வங்கி மற்றும் கடன் :: மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய கூட்டமைப்பு லிமிடெட்
மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய கூட்டமைப்பு லிமிடெட் (NAFSCOB)

மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய கூட்டமைப்பு லிமிடெட் (NAFSCOB) மும்பையில் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பொதுவாக மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் வேலைகள் மற்றும் கூட்டுறவு கடன் மேம்பாட்டில் குறிப்பாக செயல்பட்டு ஆதரவு தர அமைக்கப்பட்டது.

NAFSCOB - ன் குறிப்பிட்ட சில நோக்கங்கள்

 • உறுப்பினராக உள்ள வங்கிகளுக்கு பொதுவான மன்றம் ஏற்படுத்தி, கூட்டுறவு கடன், வங்கியியல் மற்றும் அதன் சார்ந்த செயல்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்குத் தகுதியான செயல்திட்டம் அமைத்து அதை நடத்த ஏற்பாடு செய்தல்.
 • உறுப்பினராக உள்ள வங்கிகளின் ஈடுபாட்டை ஊக்குவித்து அவர்களின் அனைத்து கோணங்களின் செயல்கள் மற்றும் அவர்களின் கருத்துக்களுக்கு நம் வெளிப்பாடுகளை காண்பித்தல்.
 • இந்திய அரசு, பாரத ரிசர்வ் வங்கி அதன் மாநில அரசுகள், நபார்டு மற்றும் இதர உயர் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டுறவு கடன் மேம்பாடுகள் மற்றும் அதன் உறுப்பினர் வங்கிகளை ஒருங்கிணைத்தல்.
 • உறுப்பினர் வங்கிகளுக்கு ஆராய்ச்சி மற்றும் சேவை, இடுபொருட்கள் வசதிகளைச் செய்து சொந்த அமைப்புகளை உறுதிப்படுத்த வழிவகை செய்கிறது.
 • கருத்தரங்கு / மாநாடு / பயிலரங்கு / கூட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அவர்களின் பொதுவான ஆர்வத்தை பகிர்ந்து அதன் மூலம் ஒரு நல்ல கொள்கை முடிவுகளை ஏற்படுத்த வழிவகை செய்யப்படுகிறது

பேரவையின் செயற்கூறுகளில் 3 வகையான பிரிவுகள்.

  1. திட்டமிடுதல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (PRD)
  2. அனைத்திந்திய பரஸ்பர ஏற்பாடு திட்டம் (AIMAS)
  3. கணினி சேவைகள் பிரிவு (CSD)

ஆதாரம்: http://www.nafscob.org/dir(dccb)/dir(dccb)-2008.pdf

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015