வங்கி மற்றும் கடன் :: மண்டல கிராம வங்கிகள்
மண்டல கிராம வங்கிகள்

கிராமப்புற பகுதிகளில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்ய நரசிம்மன் குழுவின் பரிந்துரையின் கீழ் மண்டல கிராம வங்கிகளை அரசு நிறுவியுள்ளது. இவ்வங்கிகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை விட சிறந்து விளங்கும் என்பதால் செயல்படுத்தப்பட்டது. இதன் பேரில் 1976 ஆம் ஆண்டு மண்டல வங்கிகள் சட்டம் அரசால் அமைக்கப்பட்டது. 19 மண்டல கிராம வங்கிகளை இந்த மண்டல கிராம  வங்கிகள், சட்டம் 1976 - ன் கீழ்,  வங்கித் துறையில் ஒரு மிகப் பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேளாண்மை வர்த்தகம், வணிகம், தொழில்கள் மற்றும் இதர கிராமப்புற வளர்ச்சிகள், கடன் வசதிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய வேலையாட்கள், கைவினைப் பொருட்கள், சிறு சுயதொழில் முனைவோர் மற்றும் இதில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் இந்த மண்டல கிராம வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
 1. குறிக்கோள்
 2. செயல்கூறுகள்
 3. இந்தியாவிலுள்ள மண்டல கிராம வங்கிகள்
 4. தமிழ்நாட்டில் உள்ள மண்டல கிராம வங்கிகள்

மண்டல கிராம வங்கிகள் அமைக்கபட்டதன் குறிக்கோள்

 • கிராமப்புற பகுதிகளில் உள்ள கடன் தேவைகளை நிவர்த்தி செய்தல்.
 • கிராமப்புற சேமிப்புகள் / வைப்பு நிதிகைளை நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லாமல் தடுப்பது.
 • மண்டல உறுதியின்மையைக் குறைத்து கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்.
 • மண்டல கிராம வங்கிகள் ஏற்படுத்துவதன் முக்கிய குறிக்கோள் சிறு  மற்றும் குறு விவசாயிகள் விவசாய வேலையாட்கள் மற்றும் சிறு தெரழில் முனைவோர்க்கு கடன் மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.
 • ஒவ்வொரு மண்டல கிராம வங்கிகளும் அதன் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் செயல்படும். 
 • அரசு அறிவித்த பகுதிகளில் தேவைப்பட்டால் மண்டல கிராம கிளைகள் ஏற்படுத்தப்படும்.
 • ஒவ்வொரு மண்டல கிராம வங்கிகளும் பொதுத் துறை வங்கியின் உதவியின் கீழ்     அதன் பங்கீட்டுக்கு மூலதனத் தொகை, நிர்வாகம் மற்றும் நிதி உதவி அளித்தல், வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற செயல்களில் உதவி பெற்று செயல்படும்.

செயல்கூறுகள்

 1. வங்கி விதிமுறைகள் சட்டப்படி ஒவ்வொரு மண்டல கிராமப்புற வங்கியும் அதன் வங்கியின் தொழிலை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் மற்றும் துறை 6(1) - ன் கீழ் மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டவிதியின் கீழ் நடத்தவேண்டும்.
 2. ஒவ்வொரு மண்டல கிராம வங்கியும், சில தொழில்கள்  / செயல்கூறுகளைச் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள், வேளாண் வர்த்தக சங்கம், வேளாண் பதினிடும் சங்கம், கூட்டுறவு பண்ணைச் சங்கம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விவசாய சேவை சங்கம், தொடக்க நிலை வேளாண் தேவைகள் அல்லது வேளாண் செயல்கள் மற்றும் இதர தேவைகளுக்கு கடன் மற்றும் முன்பணம் வழங்குதல்.
 3. சிறுதொழில் முனைவோர், சிறு வர்த்தகம், வணிகம், தொழில் நிறுவனம் மற்றும் இதர வேலைகள் செய்வோர், அந்த வங்கி கிளையின் செயலகப் பகுதிகள் வரும்படி இருப்பின், அவர்களுக்கு கடன் மற்றும் முன்பணம் வழங்கப்படும்.
 4. பாரத ரிசர்வ் வங்கி மண்டல கிராமப்புற வங்கியை சிறப்புத் துறையின் கீழ் கொண்டு வந்து வர்த்தக வங்கிக்கு இணையாக தரம் உயர்த்தியுள்ளது. முன்னுரிமை துறைகளுக்கு 40 சதவிகிதம் அவர்களது முன்பணமாக பெரும்படி உறுதி செய்து கொள்ளப்படவேண்டும். இந்த 40 சதவிகிதம் தொகையில், 25 சதவிகித தொகை ஏழை மக்களுக்கு அல்லது மொத்த முன்பணத்தில் 10 சதவிகிதம் தொகை ஏழை மக்களுக்கு சென்று சேரவேண்டும்.

