இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) |
 |
எக்சிம் வங்கி ஜனவரி மாதம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வங்கி நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவித்து, அதிகமான இறக்குமதிக்கு பணம் வழங்க ஐ.டி.பி.ஐ வங்கியின் சர்வதேச நிதித் துறையின் வேலைகளை எடுத்துக் கொண்டுள்ளது.
இது இதர நிறுவனங்களுக்கு தலைமை முகவராகவும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி நிதியமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைகளையும் செய்து வருகிறது.
வணிக வங்கிகள் மற்றும் இதர ஏற்றுமதி இறக்குமதிப் பகுதிகளில் செயல்திட்டம் நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிதியளிப்பு வசதிகள் ஆகியவற்றை இவ்வங்கி செயல்படுத்தி வருகிறது.
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி விதி 1981- ன் படி, வங்கிக் கடன் மற்றும் முன்பணம் ஆகியவற்றை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மற்றும் வங்கி தன்னிச்சையாகவும் அல்லது வேறொரு வங்கியின் பங்கீட்டு நிதி நிறுவனத்துடனோ வழங்கும். இவ்வங்கி ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றிற்கு நிதியளிப்பதில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது.
குறிக்கோள்
வங்கியின் முக்கிய அடிப்படை நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, அதன் குறிக்கோளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஏற்றுமதி இறக்குமதி துறைகளில் நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் உதவி செய்தல்.
- ஏற்றுமதி சம்பந்தமான ஏற்பாடுகளில் திட்டமிடல், ஊக்குவிப்பு, மேம்பாடு மற்றும் நிதியளிப்பு.
- நிதி ஆராய்ச்சி, கருத்தாய்வு தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வுகள் ஆகியவை வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடுகளில் செய்யப்படுபவை.
- சர்வதேச வர்த்தகம் தொடர்பான சந்தை மற்றும் கடன் தகவல்களைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் வெளியிடுதல்
செயற்கூறுகள்
- ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பொருட்கள் சேவைகளை நிதியளிப்பிற்கு இந்திய நாட்டிற்கு மட்டுமன்றி மூன்றாம் தர உலக நாடுகளுக்கும் வழங்கப்படுகிறது.
- இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வாடகைக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு நிதி உதவி அளித்தல்.
- வெளிநாடுகளில் நிறுவனங்களுடன், கூட்டு சேர்ந்து செய்வதற்கு நிதி உதவி அளித்தல்.
- வணிகர் வங்கி செயல்களான கையிருப்புக்களை எழுதி வைத்தல், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி இறக்குமதி துறைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள்.
- ஏற்றுமதி இறக்குமதித் துறைகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக உதவிகள் வழங்குவது.
வங்கிகள் இருவகையான உதவிகளை வழங்குகிறது.
ஆதாரம்
http://www.eximbankindia.com
www.eximbankagro.com