| நில மேம்பாட்டு வங்கி (LDB) நீண்ட தவணை கடன்கள் வழங்கும் சிறப்பு வங்கிகள் நில மேம்பாட்டு வங்கிகள் எனப்படும். இதன் வரலாறு மிகவும் பழமையானது. முதன் முதலில் பஞ்சாப் மாநிலம் ஜாங் என்ற ஊரில் 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இவ்வங்கியின் உண்மையான உத்வேகம் “நில அடமானம் வங்கிகள் விதி 1930 ஆம் ஆண்டு அமல் செய்த பின்பு தான் ஆரம்பமானது (எல்.டி.பி உண்மையாக நில அடமான வங்கிகள் என்று அழைப்பர். இந்த விதியை அமல் செய்தபின், எல்.டி.பி வங்கிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது.
 
 விவசாய கடன் மறு ஆய்வுக்குழு (ACRC) 1989 ஆம் ஆண்டு எல்.டி.பி முக்கியப் பங்கினை எடுத்துரைத்து, வேளாண்மை வளர்ச்சி மற்றும் இதர துறைகளான தரிசு நிலம், பண்ணை சாரா துறை வளர்ச்சி ஆகியவற்றை அடைய பரிந்துரை செய்தது. வங்கி மேலும் நாட்களில், அதன் பணிகளை விரிவுபடுத்திய அதே சமயம் நபார்டு வங்கி 1982 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாடு மற்றும் தரிசு நிலங்கள் ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்க ஆவண செய்துள்ளது. 80 - களின் இறுதியிலும், 90 - களின் தொடக்கத்திலும், எல்.டி.பி வங்கி நீண்ட தவணை கடன்களை கிராம மேம்பாட்டு செயல்களான சிறு மற்றும் குடிசைத் தொழில்கள், கிராம கைவினைஞர்கள் ஆகியவற்றிற்கு வழங்கியது. கிராம வீட்டுத் திட்டங்களுக்கு தேசிய வீட்டு வசதி  வாரியத்தின் மூலம் மறுநிதியளிப்புகள் ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகியவற்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அகன்ற பங்குகளில் தற்போது எல்.டி.பி வங்கிகள் மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் (SCARDB) என்று வழங்கப்படுகிறது.
 
                
                  குறிக்கோள்அமைப்புநிதி திரட்டுதல்எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் கடன் சேவைகள்தமிழ்நாட்டில் உள்ள நில மேம்பாட்டு வங்கிகள் குறிக்கோள்நில மேம்பாட்டு வங்கியின் முக்கியக் குறிக்கோள் வேளாண் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் அதன் உற்பத்தியை பெருக்குதல் சி.எல்.டி.பி வங்கிகள் நீண்ட தவணை கடன்களை இதற்குச் சேர்ந்த பி.எல்.டி.பி வங்கிகளுக்கு வழங்கும் அல்லது அதன் கிளைகளுக்கு நேரடியாக நிதி வழங்கும்.
 அமைப்புஇந்த வங்கிகள் இரண்டு அடுக்கு அமைப்புகளைக் கொண்டது.
 
