Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

உழவர் சந்தை

உழவர் சந்தை / விவசாயிகள் விற்பனைக் கூடம்

முன்னுரை:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மை மிக அவசியமாகும். மேலும் வேளாண்மை, பொருளாதார முறைக்கு முதுகெலும்பு ஆகும். இந்தியா ஒரு வேளாண்மை நாடு. இந்திய பொருளாதாரமானது வேளாண்மை உற்பத்தியை பொறுத்துள்ளது. இந்தியாவின் தேசிய வருமானத்திற்க வேளாண்மையின் பங்கு மிக அவசியமாகும். பொது மக்களின் உணவு தேவைகளை வேளாண்மையானது பூர்த்தி செய்கிறது. வேளாண்மையின் மூலம் கால்நடைக்கு தீவனமானது பெறப்படுகிறது.

வேளாண்மை பகுதியில் சந்தை / விற்பனை கூடமானது வேளாண்மை விளைபொருட்களை, நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்கிறது. பெருமடபாலும் விவசாயிகள் உற்பத்தி பொருட்களை கிாமப்புற சந்தை, நியாய விலை கடை, கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றின் மூலம் விற்பனை செய்கின்றனர். மேலே கூறப்பட்ட வேளாண்மை விளை பொருள் விற்பனையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களிடம் இருந்து இடைத்தரகர்கள் வசூலிக்கின்றனர். இவ்வகை இடைத்தரகர்கள் நீக்குவதற்கு தமிழ்நாடு அரசாங்கமானது 1999ல் “உழவர் சந்தை” என்ற புதிய செயல்பாட்டினை நடைமுறை படுத்தியுள்ளது.

பொதுவாக, இடைத்தரகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள், வேளாண்மை விளை பொருட்களை விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் வாங்குகின்றனர். இதுமட்டுமல்லாமல் வியாபாரம் செய்வதற்கான தரகு கட்டணத்தையும் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கின்றனர். விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி, சில்லறை விற்பனையாளர்களிடம் அதிக விலைக்கு விற்று, சில்லறை விற்பனையாளர்க்ள, நுகர்வோர்களுக்கு அதிக விலையில் விற்கின்றனர். ஆனால் விவசாயிகள்.

விளபொருட்களுக்கு குறைந்த தொகையையே பெறுகின்றனர் மற்றும் நுகர்வோர்கள் அதிக தொகை கொடுத்து வாங்குகின்றனர். ஆகையால் தான் தமிழ்நாடு அரசாங்கமானது விவசாயிகள், நுகர்வோர்கள் போன்றோரின் நன்மைக்காக “உழவர் சந்தை” தொடங்கியது.

குறிக்கோள்:

  • விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையே நேரடி தொடர்பு வசதி
  • இடைத்தரகர்கள் இடையீட்டு இல்லாமல் காய்கறிகள் மற்றும் பழங்களை நியாமான விலையில் தருதல்
  • நுகர்வோர்களுக்கு சரியான அளவுகோல் மூலம் அளவிட்டு தருதல்
  • விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு முழுதிருப்தியை அளித்தில்
  • விவசாயிகளின் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு, மொத்த விற்பனை விலையை விட தெிகமான விலையை நிர்ணயித்தல்
  •  விவசாயிகளின் காய்கறிகள் மற்றும் பழங்களை நுகர்வோர்களுக்கு சில்லறை விற்பனையைவிட குறைவான விலையில் தருதல்
  • விவசாயிகளுக்கு, உழவர் சந்தையானது தொழில்நுட்ப தகவல் தொடர்பு மையமாக செயல்படுதல்
  • விவசாயிகளுக்கு இது ஓரு தொழில்நுட்ப பயிற்சி மையமாக செயல்படுகிறது
  • சில உழவர் சந்தைகளில் விதைகள் மற்றும் பிற இடுபொருட்களை தருதல்.

முக்கிய சிறப்பியல்புகள்:
விவசாயிகள் மற்றும் அலுவலக பிரதி மூலம் செயல்படும் குழுவானது தினமும், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றிக்கு விலையை சராசரியாக மொத்த விற்பனை விலையை விட 20 சதவிகிதம் அதிகமாகவும் சில்லறை விற்பனை விலையை விட 15 சதவிகிதம் குறைவாகவும் நிர்ணயிக்கிறது.

  • காய்கறி மற்றும் பழங்களின் தினசரி விலையானது சந்தையின் முன் வைக்கப்பட்டு இருக்கும் பலவகையில் குறிப்பிடப்படுகிறது, நிர்ணயிக்க விலையில் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுபிறதா என்பதனை துறையின் அலுவலர்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
  • கிராமப்புற காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு புகைப்பட அடையாள அட்டைகளை வழங்குகிறது.
  • முதலில் விளைபொருட்களை கொண்டுவருவதன் பெயரில் கடைகளானது இலவசமாக விவசாயிகளுக்கு தரப்படுகிறது. நிரந்தரமாக விவசாயிகளுக்கு கடைகளானது தரப்படுவதில்லை.
  • சில பகுதிகளின் ஆவின், தேயிலை கடைகளானது அமைக்கப்பட்டு உள்ளது.
  • கிராமத்தில் இருந்து உழவர் சந்தைகளுக்கு எடுத்து வரும் எவ்வித விளைபொருட்களின் முட்டைகளுக்கும், கொடுக்கப்பட்ட சிறப்பு போக்குவரத்தில் கட்டணம் இல்லை.
  • மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவு சங்கங்கள், மலைபயிர் காய்கறிகளை, உழவர் சந்தைகள் மூலம் விற்பனை
  • எடை அளவு கருவியை இலவசமாக விவசாயிகளுக்கு தருதல் மற்றும் விற்பனை முடிந்தவுடன் திருப்பு கொடுத்தல் வேண்டும்
  • ஆரோக்கிய / சுத்தமான சூழ்நிலையை பேணுதல், சில பகுதிகளில் காய்கறி வீண் பொருட்களை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்
  • சந்தையின் பாதுகாப்பிற்கு முன்னாள் இராணுவத்தினர் /  தனியார் பாதுகாப்பு முகவரை பயன்படுத்திக் கொள்ளுதல்
  • தொலைபேசி வசதி, வாகனம் நிறுத்துமிடம், சிற்றுண்டி சாலை, கழிப்பிட வசதிகளை தருதல்
  • வாரத்தின் அனைத்து நாட்களிலும் உழவர் சந்தை செயல்படுதல்
  • உழவர் சந்தையில் தண்ணீர் வசதி இருத்தல்
  • விற்க்கப்படாத விளைபொருட்களை, அடுத்த நாள் விற்பனைக்காக சேமிப்பு வசதிகளை தருதல்.

அமைப்பு:
உழவர் சந்தை அமைக்கப்படும் இடம் மிகமுக்கியமானதாகும். நுகர்வோர்கள் அனுகுவதற்கு இலகுவான பகுதியாக இருத்தல் வேண்டும். நுகர்வோர்களை மையமாக கொண்டு இடத்தினை தேர்தெடுக்கும் போது, அதிகமான நுகர்வோர்கள் பயன்பெறுகின்றனர். முதல் உழவர் சந்தையானது 14.11.1999ல் மதுரையிலும், 100வது உழவர் சந்தையானது 14.11.2000ல் பல்லாக்கு பகுதியிலும் அமைக்கப்பட்டது. 103வது உழவர் சந்தையானது 14.11.1999 மற்றும் 2005க்கு இடையே 28 உழவர் சந்தைகள் மூடப்பட்டது. ஆனால் ஜீன் 2006ல் மீண்டும் திறக்கப்பட்டு, ரூபாய் 42.00 லட்ச தொகையில் 103 உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டது. தற்போது 103 உழவர் சந்தைகள் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அனைத்து உழவர் சந்தைகளும் வேளாண்மை விளைபொருள் விற்பனை துறைமூலம் செயல் படுத்தப்படுகிறது. மேலும் வேளாண்மை விற்பனை கூடம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் அலுவலர்கள் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர், உழவர் சந்தையின் கண்காணிப்பாளராக செயல்படுகின்றனர். மேலும் இந்த திட்டமானது வேளாண்மை விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள், சென்னை - 32ன் மூலம் நடைமுறை படுத்தப்படுகிறது.

உழவர் சந்தையின் அலுவலகர்கள்:

வ.எண்

அலுவலகர்கள் பெயர்

பதவி வரிசை

எண்ணிக்கை

1.

