Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: உயிர் எரிபொருள்

பயோ டீசல் உற்பத்திக்கான சாதனம்

பயன்

:

தாவர எண்ணெய்களிலிருந்து பயோ டீசல் தயாரிக்கலாம்.

திறன்

:

நாளொன்றுக்கு 250 லிட்டர் பயோடடீசல்

விலை

:

ரூபாய் 150000/-

அமைப்பு

:

காட்டாமணக்கு எண்ணெயிலிருந்து டீசலுக்கு நிகரான பயோ  டீசல் என்னும் எரிதிரவத்தை உற்பத்தி  செய்யலாம். இதில் காட்டாமணக்கு எண்ணெயானது ஆல்கஹாலுடன் கலக்கப்பட்டு, வினையூக்கிகள் சேர்க்கப்பட்டு குறிப்பிட்ட கால அளவுக்கு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினை கலனில் நன்றாக கலக்கப்படுகிறது. அப்பொழுது நடைபெறும் வேதிவினைகள் மூலம் பயோடீசல் மற்றும் கிளிசதால் கலவை உருவாகிறது. இக்கலவையானது சுத்திகரிக்கப்பட்டு பயோ டீசல் பெறப்படுகிறது. இவ்வமைப்பில் வெப்பப்படுத்துதல், கலக்குதல், சுத்திகரித்தல் முதலான பல வினைகளுக்குத் தேவையான கலன்கள் உள்ளன.

சிறப்பு

:

ஒரு லிட்டர் பயோ டீசலுக்கு ஆகும் உற்பத்தி செலவானது சுமார் 3 ரூபாய் (எண்ணெயின் தவிர்த்து)
250 லிட்டர் பயோடீசல் தயாரிப்பிற்கு தேவைப்படும் விளைநிலத்தின் அளவு 25 எக்டர்
பெறப்படும் உப பொருளான 55 கிலோ கிளிசரால் பிற வேதிப்பொருள் உற்பத்தியில் மூலப்பொருளாகவும், சோப்பு தயாரிப்பிலும் பயன்படுகிறது.

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021