வங்கி மற்றும் கடன் :: பாரத ரிசர்வ் வங்கி (RBI)
4. முக்கயச் செயற்கூறுகள்

நிதி ஆணையம்
  1. நிதிக் கொள்கைகளை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்
  2. குறிக்கோள் : விலையை நிலையாக வைத்துக் கொள்ளுதல் மற்றும் உற்பத்தி துறைக்கு, தேவையான கடன் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
நிதித்துறையை இயக்குதல் மற்றும் கண்காணித்தல்
  1. நாட்டின் வங்கி மற்றும் நிதிமுறை செயற்கூறு வேலைகள் மற்றும் அகல அளவுகளைப் பரிந்துரைப்பது
  2. குறிக்கோள் : பொது மக்களுக்கு இந்த முறையில் நம்பிக்கை ஏற்படுத்துவது, வைப்பு நிதியாளர்களின் நம்பிக்கையை பாதுகாத்தல் மற்றும் பொது மக்களுக்கு செலவுக்கு ஏற்றாற்போல் வங்கி சேவைகளை ஏற்படுத்துதல்.
அன்னியச் செலாவணி மேலாளர்
  1. அன்னியச் செலாவணி மேலாண்மை விதி, 1999 நிர்வகித்தல்.
  2. குறிக்கோள்: வெளிப்புற வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துதல் போன்றவற்றிற்கு உறுதுணை செய்தல் மற்றும் இந்தியாவில் அன்னியச் செலாவணி சந்தையை மேம்படுத்துதல் மற்றம் நிர்வகித்தல்.
பணம் கொடுப்பவர்
  1. நாணயம் மற்றும் பணம் போன்றவை சுற்றலில் ஈடுபட தகுதியற்றவைகளை அழித்துவிட்டு புதுப் பணம் மற்றும் தானியங்களை அறிமுகப்படுத்துதல்.
  2. குறிக்கோள் : பொது மக்களுக்கு பணம் மற்றும் நாணயங்களை தேவையான அளவு நல்ல தரத்தில் வழங்கும் படி செய்தல்.
மேம்பாட்டு பங்கு: தேசிய குறிக்கோள்களுக்கு உறுதுணை செய்யும் வழியில் மேம்பாட்டு செயற்கூறுகளை செய்தல்.

இதர செயற்கூறுகள்
  1. அரசுக்கு வங்கி : மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வணிக வங்கியாகவும் மற்றும் அதன் அரசு வங்கியாகவும் செயல்படுகிறது.
  2. வங்கிகளுக்கு வங்கி : தனிப்பட்ட வங்கிகளின் கணக்குகள் அனைத்தையும் நிர்வகித்தல்.
அலுவலகங்கள்: 22 மண்டல அலுவலகங்கள் உள்ளது. பெரும்பாலும் மாநில தலை நகரங்களில் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அலுவலகம்: பி. கோஸ், மண்டல இயக்குநர், கோட்டை கிளாசிஸ், ராஜாஜி சாலை, சென்னை - 600 001

5. இந்தியப் பொருளாதாரம் பற்றி பாரத ரிசர்வ் வங்கியின் இணையதள தகவல்தளம்

பாரத ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அதன் நீண்ட காலத் தொடர் தரவுகளான நிதித்துறை, நிதிச் சந்தை, வெளிப்புறத் துறைகள், பொது நிதித்துறை, நிறுவன நிதி போன்றவற்¨ற உபயோகிப்பவர்களுக்கும் எளிதான வகையில் இணையதளம் மூலம் ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர் மற்றும் இதர உபயோகிப்பாளர்களுக்கு விண்ணப்பம் பெற்றும் உபயோகித்துக் கொள்ளலாம். இந்தத் தகவல் தளம் 216 நிலையியல் அறிக்கைகள், 74 பாடவாரியாக எளிதான வினவல் முன் வடிவுகள், 53 எளிதான வினவல் முன் வடிவுகள் (அலைவரிசை வாரியாக), அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வலைம¨னப் பக்கமான (ww.rbi.org.in) இருந்து நிலையியல் தலையான “இந்தியப் பொருளாதாரத்தின் தகவல் தளம்” (DBIE) அல்லது அதன் வலைதளமான URL http://dbie.rbi.org.in மூலம் பெற்றுக் கொள்ளலாம். தரவுகள் வரிசையின் தொகுப்பை பெரியதுபடுத்தி குறிப்பிட்ட இடைவெளியில் அதன் கருத்துக்கள் பெற்றும் அது தொடர்பான தரவு வரிசைகளை ரிசர்வ் வங்கியின் தரவு சேமிப்புக் கிடங்கில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் : 
http://www.rbi.org.in/commonman/English/scripts/organisation.aspx
Economic and Political Weekly, April 25, 2009 Vol. XLIV No.17.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016