வேளாண் தொழிற்சாலைகள்
தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுகள்
- தொழில் அமைப்பதற்கான பழமுறைகள்
- தமிழ்நாடு தொழில் உதவி முகாம்கள்
- விண்ணப்ப படிவத்தினை பதிவு செய்வது
- விண்ணப்பப் படிவத்துடன் விபரங்களை வழங்குவது
- பணித்திட்டத்தினை மதிப்பிடல்
- பாதுகாப்பு பத்திரம் / ஆவணம்
- சட்டரீதியான ஆவணங்கள்
- பட்டுவாடா வழிகள்
தொழில் அமைப்பதற்கான படிமுறைகள்
பொருள் / தொழில் தேர்வு
பொருள் / தொழில் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் பின்வரும் நிறுவனம் / நபர்களை அணுகுதல்
- முதன்மை தகவல் அதிகாரி (தொழில்நுட்பத் தகவல்), கிண்டி, சென்னை 32
- தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனை அமைப்பு (ITCOT), சென்னை 6.
- சிறு தொழில் சேவை நிறுவனம் (SISI) கிண்டி, சென்னை - 32.
அங்கீகாரம்
- சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்டத் தொழில்கள் மையத்தின் மூலம் எஸ்எஸ்ஐ பிரிவானது தற்காலிக பதிவுச் சான்றிதழை வழங்குதல்.
- சிறு அளவு, பேரளவு உடைய தொழில் பிரிவுகளுக்கு எஸ்ஐஏ பதிவு
- ஒரு பொருளுக்கு கட்டாயமாக அத்தாட்சி (License) தேவையெனில், அந்தப் பொருளுக்கு அக்காட்சியைப் பெறுதல்.
- ஒரு திட்டத்தில் அந்நியச் செலாவணியான முதலீட்டுப் பொருளை இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதி அத்தாட்சியைப் பெறுதல்.
- ஒரு திட்டத்தில் அந்நியச் செலாவணியான முதலீட்டுப் பொருளை இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதி அத்தாட்சியைப் பெறுதல்.
- விவசாய நிலத்தில், ஒரு தொழில்துறையை அமைப்பதற்கு மறுபாகுபடுத்துதல் வேண்டும். இதற்கு சிறு நகர திட்டமுறை அலுவலகர், தாசில்தார் மற்றும் துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் போன்றோரை அணுகுதல்.
- தொழில் முனைவோர், தொழிற்பேட்டைக் கூடம் அமைப்பதற்கு சிட்கோ அல்லது சிப்காட்-ஐ அணுகுதல்.
தமிழ்நாடு தொழில் உதவி முகாம்கள்
நிறுவனங்கள் மற்றும் முகவரிகள் |
தொலைபேசி எண் |
தொழில்கள் மற்றும் வர்த்தக இயக்குநர்,
சேப்பாக்கம், சென்னை 600005 |
28548173 |
தமிழ்நாடு மின்சாரக் கழகம் லிமிடெட் |
|
692, எம்ஹெச்யு காம்பளக்ஸ்,
அண்ணாசாலை,
நந்தனம், சென்னை 600 035. |
24320124
24320125 |
தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பு (ITCOT) |
28293986
28293363 |
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ)
சிட்கோ அலுவலக காம்ப்ளக்ஸ்,
பவுல்வெல்ஸ் சாலை, கத்திபாரா ஜங்ஷன்,
சென்னை 600016 |
22341464
22342398 |
மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்)
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை,
சென்னை 600 008 |
28554623
28534625
28554787 |
சிறு தொழில் சேவை நிறுவனங்கள் (SISI)
63/A. GST சாலை,
சென்னை 600 032 |
22341011 |
தமிழ்நாடு ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ),
டிஎன்ஹெச்பி சாப்பிங் காம்ப்ளக்ஸ,்
திருமங்கலம், சென்னை 600 001 |
26154075 |
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்
எண் 100, அண்ணாசாலை,
கிண்டி,
சென்னை 600 0032 |
52085804
52085805
52085806 |
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ)
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை
சென்னை 600 008 |
28554484
28554479
28554480 |
தமிழ்நாடு தொழில் வழிகாட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்க நிறுவனம்,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை
எக்மோர்,
சென்னை 600 008. |
28553856
28553866 |
தீர்மானிக்கப்பட்ட கட்டிடத்தை கட்டும் திட்டத்தினை நிறைவேற்ற உள்ளூர் நிர்வாக அதிகாரிகளை கிராம, நகராட்சி, மாநகராட்சி எம்எம்டிஏ மற்றும் பல போன்றோரை அணுகுதல் வேண்டும்.
