animal husbandry
கால்நடை பராமரிப்பு :: சந்தைப்படுத்தல் முதல் பக்கம்

கோழி சந்தைப்படுத்தல்

சந்தை வழிமுறைகள் :

  • உற்பத்தியாளர் – நுகர்வோர்
  • உற்பத்தியாளர் – சில்லரை விற்பனையாளர் – நுகர்வோர்
  • உற்பத்தியாளர் – மொத்த விற்பனையாளர் – சில்லரை விற்பனையாளர் – நுகர்வோர்
  • உற்பத்தியாளர் – கூட்டுறவு சங்கம் – மொத்த விற்பனையாளர் – சில்லரை விற்பனையாளர் - நுகர்வோர்

மார்க்கெட்டிங் - தொகையீட்டல் :

• ஓருங்கிணைப்பு என்பது, குறிப்பிட்ட பொருள் அல்லது சார்பு பொருள் உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் சங்கம்,ஓருங்கிணைப்பு மற்றும் கூட்டு.

• தற்போது வளர்ந்து வரும் நாடுகளில் உற்பத்தியாளார் முதல் நுகர்வோர் வரை கோழி வளர்ப்பு என்பது ஓருங்கிணைப்பு நடவடிக்கையாகவே உள்ளது. ஓவ்வொரு நிலை அல்லது பகுதி மற்ற நிலைகளில் தொடர்புடையதாக உள்ளது.

• அனைத்து நடவடிக்கைகளையும் ஓருங்கிணைப்பாளர் ஓருங்கிணைப்பார்.இவர் பதப்படுத்தி, குஞ்சுப் பொரிப்பகம் மற்றும் தீவனம் அரைக்கும் ஆலையின் உரிமையாளர்.

• ஓவ்வொரு வளர்ந்த நாடுகளிலும் சில ஓருங்கிணைப்பாளர்களோ உள்ளனர் இவர்கள் இந்நாடுகளில் உள்ள அனைத்து கோழி உற்பத்தியை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பர்.

• கோழி விவசாயிகள் ஒப்பந்த விவசாயிகளாகவே இருப்பர், இவர்கள் ஓருங்கிணைப்பாளரிடம் முட்டை, கறி கோழி மற்றும் வான்கோழி உற்பத்திக்கான தரகு பணத்தை பெற்றுக்கொள்வர்.விவசாயிகள் உரிமையாளர்கள் அல்ல ஓருங்கிணைப்பாளர்களே உண்மையான உரிமையாளர்கள்

அரசு நிறுவனங்கள்:

1.வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) – http://www.apeda.gov.in

வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம், இந்திய அரசு,
NCUI கட்டிடம் 3, ஸ்ரீ நிறுவனப் பகுதி,
ஆகஸ்ட் கிராந்தி மார்க், புது தில்லி - 110 016
தொலைபேசி : 91-11-26513204, 26514572, 26534186
தொலைநகலி : 91-11-26526187
மின்னஞ்சல் : headq@(apeda.gov.in)

ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் (EIC) மற்றும் ஏற்றுமதி ஆய்வு முகமைhttp://www.eicindia.gov.in

2. வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல்http://dgft.gov.in/

வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல்
வர்த்தக துறை
இந்திய அரசு
அறை 008, H-விங், உத்யோக் பவன்
புது தில்லி – 110 011
இணையதளம் : http://dgft.gov.in

அரசு அல்லாத நிறுவனங்கள்:

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு

  • உலகின் மிகப்பெரிய கோழி விவசாயிகள் சங்கம் – 25,000 முட்டை கோழி விவசாயிகள்.
  • விலை அறிவிப்பு – திங்கள், வியாழன் மற்றும் சனி.
  • முட்டை இருப்பு அளவை கண்காணித்தல்.
  • Agrocorpex இந்தியா லிமிடெட் மூலம் சந்தையில் தலையீடு.
  • ஏற்றுமதி ஊக்குவிப்பு.
  • முட்டை நுகர்வு ஊக்குவிக்க.

கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு

  • தினசரி விலை பொருத்துதல்
  • முக்கியமாக தமிழகத்தில் இருந்து கேரளா சந்தைக்கு.
  • தமிழகத்திற்கு தேவை அடிப்படையில் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் விலை நிர்ணைம் செய்கின்றனர்.
  • உள்நாட்டு சந்தையில் 90% கோழிகள் உயிருடன் சந்தைப்டுத்தப்படுகின்றன.
  • 2-5% ஏற்றுமதி.
  • 2-5% உள்ளூர் இறைச்சி தயாரிப்புகள்.

கோழி விற்பனை கூட்டுறவு சங்கம்

அனைத்து இந்திய கோழி விவசாயிகள் விற்பனை கூட்டுறவு லிமிடெட்.,
16 / ஏ, எம் வி எல் ஹவுஸ்,
நிசார்க் மங்கல் கார்யாலையா சந்தை யார்டு அருகில்,
புனே, மகாராஷ்டிரா - 411037, இந்தியா.
தொலைபேசி: 020 - 4269414 / 4269623

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15