உயிரி எரிபொருள் :: ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள்

உயிரிஎரிசக்தி சிறப்பு மையமானது ஜீன் 2006-ல் வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம். தநாவேப, கோயமுத்தூரின் கீழ் நிறுவப்பட்டது. இம்மையம் காட்டாமணக்கு சாகுபடி, பயோடீசல் உற்பத்தி முறைகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை அதிக அளவு உபயோகப்படுத்துபவர்களை சென்றடைதல் போன்ற செயல்களில் முன்னிலை வகிக்கிறது.

1.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி பெற்ற திட்டம்: வேளாண் கல்வி வளர்ச்சி மற்றும் வலிமையடைதல்- “உயிரி எரிசக்தியை மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்துதல்”

    • இம்மையத்தின் காட்டாமணக்கிள் 11 வகைகளும், பல இட ஆராய்ச்சி திடலில் 6 வீரிய இரகங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன
    • இம்மையம் காட்டாமணக்கு சாகுபடி முறைகளை முறைப்படுத்தியுள்ளது
    • காட்டாமணக்கு விதைகளின் தொல்லியை உரிப்பதற்கு கைகளால் இயங்கும் மற்றும் மின்னணுவில் இயங்கும் கருவியை வடிவமைத்துள்ளது இம்மையம்
    • எண்ணெய் எடுப்பது சுலபமாக இருக்க விதைகளை பிழிவது உதவி புரியும். இதற்கு சிறிய அளவிலான பிழியும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது
    • விதைகளிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு வணிகரீதியாக எண்ணெய் எடுக்கும் தளம் மற்றும் சிறிய அளவு நீராவி வெப்பமேற்றி ஆகியவற்றுடன் பிழிந்து வடிகட்டும் கருவியும் நிறுவப்பட்டுள்ளது
    • நாள் ஒன்றுக்கு 250 லிட்டர் உற்பத்தியின் ட்ரான்ஸ்எஸ்டரிஃபிகேஷன் தளம் உன்றையும் நிறுவியுள்ளது
    • காட்டாமணக்கு சாகுபடியை பிரபலமடையச் செய்ய இம்மையம் விவசாயிகள், அரசுதுறைகளின் பயிற்சியாளர்கள், உயிரிஎரிசக்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பயிற்சி அளிக்கின்றது

2. தமிழ்நாட்டில் காட்டாமணக்கு சாகுபடியை அதிகப்படுத்துதல்:

தமிழக அரசின் நிதி உதவி பெற்று இத்திட்டம் இயங்குகிறது தமிழகத்தில் காட்டாமணக்கு சாகுபடியை 5 வருடங்களில் 1,00,000 எக்டர் பரப்பளவிற்கு (20,000 எக்டர் ஒரு வருடத்தில்) உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இம்மையத்தில் ஒரு வருடத்திற்கு தேவையான 332 லட்சம் நாற்றுகளை (20,000 எக்டருக்கு தேவையான அளவு) உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மையம் 15 த.நா.வே.ப மையங்களுடன் இணைந்து காட்டாமணக்கு நாற்றுகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. மேலும் அரசால் தேர்வு செய்யப்பட்ட 11 உயிரி எரிசக்தி நிறுவனங்களும் இதனில் 700 வேளாண் அலுவலர்கள் / உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் 200 அரசு தாரா நிறுவனங்கள் / உயிரி எரிபொருள் தொழில் முனைவோர் ஆகியோருக்கு காட்டாமணக்கு சாகுபடி மற்றும் உயிரி எரிபொருள் உற்பத்தி பற்றி பயிற்சி அளிக்கப்படுகின்றது.

3. முதலீடு வருவாய் திட்டம்: மர எண்ணெய் வித்துக்களின் விதை மற்றும் நாற்றுகளுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை.

25 டன்கள் எடை கொண்ட காட்டாமணக்கு விதைகளை பங்குதாரர்களுக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள்:

    வ.எண் திட்டத்தின் தலைப்பு ஆராய்ச்சியாளர்கள் நிதியுதவி அளிப்பது இயங்கும் காலம்
    1.

    இ.வே.ஆ.க - உயிரி எரிசக்தியை மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்துதல்

    முனைவர்.எம். பரமாத்மா, பேராசிரியர் மற்றும் முதன்மை அலுவலர், உயிரி எரிபொருள் சிறப்பு மையம்.
    முனைவர்.பி.வெங்கடாச்சலம் பேராசிரியர் மற்றும் தலைவர் உயிரி எரிசக்தி துறை

    இ.வே.ஆ.க 6 வருடங்கள்
    2.

    தமிழ்நாடு அரசு”தமிழகத்தில் காட்டாமணக்கு சாகுபடியை அதிகப்படுத்துதல்

    முனைவர்.எம். பரமாத்மா, பேராசிரியர் மற்றும் முதன்மை அலுவலர், உயிரி எரிபொருள் சிறப்பு மையம்.

    தமிழக அரசு 5 வருடங்கள்
    3.

    மர எண்ணெய் வித்துக்களின் விதை மற்றும் நாற்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை

    முனைவர்.எம். பரமாத்மா, பேராசிரியர் மற்றும் முதன்மை அலுவலர், உயிரி எரிபொருள் சிறப்பு மையம்.

    த.நா.வே.ப 5 வருடங்கள்
    4.

    மர எண்ணெய் வித்துக்களின் தரமான நாற்றுகளை மேம்படுத்துதல் மற்றும் மாதிரி பண்ணை உருவாக்குதல்

    முனைவர்.எம். பரமாத்மா, பேராசிரியர் மற்றும் முதன்மை அலுவலர், உயிரி எரிபொருள் சிறப்பு மையம்.

    நோவாட் (NOVOD) வாரியம் 2 வருடங்கள்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013