                
                  மாவட்ட அளவில் உள்ள தொடக்க நில மேம்பாட்டு வங்கிகள் அதன் கிளைகள் தாலுக்கா அளவில் கொண்டு இயங்குகிறது.மாநில நில மேம்பாட்டு வங்கி அனைத்து தொடக்க நில மேம்பாட்டு வங்கிகளும் மாநில அளவில் மத்திய நில மேம்பாட்டு வங்கி §பரவையுடன் இணைக்கப் பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஒரு அமைப்பு முறை மட்டு§ம உள்ளது. மாநில நில மேம்பாட்டு வங்கி அதன் கிளைகள் மூலம் இயங்குகிறது. அதன் சிறு கிளைகள் மாவட்ட அளவிலும் அதற்கு கீழ் அளவிலும் இயங்குகிறது. தொடக்க நில மேம்பாட்டு வங்கிகள் (பி.எல்.டி.பி)இந்த வங்கிகள் மாவட்டத்தில் ஒன்று அல்லது சில தாலுக்காக்களை மட்டுமே பார்க்கும்படி அமைத்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தற்போது அது ஒரு மேம்பாட்டு வட்டாரத்தை மட்டுமே பார்க்கத் தகுதியுடையவை. அனைத்து நில உரிமையாளர்களும் இதில் உறுப்பினராகத் தகுதியுடையவர்கள். அவர்கள் தங்களது நிலத்தை அடமானம் வைத்து நிதி பெறலாம். அசல் தொகை மட்டும் கடன் பெற்றிருப்பின் ஏ வகுப்பு உறுப்பினர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடகு வைத்த சொத்தில் வட்டி செலுத்த வேண்டிருப்பின் பி வகுப்பு உறுப்பினர்கள் ஆவர்.
 மத்திய நில மேம்பாட்டு வங்கிசி.எல்.டி.பி - ல் உறுப்பினராக இருப்பவர்கள் பி.எல்.டி.பி -யில் உறுப்பினர்கள் மற்றும் சிலர் தனிப்பட்ட ஊக்குவிப்பாளர்கள். இது நீண்ட தவணை கடன்களை விவசாயிகளுக்கு பி.எல்.டி.பி மற்றும் சி.எல்.டி.பி யின் கிளைகள் மூலமும் வழங்கப்படும். இது மாநில அரசு அங்கீகரித்த கடன் பத்திரங்கள் மூலம் நிதியை திரட்டுகின்றது. பி.எல்.டி.பி வங்கி சி.எல்.டி.பி வங்கியிடம் கடன் பெறும்பொழுது, அது தன்னிடம் கடன் பெற்றவர்களிடம் சி.எல்.டி.பி வங்கிக்கு கடன் பத்திரங்களை குறிப்பிட்டு இருக்கும். சி.எல்.டி.பி வங்கி கடன் பத்திரங்களைக் கொடுத்து சொத்து மதிப்பின் மீது நிதியை திரட்டும். நபார்டு வங்கி மற்றும் எல்.ஐ.சி கடன் பத்திரங்களின் மீது நிறைய தொகையை அதோடு நபார்டு வங்கி நில மேம்பாட்டு வங்கிக்கு மறுநதியளிப்பு அளிக்கும்.
 நிதி திரட்டுதல்மத்திய அல்லது மாநில நில மேம்பாட்டு வங்கி நிதி திரட்டுவதை முக்கிய செயற்கூறாக கொண்டிருப்பின், இது நாட்டின் சந்தையை சரியாகப் பயன்படுத்தி, தொடக்க நில மேம்பாட்டு வங்கிக்கு முன் கடனை வழங்கும். மாநில நில மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
                
                  பங்கு முதலீடுகடன் பத்திரங்கள் வழங்குதல்நபார்டு வங்கியிடம் கடன் பெறுதல்அரசிடம் இருந்து மானியங்களை திரும்பப் பெறுதல்இதர நிதிகள் கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் வரும் நிதியே நில மேம்பாட்டு வங்கிக்கு (எல்.டி.பி) முக்கிய ஆதார நிதியாகும். கடன் பத்திரங்கள் என்பது உடன்படிக்கை போன்றது. இதில் கடன் பெறுவதை அங்கீகரித்தும் சரியான நேரத்தில் வட்டி விகிதம் மற்றும் அசல் தொகை ஆகியவற்றை திருப்பிச் செலுத்த உறுதியளித்தும் வழங்கப்பட்டிருக்கும். 3 வகையான கடன் பத்திரங்கள் உள்ளது. 
                
