உயிரி எரிபொருள் :: சால்வடோரா

 

தாவரவியல் பெயர் : சால்வடோரா பெர்சிக்கா
குடும்பம் : சால்வடோரேசியே

குஜராத், இராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் பரவலாகவும், மேலும் ஆந்திரா, கர்நாடகா மற்றம் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் குறைவாகவும் பரவி உள்ளது. இந்த மரம் பசுமை மாறா பல்லாண்டு தாவரமாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் காய்க்கும். காய்ந்த விதைகளில் 30-40 சதவிகிதம் உண்ணத்தகாத எண்ணெய் சத்து கொண்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சோப்பு தயாரிக்கும். தொழிற்சாலைகளில் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக பயன்படுகிறது. சால்வடோரா பலதரப்பட்ட மண்வகைகளிலும் வளரக்கூடியது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013