொழில்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் ஆதரவு சேவைகளை சிறு தொழில் வளர்ச்சி அமைப்பு (சிட்கோ), சட்டப்படியான அமைப்பு அல்லது துறையான காதி மற்றும் ஊராகத் தொழில் ஆணைக்குழு (KVIC) மற்றும் மக்களால் நடத்தப்படும் நார் பொருட்களின் வாரியம், தேசிய சிற தொழில் கழகம் (NSIC) மற்றும் மூன்று பயிற்சி நிறுவனங்களான, தேசிய சிறு தொழில் வரிவுப்படுத்தும் பயிற்சி நிறுவனம் (NISIET) ஹைதராபாத், தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (NIESBUD), புது டெல்லி, மற்றும் இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் (IIE) கெளஹாதி போன்றவற்றின் மூலம் செய்து தருகிறது.

தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனங்கள்
மூன்று நிறுவனங்களில்  சிறு அளவு தொழில் முனைவோரின் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனங்களானது இந்திய தொழில் முனைவோர் நிறுவனம் (IIE), கெளஹாதி, தேசிய சிறு தொழில் விரிவுப்படுத்தும் பயிற்சி நிறுவனம் (NISIET), ஹைதராபாத், தொழில் முனைவோர் மற்றும் சிற தொழில் வளர்ச்சி நிறுவனம் (NIESBUD), புது டெல்லி, மணம் மற்றும் சுவை மணம் வளர்ச்சி மையம் (FFDC) கன்னாஉச் அரசாங்கத்தால் பெற்றது. மேலும் UNDP / UNIDO மற்றும் UP/UNDP/UNIDO அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் தொழில்நுட்ப அறிவு மற்றும் முக்கியமான கருவிகள் மூலமும் எப்எப்டிசி ஆனது முழு அமைப்பைப் பெற்றது. உத்திரப்பிரதேச அரசாங்கம் நில மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை தரும் பொழுது இந்திய அரசாங்கமும் கருவிகள் மற்றும் செலவுகளில் பங்களிக்கிறது. இந்த அரசாங்கத்தில் முக்கியக் குறிக்கோள் யாதெனில் விவசாயிகள் மற்றும் தொழில்களில் வாசனையுள்ள பொருட்களை விவசாயம் செய்து அதனை பதப்படுத்துதல் போன்றவற்றில் பல்வேறு வகையில் உதவி அளித்து உள்ளூர் மற்றும் உலகச் சந்தையில் இந்த வாசனைப் பொருட்களை மேம்படுத்துவதாகும்.

ஏற்றுமதி செயல்முறை வட்டாரம் (EPZ)
இந்த ஏற்றுமதி செயல்முறை வட்டாரமானது அரசாங்கத்தின் வருமானம், செலவு, கடன் தடைகளான வீட்டு வரி பகுதிகளில் இருந்து தனிப்பட்டதாகும். இதன் மூலம் சுதந்திரமான சூழ்நிலையில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரசாங்கமான நொய்டா (உத்திரப்பிரதேசம்), சென்னை (தமிழ்நாடு), பாட்னா (மேற்கு வங்காளம்) மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) போன்ற நான்கு இடங்களில் ஏற்றுமதி செயல்முறை வட்டாரத்தை அமைத்துள்ளது.

சிறப்பு பொருளாதார வட்டாரம் (SEZ)
அரசாங்க ஏற்றுமதி மற்றும் இறக்கும் கொள்கையானது 31, மார்ச், 2000 அன்று சிறப்பு பொருளாதார வட்டாத்தின் மூலம் ஏற்றுமதியை உயர்த்த புதிய  திட்டத்தை வழிவகுத்துள்ளது. இந்தக் கொள்கைகளின்  மூலம் SEZயினை பொது மக்கள், தனியார், கூட்டுத் தொகுதி அல்லது தேசிய அரசாங்கங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கொள்கையானது இறக்கு ஏற்றுமதி செயல்முறை வட்டாரத்தினை சிறப்புப் பொருளாதார வட்டாரமாக மாற்றுவதனை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் அரசாங்கமானது காண்ட்லா (குஜராத்), சாண்டா குரூஸ் (மகாராஷ்டிரா), கொச்சின் (கேரளா) போன்ற இடங்களில் உள்ள EPZ ஆனது SEZ ஆக 1.11.2000 அன்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்றுமதி நோக்குப் பிரிவு (EOU)

ஏற்றுமதி நோக்குப் பிரிவு திட்டமானது 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, EPZ திட்டத்தினை பூர்த்திச் செய்கிறது. இந்தப் பிரிவும் கூட ஒரே மாதிரியான உற்பத்தியை உள்ளடக்கியது. ஆனால் இந்தப் பிரிவானது மூலப்பொருட்கள், ஏற்றுமரி துறைமுகங்கள், இட வசதிகளை குறிப்பால் உணர்த்தல் மற்றும் தொழில் நுட்பத்திறன், தொழில் அடிப்படை இருப்பு மற்றும் திட்டப்பணிக்காக தேவைப்படும் அதிக நிலம் போன்ற பரந்த உரிமையை உள்ளடக்கியது. மொத்தம் 1536 பிரிவுகளை இந்தத் திட்டத்தின் மூலம் மார்ச் 2001 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