                  சாதாரண கடன் பத்திரங்கள்கிராமப்புற கடன் பத்திரங்கள்சிறப்பு மேம்பாட்டு கடன் பத்திரங்கள் இந்தக் கடன் பத்திரங்கள் அனைத்தும் பொதுவாக, நிதி நிறுவனங்களான எல்.ஐ.சி, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நபார்டு, மாநில அரசுகள் ஆகியவை வாங்கும். இதற்கு குறைந்தபட்ச ஆதரவு மட்டுமே பொது மக்களிடம் இருக்கும். மாநில அரசு தனிப்பட்ட விவசாயிகளுக்கு நிறைய மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு மானியங்கள் வழங்குகின்றது. இதில் உழவு உந்து வண்டி வாங்குவதும் அடங்கும். இதன் மானியத் தொகை அனைத்தும் நில மேம்பாட்டு வங்கிக்கு வழங்கப்படும். வட்டி விகிதம்நீண்ட தவணை கடன்களுக்கு வட்டி விகிதம் பொதுவாக குறைவாகவே இருக்கும். அது விவசாயிகள் செலுத்தும் அளவிற்கே இருக்கும். இது பொதுவாக 11 முதல் 12 சதவிகிதம் ஆகும்.
 கடன் வாங்கும் முறைவிண்ணப்பங்களை வங்கி கிளை அலுவலகம் கடன் பெறுபவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும். பின் விவசாய நிதி அலுவலர் அல்லது ஆய்வாளர் விண்ணப்பங்களை சரிபார்த்து, அந்த விண்ணப்பத்தில் உள்ள இடத்தை சென்று பார்த்து, கடன் பெறுவதற்கான தேவையை ஆராய்ந்து, அந்தத் திட்ட வரைவின் உண்மையை சரிபார்த்து, அதன் பொருளாதார நிலை, விவசாயி திருப்பிச் செலுத்தும் தகுதி, தேவையான பாதுகாப்பு என்று அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அந்த நடைமுறைகள் முடிந்த பிறகு, கடன்கள், தகுதியான அதிகாரி சரியான அளவில் வங்கி வழங்கியுள்ள அதிகார எல்லைக்குள் அனைத்தையும் பார்த்து கடன் வழங்கப்படும்.
 எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் கடன் சேவைகள்நீண்ட தவணை கடன் (5 வருடம் மற்றும் அதற்கு மேல்) விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள், கிராம வீடுகள், தரிசு நில மேம்பாடு ஆகியவை எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் முக்கிய குறிக்கோள்கள். எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் கடன் வழங்கும் முறைகளை 3 துறைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். பண்ணை சார்ந்த துறை, பண்ணைச சாரா துறை, கிராம வீடுகள் துறை.
 
 பண்ணை சார்ந்த துறைகள்
 
 பண்ணை சார்ந்த துறைகளின் கீழ், நீண்ட காலத் தவணை கடன்கள் கீழ்க்கண்ட வேலைகளுக்கு எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் மூலம் முன்பணம் வழங்கப்படுகிறது. சிறு பாசன வேலைகள் அதாவது
 
                
                  கிணறு தோண்டுதல் / மறுசீரமைப்புபம்பு செட்டுகள் நிறுவுதல்பாசன கால்வாய்கள் அமைத்தல்குழாய்கள் அமைத்தல்தெளிப்பு நீர் / சொட்டு நீர் பாசன முறைசமூக கிணறுகள்இறைப்பு நீர் பாசன முறை பண்ணை இயந்திரமயமாக்கல் 
                
                  உழவு உந்து / பவர் டில்லர்கள் அதன் உபகரணங்களுடன்கூட்டு அறுவடை இயந்திரங்கள்இழுவைகள்மின் கதிர் அடிக்கும் இயந்திரம்நில மேம்பாடு / நிலம் சீரமைத்தல் மற்றும் நீர் பாதுகாப்புதோட்டக்கலை மேம்பாடு (பழப்பயிர்கள், மலர்கள், காளான், காய்கறிகள்)மலை தோட்டப்பயிர்கள் (தென்னை, முந்திரி, பாக்கு, ரப்பர், தேயிலை, காபி, மூங்கில், ஏலக்காய்).பல தரப்பட்ட செயல்கள் (பால் பண்ணை, கோழிப்பண்ணை, பன்றிப் பண்ணை, முயல் பண்ணை, மீன் பண்ணை, ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு, சாண எரிவாயுக் கலன், பண்ணை வீடு, பட்டுப்புழு வளர்ப்பு, கிராமப்புற கோடோன், எருதுகள், மாட்டு வண்டிகள் / ஒட்டக வண்டிகள், ஏ.பி.எம்.சி குளிர்பதன சேமிப்புகள்)தரிசு நில மேம்பாடு / காடு வளர்ப்பு, மானாவாரி நில மேம்பாடுபழைய கடன்களை செலுத்துதல்நிலம் வாங்குதல் பண்ணை சாரா துறைகள் 
                
                  கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்கிராமப்புற கைவினைஞர்கள்சிறு தொழில்கள் / விவசாய செயலகம், உணவுப்பதப்படுத்தும் செயலகங்கள்.சிறு சாலைப் போக்குவரத்து வாகனங்கள் (16 டன் கொள்ளளவு வரை அளவு கொண்டது) கிராமப்புற வீடுகள் 
                
                  ரூ. 5 லட்சம் வரை புது வீடுகள் கட்டமைப்புரூ. 1 லட்சம் வரை பழைய வீடுகள் சரிசெய்தல் / மறுசீரமைப்பு நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் 
                