உழவர் சந்தை, நிர்வாக அதிகாரி

வேளாண்மை அதிகாரி

1

2.

உழவர் சந்தை, துணை நிர்வாக அதிகாரி

துணை வேளாண்மை அதிகாரி

3

3.

உழவர் சந்தை, துணை நிர்வாக அதிகாரி

துணை வேளாண்மை அதிகாரி (தோட்டக்கலை)

1

4.

காவலாளி

ஒரு மாதத்திற்கு ரூபாய் 1500/-க்கு நியமிக்கப்படும் தனியார் பாதுகாப்பு முகவர்கள்

3

5.

தோட்டி

அனைத்தையும் இணைத்து @ ரூபாய் 1500/மாதம்

1

6.

சந்தை பணியாளர்கள்

மக்கள் நல பணியாளர்கள்

2

 

 

மொத்தம்

11

        

உழவர் சந்தையின் அலுவலகர்கள் ஆற்றும் பணிகள்/கடமைகள்:

வ.எண்

அலுவலர்கள் பெயர்

கடமைகள்

1.

உழவர் சந்தை, நிர்வாக அதிகாரி

  • மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றின் விலையை பொருத்து விலையை நிர்ணயித்தல்.
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளை கண்காணித்தல்
  • விற்பனை முறைகளை கண்காணித்தல்
  • வாகனங்களுக்கான கட்டணங்களை வசூலித்தல்
  • விவசாயிகளின் அடையாள அட்டையை சரிபார்த்தல்
  • நிர்வாகம் நிர்ணயித்த விலையை பொருத்து செயல்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையைமேற்பார்வையிடுதல்
  • உழவர் சந்தை நிர்வாகத்துடன் அனைத்து பணியாட்களையும் தொடர்பு படுத்துதல்.

2.

உழவர் சந்தை, துணை நிர்வாக அதிகாரி (1)

உழவர் சந்தை, துணை நிர்வாக அதிகாரி (2)

 

உழவர் சந்தை, துணை நிர்வாக அதிகாரி (3)

  • விவசாயிகளின் அடையாள அட்டையை சரிபார்த்து அவர்களுக்கு கடைகளை ஒதுக்குதல்
  • மதிப்பீடுதலுக்கு எடைகற்கள், எடை தராசினை விவசாயிகளுக்கு கொடுத்து மீண்டும் பெறுதல்
  • பதிவினை பராமரித்தல்

1. தினசரி வரும் காய்கறிகளை பதிவு செய்வது மற்றும் தினசரி அறிக்கையை தயாரிப்பது.

3.

உழவர் சந்தை, துணை நிர்வாக அதிகாரி (தோட்டக்கலை)

1. பயிர் உற்பத்தி தொழில்நுட்பத்தினை பரப்புவதன் மூலம் காய்கறி உற்பத்தியை அதிகரித்தல்

4.

காவலாளி (1)

காவலாளி (2)

காவலாளி (3)

1. இரவு நேரத்தில் உழவர் சந்தையை காவல காத்தல்
2.பகல் நேரத்தில் உழவர் சந்தையை காவல காத்தல்
3.வாகனங்களை ஒழுங்குபடுத்துதல்
4. விவசாயிகளை ஒழுங்குபடுத்துதல்

5.

தோட்டி

  • உழவர் சந்தையை சுத்தம் செய்தல்
  • கழிவறையை சுத்தம் செய்தல்

6.

சந்தை பணியாளர்கள்

  • பதிவு செய்யும் போது அடையாள அட்டையை சரிபார்த்தல்
  • காட்சி பலகையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை எழுதுதல்
  • கடைகளின் மீதழுள்ள பொருளை எடுத்துச் செல்லுதல், திரும்பித் தருதல்.

 

வேளாண்மை விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண்மை சார் தொழில் துறையின் குழுக்கள் மூலம் உழவர் சந்தையானது பராமரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சந்தை குழு உதவியாளர். உழவர் சந்தையின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போது பணிக்கான கூடுதல் தொகையை பெறுகின்றனர். இந்த ஒருங்கிணைப்பாளர்கள், உழவர் சந்தையின் தினசரி செயல் முறைகள், விலை நிர்ணயித்தல் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். மேலும் இது மட்டும் அல்லாமல், வேளாண்மை விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண்மை சார் தொழில் துறையின் உறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப  மையத்தின் வேளாண்மை அதிகாரி மற்றும் துணை வேளாண்மை அதிகாரிகளையையும், மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் வேளாண்மை அதிகாரி மற்றும் துணை வேளாண்மை அதிகாரிகளையும் உழவர் சந்தைக்காக பயன்படுத்தப் படுகின்றது.