பொருட்களின் விகிதம்
ஏற்றுமதி நோக்கப் பிரிவானது துணிகள் மற்றும் நூல், உணவு பதப்படுத்துதல், மின்சாரம், இரசாயனம், வேதிப் பொருட்கள், நெகிழ்வான பொருட்கள் (பிளாஸ்டிக்), கருங்கல் மற்றும் கனிமங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியில்  ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான பிரிவுகளான  தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற இடங்களில் அமைந்துள்ளது.

ஏற்றுமதி மேம்பாட்டு தொழில் பூங்கா (EPIP) திட்டம்
ஏற்றுமதி மேம்பாட்டு தொழில் பூங்கா (EPIP) திட்டமானது 1993-94ல் தொடங்கப்பட்டு மாநில அரசாங்கத்துடன் இணைந்து உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டமானது 75 சதவிகிதம் அடிப்படை வசதிகளை செய்வதற்கு ஆகும். முதன்மை செலவுகளைத் தருகிறது. அதாவது ரூபாய் 10 கோடியை ஒவ்வொரு வகைக்கு மத்திய அரசாங்கம் தேசிய அரசாங்கம் கொடுத்துள்ளது.

புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தமிழ்நாடு அரசாங்கம் ஏப்ரல் 2002ல் புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து, ரூபாய் 35 லட்சம் முதலீட்டை கொண்ட வேளாண் வணிகமானது ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 385 வேளாண் வணிகப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்கள்
சிறு  விவசாயிகள் வேளாண் வணிக கூட்டுறவானது மேனேஜ் (MANAGE) உடன் கூட்டமைப்பை ஏற்படுத்தி வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்கள் அமைக்க விருப்பமான இருப்பவர்களுக்கு, புதிய திட்டத்தினை உருவாக்கி அதன் மூலம் இருப்பவர்களுக்கு, புதிய திட்டத்தினை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது மற்றும் வேளாண் வணிக மையமானது ஒருவர் அல்லது ஐந்து நபர் கொண்ட குழுக்களுக்கு (நான்கு விவசாய மற்றும் விவசாய சம்பந்தமான பட்டதாரிகள் மற்றும் ஒன்று மேலாண்மைப் பட்டதாரி) கடன் உதவியானது ரூபாய் 10 லட்சமானது தனிநபருக்கும் மற்றும் ரூபாய் 50 லட்சமானது ஐந்து நபர் கொண்ட குழுக்குளுக்கும் அளிக்கிறது.

வழிநெறிமுறைகள்
சட்ட விதிமுறைகள்

போட்டி இடுதல், விலை நிர்ணயித்தல், பகிர்மானத்திற்கு ஏற்பாடு செய்தல், விளம்பரத்திற்கு போன்றவற்றில் ஒழுங்கான நீர்வினை சட்ட வழிமுறைகளின் படி வழிவகுக்கப்படுகிறது. தேசத்தின் சட்ட சூழ்நிலை மற்றும் நீதித்துறையின் சட்ட எல்லை போன்றவற்றின் ஒவ்வொரு மேலாளரும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்திய தொழல்களின் அடிப்படையில் கீழ்வரும் சட்டங்களானது மிக முக்கியமானதாகும்.

  1. இந்திய ஒப்பந்தம் சட்டம், 1872
  2. தொழிற்சட்டம், 1948
  3.  குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948
  4. பாதுகாப்பு ஒப்பந்த வழிமுறைச் சட்டம், 1956 (இப்பொழுது செபி மற்றும் வியாபாரப் பொருட்களின் குறியீட்டு சட்டம், 1958).
  5. நிறுவனங்களின் சட்டம், 1956.
  6. வர்த்தக மற்றும் வியாபார பொருட்களின் அடையாளக் குறியீட்டுச் சட்டம், 1958.
  7. தனியுரிமை மற்றும் தடை செய்யப்பட்ட வர்த்தக பயிற்சிகள் சட்டம், 1969.
  8. நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974
  9. வாயு (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981
  10. நலிவடைந்த தொழில் நிறுவனங்களின் (சிறப்பு முன்னேற்பாடு) சட்டம், 1974.
  11. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986
  12. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986
  13. இந்தியப் பாதுகாப்பு மற்றும் பரிமாற்று வாரியச் சட்டம், 1992
  14. கூட்டு நிறுவன வரி, மறைமுக வரிகளான வரி, சுங்க வரி அல்லது இறக்குமதி வரி, விற்பனை வரி மற்றும் சொத்து வரி போன்றவற்றின் வரி விகித்தல் சட்டம்.
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு