வங்கி மற்றும் கடன் :: நில மேம்பாட்டு வங்கி

குறிக்கோள்
நில மேம்பாட்டு வங்கியின் முக்கியக் குறிக்கோள் வேளாண் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் அதன் உற்பத்தியை பெருக்குதல் சி.எல்.டி.பி வங்கிகள் நீண்ட தவணை கடன்களை இதற்குச் சேர்ந்த பி.எல்.டி.பி வங்கிகளுக்கு வழங்கும் அல்லது அதன் கிளைகளுக்கு நேரடியாக நிதி வழங்கும்.

அமைப்பு
இந்த வங்கிகள் இரண்டு அடுக்கு அமைப்புகளைக் கொண்டது.

  1. மாவட்ட அளவில் உள்ள தொடக்க நில மேம்பாட்டு வங்கிகள் அதன் கிளைகள் தாலுக்கா அளவில் கொண்டு இயங்குகிறது.
  2. மாநில நில மேம்பாட்டு வங்கி அனைத்து தொடக்க நில மேம்பாட்டு வங்கிகளும் மாநில அளவில் மத்திய நில மேம்பாட்டு வங்கி §பரவையுடன் இணைக்கப் பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஒரு அமைப்பு முறை மட்டு§ம உள்ளது. மாநில நில மேம்பாட்டு வங்கி அதன் கிளைகள் மூலம் இயங்குகிறது. அதன் சிறு கிளைகள் மாவட்ட அளவிலும் அதற்கு கீழ் அளவிலும் இயங்குகிறது.

தொடக்க நில மேம்பாட்டு வங்கிகள் (பி.எல்.டி.பி)
இந்த வங்கிகள் மாவட்டத்தில் ஒன்று அல்லது சில தாலுக்காக்களை மட்டுமே பார்க்கும்படி அமைத்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தற்போது அது ஒரு மேம்பாட்டு வட்டாரத்தை மட்டுமே பார்க்கத் தகுதியுடையவை. அனைத்து நில உரிமையாளர்களும் இதில் உறுப்பினராகத் தகுதியுடையவர்கள். அவர்கள் தங்களது நிலத்தை அடமானம் வைத்து நிதி பெறலாம். அசல் தொகை மட்டும் கடன் பெற்றிருப்பின் ஏ வகுப்பு உறுப்பினர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடகு வைத்த சொத்தில் வட்டி செலுத்த வேண்டிருப்பின் பி வகுப்பு உறுப்பினர்கள் ஆவர்.

மத்திய நில மேம்பாட்டு வங்கி
சி.எல்.டி.பி - ல் உறுப்பினராக இருப்பவர்கள் பி.எல்.டி.பி -யில் உறுப்பினர்கள் மற்றும் சிலர் தனிப்பட்ட ஊக்குவிப்பாளர்கள். இது நீண்ட தவணை கடன்களை விவசாயிகளுக்கு பி.எல்.டி.பி மற்றும் சி.எல்.டி.பி யின் கிளைகள் மூலமும் வழங்கப்படும். இது மாநில அரசு அங்கீகரித்த கடன் பத்திரங்கள் மூலம் நிதியை திரட்டுகின்றது. பி.எல்.டி.பி வங்கி சி.எல்.டி.பி வங்கியிடம் கடன் பெறும்பொழுது, அது தன்னிடம் கடன் பெற்றவர்களிடம் சி.எல்.டி.பி வங்கிக்கு கடன் பத்திரங்களை குறிப்பிட்டு இருக்கும். சி.எல்.டி.பி வங்கி கடன் பத்திரங்களைக் கொடுத்து சொத்து மதிப்பின் மீது நிதியை திரட்டும். நபார்டு வங்கி மற்றும் எல்.ஐ.சி கடன் பத்திரங்களின் மீது நிறைய தொகையை அதோடு நபார்டு வங்கி நில மேம்பாட்டு வங்கிக்கு மறுநதியளிப்பு அளிக்கும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016