வங்கி மற்றும் கடன் :: பாரத ரிசர்வ் வங்கி (RBI)
2. நிதி மேற்பார்வை
நிதி மேற்பார்வைக்கு வாரியத்தின் (பி.எப்.எஸ்) உதவி மூலம் பாரத ரிசர்வ் வங்கி இப்பணிக¨ளச் செய்கிறது. இந்த வாரியம் 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு குழுவாக பாரத ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர்கள் மூலம் தொடங்கப்பட்டது.

குறிக்கோள்

இதன் முக்கியக் குறிக்கோள் - வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதித் துறையை ஒட்டு மொத்தமாகக் கண்காணித்தல்.

அரசியலமைப்பு

மத்திய வாரியத்தில் இருந்து 4 இயக்குநர்களை உறுப்பினர்களாகக் கொண்ட வாரியம் ஒன்றை ஆளுநருக்குக் கீழ் அமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் 2 வருடங்கள். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்கள் இதன் உறுப்பினர்கள். ஒரு துணை ஆளுநர், பொதுவாக வங்கி ஒழுங்கு முறை மற்றும் கண்காணிப்பிற்க்குப் பொறுப்பேற்றிருக்கும் நபர், இந்த வாரியத்தின் துணைத் தலைவராக  தேர்ந்தெடுக்கப்படுவார்.

நிதித்துறை கண்காணிப்பு வாரியக் கூட்டங்கள் (பி.எப்.எஸ்)
 1. இந்த வாரியம் மாதத்திற்கு ஒரு முறை கூடும். ஆய்வு குறிப்புகள் மற்றும் இதர மேற்பார்வை துறைகள், முன் வைக்கும் இதர விசயங்களையும் வாரியக்குழு கண்காணிக்கும்.
 2. நிதித்துறை கண்காணிப்பு வாரியம், தணிக்கை குழு மூலம் தனிப்பட்ட மற்றும் உள்தணிக்கை செயற்கூறுகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இதன் தரத்தை மேம்படுத்த உறுதி எடுத்தள்ளது. தணிக்கைக் குழுவில் துணை ஆளுநர் தலைவராகவும் மத்திய வாரியத்தின் இரண்டு இயக்குனர்கள் உறுப்பினர்களாகவும் செயல்படுகின்றனர்.
 3. நிதித்துறை கண்காணிப்பு வாரியம் வங்கி கண்காணிப்புத் துறை (டி.பி.எஸ்), வங்கியில்லாத கண்காணிப்பு துறை (டி.என்.பி.எஸ்), நிதி நிறுவனப் பிரிவுகள் (எப்.ஐ.டி) போன்றவற்றின் செயற்கூறு மற்றும் இதன் கண்காணிப்பு ஒழுங்கு முறைகள் வழிமுறைகளை வழங்கி வருகிறது.
செயற்கூறுகள்
 1. வங்கி கண்காணிப்பு முறைகளை மாற்றியமைத்தல்
 2. பணியிடத்தில் இல்லாமலேயே கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்தியது.
 3. தணிக்கையாளர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல்
 4. கண்காணிப்பு நிறுவனங்களின் உள்தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல்.
நிதித்துறை கண்காணிப்பு வாரியத்தின் (பிஎப்எஸ்) தணிக்கைச் சிறு குழு தற்போது உள்ள ஒரே சமயத்தில் செய்யும் தணிக்கை முறை, அதன் தனிப்பட்ட தணிக்கையாளர்கள் நியமனம், நிபுணர்களின் விதிமுறைகள், சட்டத்தின் கீழ் இருக்கும் தணிக்கையாளர்களின் அறிக்கைகளின் தரம், மற்றும் காப்புறுதி, பெரிய அளவிலான வெளிப்படை மற்றும் கண்காணிக்கப்பட்ட நிறுவனங்கள் வெளியிட்ட கணக்குகளை திறந்து வைத்து அனுப்புதல் போன்றவைகளை கண்காணிக்கும்.

தற்போதைய நோக்கம்
 1. நிதி நிறுவனங்களை கண்காணித்தல்
 2. ஒன்றிணைக்கப்பட்ட கணக்கிடல்
 3. வங்கி தவறுகளில் உள்ள சட்ட இடுவுகள்
 4. இயங்காத சொத்துக்களில் அதன் மதிப்புகளை கணக்கிடும் வேலைகளில் திசைதிருப்புதல்.
 5. வங்கிகளுக்கு கண்காணிக்கும் மதிப்பு மாதிரிகளைச் செய்தல்.
ஆதாரம் : http://www.rbi.org.in/commonman/English/scripts/organisation.aspx
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016