தொழிற்சாலை கண்காணிப்பாளரிடம் இந்த அனுமதியைப் பெறவேண்டும்.
மேலும் இந்தச் தொழிற்சாலை பிரிவு மலைப்பிரதேசங்களான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற இடங்களில் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெறுதல் வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிர்வாகப் பொறியியலாளரிடம் மின்வசதி பெற விண்ணப்பப் படிவத்தினை கொடுத்தல் வேண்டும்.
கீழே உள்ள பட்டியலில் கொடுத்துள்ள அதிகாரிகளிடம் தொழில் முனைவோர்கள் அவர்களின் தொழிலைப் பதிவு செய்ய வேண்டும்.
வர்த்தக வரி ஆணையர், மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர், மாவட்ட ஆட்சியாளர், தொழில் அனுமதிக்கும் மத்திய வரி ஊழியர்கள், புதுடெல்லி (சிறு மற்றும் பெரிய அளவு தொழில்களுக்கு) மருந்து தயாரித்து கொடுப்பவர் (மருந்து தயாரிப்பது விற்பனை செய்வது சம்பந்தமான) பயிர்ப் பாதுகாப்பு இயக்குநர், மத்தியப் பாதுகாப்பு மற்றும் பூச்சிக்கொல்லி பகுதி, ஃபரிதாபாத் (பூச்சிக்கொல்லி உற்பத்தி சம்பந்தமாக) உணவு மற்றும் காய்கறி பொருட்களின் இயக்குநர் (பழங்கள், பதனப்படுத்துதல், சம்பந்தமாக) இடம் எப்.பி.ஓ அத்தாட்சி, தமிழ்நாடு.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அத்தாட்சி (மாசற்ற நிலைக்காக)
விண்ணப்பப் படிவத்தினை பதிவு செய்தல்
விசாரணைக்கான கட்டண அமைப்பு
விண்ணப்பப் படிவம்:
கழகத்தின் முதன்மை அலுவலகம் அல்லது கிளை அலுவலகமிடம் இருந்து, தொழில் முனைவோர்கள் விண்ணப்பப் படிவத்தினை இலவசமாகப் பெற்று, தேவையான விபரத்தினை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினை எங்கே கொடுத்தல் வேண்டும்?
திரும்பப் பெற முடியாத பதிவுக் கட்டணமான ரூபாய் 500 உடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கிளை அலுவலகத்தில் கொடுத்தல் வேண்டும்.
விசாரணைக் கட்டணம்
விண்ணப்பப் படிவத்தில் தெரிவித்துள்ள தகவல்களைப் பொருத்து விண்ணப்பமானது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் திரும்பப் பெற முடியாத பதிவுக் கட்டணமானது, TIICன் எதிர்பார்ப்பின் அடிப்படையில் கடன் தொகையைப் பொருத்து அமைகிறது.