                  கடன் பெறுபவர்களுக்கு 95 சதவிகிதம் கடன் அளவு வழங்கப்படும். இது கடன் தேவையைப் பொறுத்து, வாங்குபவரைப் பொறுத்தும் வழங்கப்படும்.பாதுகாப்பு நீண்டகால தவணை கடன்கள், நிலம் / விவசாய நிலத்தை முக்கிய பாதுகாப்பாக வழங்கப்படும். அடகு வைத்தது போக, சொத்துக்கள், பாதுகாப்பு ஆகியவற்றை கூட்டு பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளப்படும். கடன்களுக்கான தகுதி அடிப்படை, நில மதிப்பீட்டில் 60 சதவிகிதம் அளவை கடன் எடுத்துக் கொள்ளப்படும். 
                
                  திருப்பிச் செலுத்தும் காலம் கடன் தேவைகளைப் பொறுத்து நீண்டகால தவணை கடன் 5 வருடம் முதல் 15 வருடம் வரை வழங்கப்படும். ஒரு சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு கருணைக் காலம் வழங்கப்படும். கடன் / திட்டங்களைப் பற்றிய தகவல்கள் பெற யாரை அணுக வேண்டும்.நாட்டில் ஒவ்வொரு தாலுக்கா / வட்டார அளவிலும் தொடக்க வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் / எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி கிளைகள் இடம் பெற்றுள்ளது. கடன் தேவையான நபர்கள் பி.சி.ஏ.ஆர்.டி.பி யின் மேலாளர் / வங்கி கிளையின் வேலை நேரத்தில், திட்டத்தைப் பற்றிய தகவல்கள், நிபந்தனைகள், வழிமுறைகள், கடன் விண்ணப்பம் ஆகியவை பெறலாம்.
 வைப்புநிதி சேர்த்தல்எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி யின் ஆதார அடித்தளத்தை வளப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி கிராமப்புற வைப்பு நிதிகளை எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி கடன் பெறுவோர் / கடன் பெறாதவர் என அனைவரிடமும் பெற அனுமதி வழங்கியுள்ளது. எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி பல்வேறு வைப்பு நிதி திட்டங்களை வகுத்து, அதன் மூலம் ஒரு வருட காலம் முதல் அனைத்து வைப்பு நிதித் தொகையையும் பெற அனுமதி வழங்கியுள்ளது.
 தமிழ்நாட்டில் உள்ள நில மேம்பாட்டு வங்கி 
                
                  
                    
                      | உள்கட்டமைப்பு |  
                      | நில மேம்பாட்டு வங்கி |  
                      | வ.எண் | மாவட்டம் | கிராமங்களின் எண்ணிக்கை |  
                      | 1. | கோவை | 17 |  
                      | 2. | கடலூர் | 29 |  
                      | 3. | திண்டுக்கல் | 21 |  
                      | 4. | தர்மபுரி | 9 |  
                      | 5. | ஈரோடு | 17 |  
                      | 6. | கிருஷ்ணகிரி | 21 |  
                      | 7. | கன்னியாகுமரி | 11 |  
                      | 8. | காஞ்சிபுரம் | 24 |  
                      | 9. | மதுரை | 11 |  
                      | 10. | நாகப்பட்டினம் | 18 |  
                      | 11. | நீலகிரி | 7 |  
                      | 12. | நாமக்கல் | 39 |  
                      | 13. | புதுக்கோட்டை | 20 |  
                      | 14. | பெரம்பலூர் | 6 |  
                      | 15. | இராமநாதபுரம் | 5 |  
                      | 16. | சேலம் | 28 |  
                      | 17. | சிவகங்கை | 6 |  
                      | 18 | தேனி | 6 |  
                      | 19 | திருவள்ளூர் | 37 |  
                      | 20 | தஞ்சாவூர் | 11 |  
                      | 21 | திருநெல்வேலி | 26 |  
                      | 22 | திருச்சிராப்பள்ளி | 22 |  
                      | 23 | தூத்துக்குடி | 13 |  
                      | 24 | திருவண்ணாமலை | 33 |  
                      | 25 | திருவாரூர் | 10 |  
                      | 26 | வேலூர் | 44 |  
                      | 27 | விருதுநகர் | 8 |  
                      | 28 | விழுப்புரம் | 32 |  
                      |  | மொத்தம் | 531 |  மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.ஆதாரம்
 http://www.agriculture.tn.nic.in/IS_District.asp?Ino=29&Inm=Land%20Development%20Bank
 http://www.nafcard.org/functions.htm
 |