வங்கி மற்றும் கடன் :: பாரத ரிசர்வ் வங்கி (RBI)

1. பாரத ரிசர்வ் வங்கியைப் பற்றி
பாரத ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பாரத ரிசர்வ் வங்கி விதியின் 1934 -ன் படி தொடங்கப்பட்டது. முதலில் இதன் மத்திய அலுவலகம் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. பின்னர் நிரந்தரமாக 1937 ஆம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. மத்திய அலுவலகத்தில் அதன் ஆளுநர் இருப்பார். அதன் விதிகள் இங்கு இறுதி வடிவம் தொகுக்கப்படும். ஆதியில் தனியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட பின்பு பாரத ரிசர்வ் வங்கி முழுவதும் இந்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னுரை
பாரத ரிசர்வ் வங்கியின் முன்னுரை அதன் அடிப்படை செயற்கூறுகளை எடுத்துரைக்கிறது. வங்கிக் குறிப்புகள் குறித்த இதழ்களை முறைப்படுத்துதல் மற்றும் இந்தியாவில் பண இருப்பு விகிதத்தை சரிபார்த்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் மற்றும் பொதுவாக நாட்டின் பணம் மற்றும் கடன் முறைகளை லாபகரமாக இயக்குதல்.

மத்திய வாரியம்
ரிசர்வ் வங்கியின் பிரச்சனைகள் அனைத்தும் அதன் மத்திய இயக்குநர்கள் வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதன் வாரியம் இந்திய அரசால் பாரத ரிசர்வ் வங்கி விதியின்படி நியமிக்கப்படுகின்றனர்.அவர்கள் 4 வருடங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்பு:
அதிகாரப்பூர்வமான இயக்குநர்கள்

முழு நேரம் : ஆளுநர் மற்றும் 4 துணை ஆளுநர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.

அதிகாரப் பூர்வமில்லாத இயக்குநர்கள்
அரசின் மூலம் நியமிக்கப்படுபவர்கள் : பல துறைகளில் இருந்து 10 இயக்குநர்கள் மற்றும் ஒருவர் அரசின் அதிகாரப்பூர்வ இயக்குநர்.
மற்றவர்கள் : 4 இயக்குநர்கள் - 4 உள்ளூர் வாரியத்திலிருந்தும் ஒவ்வொருவர்
செயற்கூறு : பொதுவான மேற்பார்வை மற்றும் வங்கி சம்மந்தமான வேலைகளுக்கு வழிகாட்டுதல்.

உள்ளூர் வாரியங்கள்

  1. நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொன்றும் - மும்பை, கல்கத்தா, சென்னை, புதுதில்லி.
  2. உறுப்பினர்களில் 5 நபர்கள் இதை மத்திய அரசு மூலம் நியமிக்கப்படுவர் மற்றும் இதன் பதவி காலம் 4 வருடங்கள்.

செயற்கூறு
மத்திய வாரியத்திற்கு உள்ளூர் விவகாரங்களைப் பற்றிய செய்திகளுக்கு அறிவுரை மற்றும் அதன் எல்லைகளை பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் உள்ளூர் கூட்டுறவு மற்றும் சுதேசி வங்கிகளுக்கு, பொருளாதார வட்டிகள் விகிதம் போன்றவற்றை பற்றி அறிவுரை செய்தல், நேரத்திற்குத் தகுந்தது போல் மத்திய வாரியம் கூறும் வேலைகளைச் செய்தல்.

ஆதாரம் : 

http://www.rbi.org.in/commonman/English/scripts/organisation.aspx
Economic and Political Weekly, April 25, 2009 Vol. XLIV No.17.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016