கடன் தொகை |
விசாரணை கட்டணம் ரூபாய் |
ஆட்டோ ரிக்சாக்கடன் |
ரூபாய் 250 |
ரூ. 2.00 லட்சத்திற்குள் |
ரூ. 500 |
ரூபாய் 2.00 லட்சம் மற்றும்
ரூபாய் 5.00 லட்சத்துக்குள் |
ரூபாய் 1,000 |
ரூபாய் 5.00 லட்சம் மற்றும்
ரூபாய் 10.00 லட்சத்துக்குள் |
ரூபாய் 2,000 |
ரூபாய் 10.00 லட்சம் மற்றும்
ரூபாய் 25.00 லட்சத்துக்குள் |
ரூபாய் 5,000 |
ரூபாய் 25.00 லட்சம் மற்றும்
ரூபாய் 50.00 லட்சத்துக்குள் |
ரூபாய் 10,000 |
ரூபாய் 50.00 லட்சம் மற்றும்
ரூபாய் 90.00 லட்சத்துக்குள் |
ரூபாய் 20,000 |
ரூபாய் 90.00 லட்சம் மற்றும்
ரூபாய் 150.00 லட்சத்துக்குள் |
ரூபாய் 25,000 |
ரூபாய் 150.00 லட்சம் மற்றும்
ரூபாய் 250.00 லட்சத்துக்குள் |
ரூபாய் 30,000 |
ரூபாய் 250.00 லட்சம் மற்றும்
ரூபாய் 300.00 லட்சத்துக்குள் |
ரூபாய் 35,000 |
ரூபாய் 300.00 லட்சம் மற்றும்
ரூபாய் 800.00 லட்சத்துக்குள் |
0.15 சதவிகித கடனான ரூபாய் 1,00,000 லட்சத்துக்கும் மேலாக உள்ள தொகை |
ரூபாய் 800.00 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூபாய் 2000 லட்சத்துக்குள் |
0.10 சதவிகிதக் கடனான குறைந்தபட்சம் ரூபாய் 1.00 லட்சம் மற்றும் அதிகபட்சம் ரூபாய் 2 லட்சம் உள்ள தொகை. |
ரூபாய் 2000 லட்சத்துக்கு மேல் |
ரூபாய் 5 லட்சம் |
விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய விபரங்கள்
விண்ணப்பத்துடன் திட்டப் பணிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குதல் வேண்டும். கீழே கொடுக்கப்பட்டு உள்ளத் தகவல்களை இதனுடன் இணைத்தல் வேண்டும்.
பொதுத் தகவல்
விசாரணைக் கட்டணத்தின் விபரத்தினைச் செலுத்துதல்
சான்றளிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மேம்படுத்துநர் / இயக்குநர்கள் போன்றோரின் தற்குறிப்பு விபரம் மேலும் இதனுடன் துணைத் தொழில்கள் பற்றிய விபரங்கள் வழங்குதல் வேண்டும். ஆனால் ஏற்கெனவே இருக்கிற நிறுவனத்துக்கு கடந்த 3 வருடங்களின் வேலைக் கணக்கினை ஒப்படைத்தல் போதுமானதாகும். சொத்து மற்றும் கடன் அறிக்கையில் மேம்படுத்துநர் / இயக்குநர்கள் சரியாகக் கையெழுத்து இடவேண்டும். மேலும் மேம்படுத்துநர் அன்னிய நாட்டினை சார்ந்தவராக இருப்பின், இவர்கள் இந்திய சேமிப்பு வங்கி (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா) இடம் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் மற்றும் துணையாளர் போன்றோரின் சம்பந்தத்தின் அடிப்படையில் கொள்கைகளைக் கொண்ட வங்கியாளர்களின் பெயர்கள், SSI பதிவு / SIA பதிவு / தொழில்களின் அத்தாட்சி படிவத்தின் நகல்களை இணைத்தல் வேண்டும்.
அரசாங்கம் / உள்ளூர் அதிகாரியிடம் பெற்ற வெவ்வேறு அனுமதிகள், அங்கீகாரம் மற்றும் அத்தாட்சி படிவத்தின் நகல்களும் தேவைப்படுகிறது. கட்டிடம் கட்டுவதற்கான விரிவான கணக்கீடு மற்றும் கட்டிடத்திட்டத்தின் அனுமதி பற்றிய தகவல்களை அளித்தல்.
விற்பனை செய்தல் / குத்தகை நகல், கட்டிடத்திட்டத்தின் வடிவமைப்பு நகல்.