இந்தியாவில் உள்ள மண்டல கிராம வங்கிகள்
பாரத ஸ்டேட் வங்கி மண்டல கிராம வங்கிகள் வைத்துள்ள பெரிய வணிக வங்கிகளில் ஒன்றாகும். இதன் கீழ் 30 மண்டல கிராம வங்கிகள் 13 மாநிலங்களில் இந்தியா முழுவதும் உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் உள்ள மண்டல கிராம வங்கிகளுக்கு 2000 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது.பாரத ஸ்டேட் வங்கி மட்டுமன்றி இதர வங்கிகளும் இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக செயல்படுகிறது.

இந்தியாவில் இதர மண்டல கிராம வங்கிகள்

ஹரியானா மாநில கூட்டுறவு தலைமை வங்கி லிமிடெட்
இவ்வங்கியின் முக்கியப் பணி ஹரியானாவின் கிராமப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகள், கலைஞர்கள், பயிற்சி பெறாத விவசாயக் கூலிகள் மற்றும் கிராமப்புற சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவி அளித்தல். இதை (HARCOBANK) ஹர்கோ வங்கி என்றும் அழைப்பர். இவ்வங்கி ஹரியானா மாநிலத்தில் சிறப்புப் பொருளாதார இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வங்கி நிறைய வங்கி நிதி உதவிகளை தனிநபர்களுக்கு வழங்குகிறது. இது விவசாயக் கடன், விவசாயம் இல்லாத கடன், வைப்பு நிதி போன்றவற்றில் வங்கி செயல்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு)
நபார்டு வங்கியின் முக்கிய நோக்கம் சிறு அளவிலான தொழிற்சாலைகள், வைவினைப் பொருட்கள், குடிசைத் தொழில்கள், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கடனுதவி அளித்தல். நபார்டு வங்கி கிராமப்புற பொருளாதார மேம்பாடு, தொடர்ச்சியான  வளர்ச்சி போன்றவற்றிற்கு உறுதுணையாக இருக்கின்றது. நிறுவன மேம்பாடு, கிராமப்புற துறைகளுக்கு கடன் வழங்குபவர்க்கு நிதியளித்தல், ஆய்வு செய்தல், கண்காணிப்பு மற்றும் நிதித்துறை கழகத்தை மதிப்பீடு செய்தல் போன்றவற்றின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றது. நபார்டு வங்கி மேம்பாட்டிற்கு உறுதுணையாக முதல் வங்கியாக நிறுவப்பட்டுள்ளது.

சிந்தானூர் நகர சல்கார்டா வங்கி
இந்த வங்கியின் முதல் குறிக்கோள் கிராமப்புற மக்களுக்கு நிதியுதவி அளிப்பதாகும். இதை சுகோ (SUCO) வங்கி என்றே பொதுவாக அழைப்பர்.

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
இவ்வங்கியின் பங்கு மிகவும் முக்கியமானது. இது கிராமப்புற வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் அதன் நிறைய கிளைகளை உருவாக்கி நேரடியாக உதவும்  வகையில் ஈடுபடச் செய்கிறது.

சிண்டிகேட் வங்கி
இதன் ஆரம்ப கட்ட வளர்ச்சி கிராமங்களில் மற்றும் இவ்வங்கி இந்தியாவின் வங்கித் துறை மேம்பாட்டிற்கும், கிராமப்புற வளர்ச்சிக்கும் சிண்டிகேட் வங்கி மிகப் பெரிய முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
இந்தியாவில் மண்டல கிராம வங்கிகள் கிராமப்புற வளர்ச்சிக்காக நிறைய அர்ப்பணித்துள்ளது. கிராமப்புற தொழில்துறைகள் மற்றும் கிராமப்புற தொழில்கள் மேம்பாட்டிற்கும் அதன் பொருளாதாரம் மற்றும் முதலீடு, நிதி உதவிகள் அனைத்தும் இந்தியாவின் மண்டல கிராம வங்கியின் மூலம் கிடைக்கபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள மண்டல கிராம வங்கிகள்

 • இந்தியன் வங்கி இரண்டு மண்டல கிராம வங்கிகளான சப்தகிரி கிராமின் வங்கி மற்றும்  பல்லவன் கிராம வங்கிகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.
 • தமிழ்நாட்டில் பல்லவன் கிராம வங்கி சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு  சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி, கோவை, கடலூர், கரூர், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர். ஆகிய 14 மாவட்டங்களில் இயங்கி வருகிறது.
 • புதுவையில் இந்தியன் வங்கியின் கீழ் நிதி பெற்ற 3 வது மண்டல கிராம வங்கியான புதுவை பாரதியார் கிராம வங்கியை செயல்படுத்தி இருக்கிறது.

முகவரி
பல்லவன் கிராமப்புற வங்கி
6, ஏற்காடு ரோடு
சேலம் - 636007
தமிழ்நாடு.

ஆதாரம்:
http://www.macroscan.com/fet/jul05/pdf/RRB_Debate.pdf
http://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/73991.pdf
http://www.indiaagronet.com/indiaagronet/bank_credit/CONTENTS/regional_rural_banks.htm
http://www.indianmba.com/Faculty_Column/FC923/fc923.html
http://business.mapsofindia.com/rural-economy/development/regional-banks.html
http://www.indian-bank.com/PuduvaiBharathiarGramaBank.html

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015