தவேப வேளாண் இணைய தளம் :: வேளாண் தொழில் நுட்பதகவல் மையம்

அறிமுகம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், விவசாய பெருமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தொழில்நுட்ப பரிமாற்றத்தில் புதிய யுக்திகள் என்ற பகுதியில் தேசிய வேளாண் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பல முதலீடுகளை வகுத்து பல திட்டங்களை தேசிய அளவிலும் செய்து அதில் பணியாற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளித்தும் தனியார் நிறுவனங்களுடன் பணியாற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யப்பட்ட முதலீடுகளில் ஒன்றாக வேளாண் தகவல் தொழில்நுட்ப மையம் 40 இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிறுவனங்கள் மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களிலும் நிறுவப்பட்டு ஒற்றைச் சாளர முறையில் உழவர்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் தகவல்  தொழில்நுட்ப மையம்

த.நா.வே.ப-ன் வேளாண் தகவல் தொழில்நுட்ப மையம் 2002 - ஆம் ஆண்டு தேசிய வேளாண் தொழில் நுட்ப திட்டத்தின் மூலம் விரிவாக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் நிறுவப்பட்டது.

இம்மையம் வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதுடன், விதைகள், பயிர், உரங்கள் போன்ற உள்ளீட்டு பொருட்களையும், மண்ணை சார்ந்த அறிவுரைகளையும் உழவர்கள் பலன் பெரும் வகையில் ஒற்றைச் சாளர முறையில் வழங்கி வருகின்றது.

இந்த மையம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இடையில் ஒரு பாலமாக விளங்க வழிவகை செய்து வருகின்றது.

நோக்கங்கள்

  • வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் ஒற்றைச் சாளர முறையில் செயல்படுதல்
  • வேளாண்தொழில் நுட்பங்கள் மற்றும் பண்ணை சார்ந்த தகவல்களை உழவர்களுக்கு வழங்குதல்
  •  வயல்வெளி பிரச்சனைகளுக்கு ஆய்வு மற்றும் தீர்வு காணுதல் போன்றவை இம்மையத்தின் நோக்கங்களாகும்.

செயல்பாடுகள்

  • வேளாண் தொழில்நுட்ப தகவல் மையத்தின் விற்பனை மையம் உழவர்களின் வசதிக்காக தாவரவியல் பூங்காவின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
  • காய்கறி விதைகள், கீரை வகைகள், பயிர் ஊக்குவிப்பான்கள், தென்னை டானிக், மரம் கொல்லி, பூஞ்சானக் கொல்லி மற்றும் வேளாண் தொழில் நுட்ப குறுந்தகடுகள் ஆகியவைகளை உழவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
  • பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் உழவர்களின் பட்டறிவு வருகைக்கு பல்வேறு துறைகளுக்கு இம்மையத்தின் மூலம் வழிக்காட்டப்படிகின்றது.
  • தொலைபேசி மூலமாக உழவர்களின் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் வழங்கப்படுகின்றது.

மேலும் விபரங்களுக்கு

வேளாண் தொழில் நுட்பதகவல் மையம்
விரிவாக்கக் கல்வி இயக்ககம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 3
தொலைபேசி : 0422-6611315
மின்னஞ்சல் : dee@tnau.ac.in

Updated on March 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15