உற்பத்தியின் விரிவாக்க செயல்முறைத் தகவல்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான செயல்பணி செயல்கள் செயல்வழிப்படம். மேற்கோள் காட்டப்பட்ட இயந்திரச் சாதனங்களை வாங்குவது மற்றும் பல்வேறு போட்டி மிகுந்த மேற்கோள் காட்டப்பட்ட இயந்திரச் சாதனங்களில் ஒன்றினைத் தேர்வு செய்வதற்கானக் காரணங்கள்.
விலை ஆதாரத்துடன் மூலப்பொருட்களின் கடிதங்கள், விற்பனை கருத்தாய்வு அறிக்கை மற்றும் விற்பனையுடன் கூடிய கடிதங்கள்.
அடிப்படைத் தேவைகளான நீர், மின்சாரம், எரிபொருள் / எரிவாயு தொழிலாளர் மற்றும் கழிவுநீரை நேர்த்தியான முறையில் வெளியேற்றம் போன்றவற்றின் விபரங்கள்.
உரிமையாளர் / பங்குதாரர்கள் / இயக்குநர்களின், கடந்த மூன்று வருடங்களுக்குரிய வருமானவரி / சொத்து வரி செலுத்தியதன் நகல்கள் ஆனால் இவர்கள் மதிப்பிடாத போது தீர்மான அறிக்கையின் விளைவினை சமர்ப்பித்தல் தொழில்ப் பிரிவானது சிட்கோ / சிப்காட் / அரசாங்க தொழிற்பேட்டையின் இடத்தில் இடம் பெற்றிருக்கும் போது, இடம் பெற்றிருப்பதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் கூடிக கடிதத்தின் நகலைச் சமர்ப்பித்தல், வெவ்வேறு அனுமானங்களான இலாப நோக்கு திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் ஆதாரங்களை உருவாக்குதல், விண்ணப்பிக்கும் இயக்குநர், பங்குதாரர், உரிமையாளர், TIIC துறையுடன் சம்பந்தப்பட்டவராக இருந்தால், அந்தத் தகவல்களையும் வழங்குதல் வேண்டும்.
முதலீட்டுப் பணியின் நிதி மற்றும் இதன் மதிப்பீடு பற்றிய ஏற்பாடு செய்தல்.
துணை ஈடு பற்றியத் தகவல்கள்
வரப்போகும் வாடிக்கையாளர்களைப் பொறுத்து விற்பனை விலையின் ஆதாரம்
தவணை முறையில் வந்தடையும் கொள்ளளவின் அடிப்படை
கூட்டு வேலை / சிறப்புத் துறை அறிவு / காவல் ஒப்பந்தம் போன்றவை ஏதேனும் இருப்பின் அதனுடைய நகல் ஒருவருடன் இணைந்து வேலை செய்பவர் / ஆலோசனையாளரின் தற்குறிப்பு பற்றியத் தகவல் மற்றும் வேலைகள் / பணித் திட்டத்தினைச் செயலாற்றும் பட்டியல் போன்றவற்றின் நகல்.
சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகைத் தொழில்களுக்கு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து மாசு கட்டுபாட்டு சான்றளிப்பினைப் பெறுதல்.
கூட்டுத் தொழில் நிறுவனம்.
கூட்டுத் தொழிலின் செயல் மற்றும் நிறுவனப் பதிவாளரிடம் இருந்து நிறுவனப் பதிவு சான்றளிப்பினைப் பெறுதல்.
வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள்
நிறுவனங்கள் பதிவாளரிடம் இருந்து, இணை நிறுவனத்தின் உத்தரவுக்கடிதம் மற்றும் செய்தி தொகுப்புக்கு ஐக்கிய சான்றளிப்பினைப் பெறுதல்.
கூட்டுறவு சங்கங்கள்
சமுதாயம் / கழகத்தின் துணை விதி
ஐக்கிய நிறுவனம்
நிறுவனத்தின் தெளிவான வரலாறு / விளக்கங்கள்
வங்கியாளர்களின் பெயர் மற்றும் முகவரி
கடந்த மூன்று வருடங்களுக்கான இருப்பு நிலைக்குறிப்பு மற்றும் இலாப நட்டக் குறிப்பின் கணக்கு TIIC / வங்கிகள் போன்றவற்றிடம் உதவிக் கிடைக்குமெனில் அதன் விபரம்.
