தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில் நுட்பத்தின் ஆய்வுகள் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்துறையின் செயல்பாடுகள்

கீழ்க்கண்ட முக்கிய ஆய்வுகள் விவசாயத் தேவைகளுக்காக, இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 
மரபுப் பரிமாற்றம்

  • மரபணுமாற்றப்பட்ட அரிசி நோய் மற்றும் பூச்சியினை எதிர்க்கும் திறனுடன் உள்ளது.

  • மரபணு மாற்றப்பட்ட அரிசி ஊட்டச்சத்து தரத்துடன், ‘வைட்டமின் ஏ’ மற்றம் இரும்பு சத்துடன் ‘ தங்க அரிசி’ உருவாக்கப்பட்டுள்ளது.

  • வறட்சி மற்றும் உவர் நிலத்தில் வளரும் நெல் மற்றும் நிலக்கடலை மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • மரபுப் பரிமாற்றப்பட்ட ‘கத்திரி் பூச்சியை எதிர்க்கம் திறனுடன் உள்ளது.

  • மரபுப் பரிமாற்றப்பட்ட பப்பாளி- பப்பாளி வளையப்புள்ளி வைரஸையும், மரபுப்பரிமாற்றப்பட்ட வாழை- முடிக்கொத்து வைரஸையும் எதிர்க்கும் தன்மையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • மரபணு மாற்றப்பட்ட மரவள்ளி, நிலக்கடலை மற்றும் தக்காளி இவைகளில் ‘வைரஸ்’ நோயை எதிர்க்கும் திறனுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • மரபுப் பொறியியல் பருத்தியில் காய்ப்புழுவிற்கு ‘பி.டி’ மரபணு பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • பைடிக் அமிலம் குறைவாக இருக்கும் சோளத்தில் மேம்படுத்தப்பட்டு அவை கால்நடை உணவாக பயன்படுத்தப்படுகிறது.

  • கரும்புப் பயிரில் சில மரபணு மாற்றம் செய்யப்பட்டு, சிவப்பு அழுகல் நோய்க்கு எதிர்ப்புத் திறனுடன் மேம்படுத்தப்பட்டுளள்ளது.

  • ‘ஜாட்ரோபா’ பயிரில் மரபணு மாற்றப்பட்டுள்ளது.

Bio Tech

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013