வங்கி மற்றும் கடன் :: கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்
1.) சிறுதவணை கடன் அமைப்பு
சிறுதவணை கூட்டுறவு கடன் அமைப்பு தமிழ்நாட்டில் 3  அடுக்கு அமைப்பாக தமிழ்நாடு மாநில தலைமை வங்கி மாநில அளவில் 45 கிளைகளுடனும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட அளவில் 717 கிளைகளுடனும், 4474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிராமப்புற அளவிலும் செயல்படுகிறது.

i) தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் (டி.என்.எஸ்.சி.பி) சென்னை
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பேரவையாக விளங்குகிறது. தலைமை வங்கியாக இருப்பதால், இது ஆதாரம் மற்றும் வழிகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தேவைகளுக்கும் உதவுகிறது. இது நபார்டு வங்கி அளிக்கும் மறுநிதியளிப்புகளை, சிறு தவணை மற்றும் நடுத்தர தவணையாக விவசாயம் மற்றும் அதன் சார்ந்த துறைகளுக்கான கடன்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குகிறது.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி நிதியை தொடக்க கூட்டுறவு மேம்பாட்டு நிதியாக பராமரித்து வருகிறது. இந்த நிதி மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை வங்கியின் தொகை மூலம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ii) மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கிகள் (டி.சி.சி.பி)
மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட தலைமையிடம் அல்லது மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருக்கும். இந்த வங்கிகளுக்கு சில தனிநபர்கள், நிதி மற்றும் நிர்வாகம் இரண்டையும் வழங்குவர். மத்திய கூட்டுறவு வங்கிகள் மூன்று நிதி ஆதாரங்களைப் பெற்றுள்ளது.

  • அவர்களது சொந்த முதலீட்டு பங்குகள் மற்றும் இருப்புகள்
  • பொது மக்களிடம் இருந்து பெற்றுள்ள வைப்பு நிதி
  • மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ள கடன்கள்.

இதன் முக்கிய செயற்கூறுகள் தொடக்க கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், சாதாரண வணிக வங்கிகளின் தொழில்களையும் சேர்த்து செய்தல். அதாவது பொது மக்களிடம் இருந்து வைப்பு நிதிகளை ஈர்த்தல் மற்றும் பணம் தேவைப்படுவோர்க்கு அவர்களின் பாதுகாப்புக்காக பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் அளித்தல்.

மாநிலத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 77 கிளைகள் உள்ளது. இவை அனைத்தும் கிராமப்புற பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக அமைந்திருக்கும். இவை பால் பண்ணை, கைத்தறி, சர்க்கரை மற்றும் இதன் சார்ந்த இதர கூட்டுறவுகள் ஆகியவற்றின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. இவை மட்டுமின்றி வேளாண் சாராத தேவைகளுக்கு, பொது மக்களுக்கு நேரடியாக இந்த வங்கி கிளையின் சேவைப் பகுதிக்குள் இருப்பின் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

iii) தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் (PACB)
தமிழ்நாட்டில் 4474 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இவை விவசாயிகளுக்கு கடன் உதவிகள், உரங்கள் வழங்குதல் மற்றும் பொது விநியோக முறையில் உள்ள கிளைகளை நடத்துதல் ஆகியவற்றை செய்து வருகிறது. இந்த வங்கிகள் சிறு தவணை மற்றும் நடுத்தரத்  தவணை கடன்களை விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கு வழங்குகிறது. சிறு தவணை கடன்கள் 12 முதல் 15 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் மற்றும் நடுத்தர தவணை கடன்கள் 3 முதல் 5 வருடங்களில் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016