இயந்திரச் சாதனங்களின் இறக்குமதி (புதிய மற்றும் உபயோகப்படுத்தியது)
புதியதாக இறக்குமதி செய்யும் இயந்திரச் சாதனங்களுக்காக
இறக்குமதி வரிக்கான ஆதாரம்
இறக்குமதி அத்தாட்சியின் நகல்
ஓஜிஎல்ன் அடிப்படையில் இயந்திரச் சாதனங்கள் இறக்குமதி செய்யும் போது, அதற்கான ஆதாரம்
பணித் திட்டத்தினை மதிப்பிடல்
TIIC ஆனது ஒரு திட்டத்தினை தேர்வு செய்வதற்கு முன் தொழில்நுட்ப சாத்தியக் கூறுகளையும் மற்றும் பொருளாதார நிலையையும் மதிப்பீடு செய்கிறது.
கொடுக்கப்படும் கடன்களின் அடிப்படையில் திட்டமானது இலாபநோக்குடன் வளர்ச்சியடையும் மேலும் விண்ணப்பதாரர்கள் TIICன் வியாபார நோக்கம் மற்றும் வர்த்தகத்தின் தொடர்ந்த நிலையில் திருப்தி அடைந்துள்ளனர்.
வியாபாரக் கருத்தாய்வு (அ) வெளியிட்டுள்ள தொகுப்புகளான உற்பத்திப் பொருட்களின் வியாபார ஆற்றல், தேவை மற்றும் வினியோகத்தின் தன்மை மற்றும் புகழ் பெற்ற நிறுவனத்துடன் வியாபார ரீதியாக வைக்கப்பட்டு இணைப்புக் கடிதங்கள் போன்றவை வியாபாரத்தின் தனித்தன்மை / ஆற்றலை அறிய உதவுகிறது.
கடன் நேரத்தில் கணக்கிடப்படும் உற்பத்திச் செலவு, உற்பத்தி வரவு மற்றும் பணப்பாய்வு அறிக்கை போன்ற தகவல்கள் மூலம் முதலீட்டை திரும்பப் பெறுவதற்கான கால நிலை, கடனை ஈடுசெய்யும் விகிதம் மற்றும் இலாப நட்டமற்ற உற்பத்தி நிலை போன்றவற்றினை அறிந்து பணித்திட்டத்தின் நிதி நிலையானது தெரிந்து கொள்ளப்படுகிறது.
பாதுகாப்பு பத்திரங்கள் / ஆவணங்கள்
தொழில் பகுதியின் நிலையான சொத்துக்களை (நிலம். கட்டிடம், இயந்திரத் தொகுதி மற்றும் இயந்திரச் சாதனங்கள்) பொருத்து கழகமானது கட்டண விதியை வைத்து நிதி உதவியை அனுமதிக்கிறது. பதிவு பத்திர (அ) அசல் பத்திர அடமானத்தின் அடிப்படையில் கட்டண விதியானது நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் துணை நிதிக்காக மற்ற நிதி நிறுவனங்கள் / வங்கிகள் போன்றவற்றை அணுகும் போது, தொழில் அடிப்படையில் கட்டண விதி ஆனது நிர்ணயிக்கப்படுகிறது.
கழகமானது கட்டண விதியை வைத்து நிதி உதவியை அனுமதிக்கிறது. பதிவுப் பத்திர (அ) அசல் பத்தில அடமானத்தின் அடிப்படையில் கட்டண விதியானது நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் துணை நிதிக்காக மற்ற நிதி நிறுவனங்கள் / வங்கிகள் போன்றவற்றை அணுகும் போது, தொழில் நிறுவனத்தின் பரி பாசுவின் அடிப்படையில் கட்டண விதியானது நிர்ணயிக்கப்படுகிறது.
கழகமானது, இயந்திரச் சாதனங்களை வாங்குவதற்கான கடன்களுக்கு இயந்திர அடமானத்தினை அனுமதிக்கிறது. மேலும் TIIC ஆனது வாகனங்களின் பதிவுச் சான்றிதழினை பொருத்து போக்குவரத்துக் கடனைத் தருகிறது.