விவசாயிகள் சந்தையில் கொடுக்கப்படும வசதிகள்

புகைப்பட அடையாள அட்டை
குழுக்களின் பரிந்துரைப்பட், விவசாயிகளின் புகைப்படம் மற்றும் விவசாயிகள்/நியமனம் பெற்றவர்களின் கிராமத்தின் பெயர், அறிக்கை எண், அவர்களின் சொந்த நில விபரம் மற்றும் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் விபரம் போன்றவற்றை உள்ளடக்கிய அடையாள அட்டையை விவசாயிகளுக்கு கொடுக்குப் படுகிறது. ஆறு மாத காலத்திற்கு ஒருமுறை இந்த அடையாள அட்டையை புதுப்பித்தல் மிக அவசியமானது.

போக்குவரத்து வசதி:
உழவர் சந்தையில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் பொருட்களை எடுத்துச்செல்வதற்கு மற்றும் திரும்பி கொண்டு செல்வதற்கு, மாநில போக்குவரத்து துறையுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.

கடையை ஒதுக்குதல்:
முதலில் வந்தவர்களுக்கு முதலிடம் அல்லது குலுக்கல் முறையின் மூலம் விவசாயிகளுக்கு கடைகளை ஒதுக்கதல், ஆனால் விவசாயிகளுக்கு நிரந்திரமாக ஒதுக்குவதில்லை. இதற்காக எவ்வித கட்டணத்தையும் விவசாயிகளிடம் இருந்து வசூலிப்பது இல்லை.

விலையை நிர்ணயித்தல்:
காலை 7.30 முதல் 8.00 மணிக்குள் தொலைப்பிரதியின் மூலம் மொத்த விற்பனை விலையை பொருத்து சந்தை குழுக்கள் ஆனது மொத்த விற்பனை விலையை விட 20 - 25 சதவிகிதம் அதிகமாகவும், உள்ளூர் சிலிலறை விற்பனை விலையை விட குறைவாகவும் காய்கறிகளுக்கு விலையை நிர்ணயிக்கின்றனர்.

பொது அறிக்கை முறை:
பொது அறிக்கை முறையின் மூலம் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலையை அறிவிப்பு செய்வதன் பலனாக விவசாயிகள், நுகர்வோர்கள் காய்கறிகளுக்கான கட்டணத்தை தெரிந்து கொள்கின்றனர்.

மதிப்பீடும் எடை கருவியை தருதல்:
எப்போது விவசாயிகள் சந்தையில் நுழையும் போது, அவர்களின் கிராமம் மற்றும் காய்கறிகளின் அளவினை பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள எண்ணை தருகின்றனர். இந்த எண்ணின் அடிப்படையில் எடைபோடுவதற்கான எடை கருவியினையை எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்குகின்றனர். விவசாயிகள் விற்பனையை முடித்தவுடன் உடைக் கருவியை ஒப்படைத்தல் மிக அவசியமானதாகும்.

மற்ற வசதிகள்:
குடிநீர் வசதிகள்
கழிவறை வசதிகள்
சிற்றுண்டி சாலை வசதிகள்
சாக்கடை வசதிகள்
அழுகிய பழங்கள், காய்கறிகளை சேகரிப்பதற்கு பளாஸ்டிக் பெட்டிகள்
கூடுதல் வசதிகளான தகவல் தொடர்புக்கு கணினி, புதிய தலப்பின விதைகள், நாற்றுகள், இயற்கை வழி வேளாண்மை நுட்பம், மண்புழு வளர்ப்பு செய்முறை மற்றும் அறுவடை பாதுகாப்பு பயிற்சிகள் போன்றவற்றை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 25 உழவர் சந்தைகளில் கணினி மூலம் விநியோகம் நடைபெறுகிறது.

ஆதாரம்:
Marketing infrastructure and agricultural marketing reforms.
http:// agmarket.nic.in/amrscheme/rythu_bazarmodel.htm.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015