சட்டரீதியாக ஆவணங்கள்
பாதுகாப்புக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்திரங்களைப் பெறுதல் வேண்டும்.
- பதிவு பத்திர அடமானம் (registered motgage)
- அசல் பத்திர அடமானம் (equitable mortgage)
- ஒப்பந்த பத்திரம் (Deed of undertaking)
- அடமானப் பத்திரம் (Deed of hypothecation)
- தனிநபர் உத்திரவாதம் (Personal Guarantee)
- பதலீடு உரிமைப் பத்திரம் (Deed of power of attorney)
சிறுதொழில் பிரிவுக்கு ரூபாய் 50,000மானத முதற் பருவக்கடனாக கொடுக்கப்படுகிறது மற்றும் பதிவுப் பத்திர அடமானத்தின் பேரில் ரூபாய் 1,00,000மும் மீதியுள்ள கடன் தொகையானது அசல் பத்திர அடமானத்தின் அடிப்படையிலும் தரப்படுகிறது.
பட்டுவாடா வழிகள்
நிலத்தின் பட்டுவாடா:
பட்டுவாடாவின் குறிக்கோள் வழிகள் யாதெனில், பொறியாளர்கள் குழு மதிப்பீடு (அ) கணக்கு தணிக்கையாளரின் சான்றளிப்பு (அ) பத்திரங்களின் மதிப்பு (அ) வழிகாட்டுகளின் மதிப்பு போன்றவையாகும்.
இயந்திரத் தொகுதி மற்றும் சாதனங்களின் பட்டுவாடா
இயந்திரத் தொகுதி மற்றும் சாதனங்களின் பட்டுவாடா சாதனங்களானது கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகர்களிடம் இருந்து வாங்கப்படுகிறது. இயந்திரச் சாதனங்களை வாங்குவதற்காக வாங்குபவர்கள், விநியோர்களிடம் முற்பணம் செலுத்தி உறுதி செய்யப்படுகிறது. விநியோரிகளிடம் இயந்திரச் சாதனங்களை தருமாறு, வாங்குபவர்கள், ஒரு கோரிக்கை கடிதமானது தரப்படுகிறது. TIIC ஆனது வாங்குபவர்களின் தேவையை மதிப்பீடு செய்யப்பட்டு பட்டுவாடாவைத் தருகிறது.
மானிய வெளியீடு
செயல் ஊக்கத் திட்டத்தினைப் பொருத்தே உள்ளது. இரண்டாம் கட்டண விதி மூலம் வங்கிகளிடம் இருந்து வேலைக்கான முதலீட்டு நிதி உதவியைப் பெறுதல்.
கட்டிடங்களைக் கட்டியதற்கான தொகையைப் பொறியியல் குழு மூலம் கண்காணித்து மற்றும் மதிப்பீடு செய்து தொகையைத் திரும்பப் பெற செய்யுமாறு செய்யப்படுகிறது.
நிலையான சொத்துக்களின் இரண்டாம் கட்டண விதியின் அடிப்படையில், வங்கியானது தவணையற்ற முறையில் வேலைக்கான முதலீட்டு தொகையைக் கொடுக்கிறது.
காப்புறுதி பாதுகாப்பு
சொத்துக்களின் காப்புறுதி பாதுகாப்பு உருவாக்குவது அதிகாரப்பூர்வமான கடமை ஆகும். மேலும் இது உயர்ந்தப் பொறியாளர்களின் மதிப்பு அல்லது கட்டிடங்களின் கணக்கு புத்தக மதிப்பு மற்றும் போலியான (அ) இரண்டாம் கட்ட இயந்திரச் சாதனங்களைப் பொருத்தே அமைகிறது. புதிய இயந்திரச் சாதனங்களின் காப்புறுதி பாதுகாப்பானது விவரப் பட்டியலின் தாக்கத்தைப் பொருத்து உள்ளது.
ஆதாரம் : http://www.tiic.org
|