உயிரித் தொழில்நுட்பம் :: பி.டி. பருத்தி

பி.டி.பருத்தியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள்: 

இந்தியாவில் பி.டி.பருத்தியின் நன்மைகள் மற்றும் தீமைகள்

பி.டி. பருத்தியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள்: 

எஸ். மாணிக்கம், கே.என். குருராஜன், மற்றும் என்.கோபாலாகிருஷ்ணன் 
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், மண்டல நிலையம், கோயமுத்தூர், இந்தியா.

சாராம்சம்: 

பருத்தி இந்தியாவில் முக்கியப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் “வெள்ளைத் தங்கம்” எனவும் அழைக்கப்படும். இந்தியாவில் 45% அளவிலான மொத்தப் பூச்சி கொல்லிகள் இப்பயிருக்கே செலவிடப்படுகிறது. பருத்தியை தாக்கும் முக்கிய பூச்சிகளான தத்துப்பூச்சி, வெள்ளைஈ, அஸ்வினிப்பூச்சி, மற்றும் இலைப்பேன் முதலியவற்றால் அதிக பாதிப்புகள் தோன்றுகிறது. அதேபோல் காய்ப்புழுக்களான (அமெரிக்கன், இளஞ்சிவப்பு மற்றும் புள்ளிகள்) இலை உண்ணும் புழுக்களினால் அதிக சேதமான 40-70% வரை நிகழ்கிறது. ஆகவே இவற்றைக் கட்டுப்படுத்த பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த மரபணுவான “நஞ்சுபடிகம் –எண்டோ டாக்சின்” புரதமானது மண்ணில் உள்ள பாக்டீரியாவான “பேசில்லஸ் துறின்ஞ்சியன்ஸிஸ்” மூலமாகப் பெறப்படுகிறது. 

பி.டி.மரபணு மாற்றப்பட்ட பருத்தி (மான்சான்டோ –போல்கார்டு) அமெரிக்காவில் வெற்றிகரமாக காய்ப்புழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூன்று பி.டிபருத்தி கலப்பின இரகங்கள் இந்தியாவில் 2002-ஆண்டுகளில் 72,000 ஏக்கர்களாக இருந்தது. 2006-2009ல் 30,000 ஹெக்டேர்க்கு உயர்ந்தது. ஆகவே, இந்திய அரசின் மரபுப்பொறியியல் அனுமதி அளிக்கும் கழகமானது 59 பி.டி கலப்பின இரகங்களை பருத்தி பயிரிடும் மண்டலங்களில் மாதிரி ஒத்திகையானது அனைத்து இந்திய பருத்தி ஒருங்கியைப்பு மேம்பாடு திட்டம் மூலம் விவசாயிகளின் நிலத்தில் செய்யப்பட்டது. 

பி.டி பருத்தி கலப்பினமானது, அமெரிக்ககாய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்தி பூச்சிக்கொல்லிகளுக்கான செலவினைக் குறைத்து, அதிக இலாபத்தைத் தருகிறது. பி.டி.பருத்தியானது சுற்றுச்சூழலுக்கு எவ்வித கேட்டினை ஏற்படுத்தாமல், அதே சமயம் நன்மை செய்யும் உயிர்களுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை இப்புதிய தொழில்நுட்பம் மூலம், உற்பத்தி செலவு குறைப்பு, அதிக இலாபம், பண்ணையத்திலுள்ள இடர்பாடு குறைவு, மற்றும் வணிகரீதியிலான பருத்தியின் உற்பத்தி முதலியன பெறப்படுகிறது.

BT Cotton

அறிமுகம்: 

பருத்தி நம் நாட்டின் முக்கிய பணப்பயிராகும். நாட்டின் 75% மூலப் பொருட்களின் தேவைக்கும், 60 மில்லியன் மக்களின் வேலை வாய்ப்பிற்கும் உதவியாக உள்ளது. இந்தியாவவில் இறவைப் பாசனம் மூலம் குறைந்த அளவு உற்பத்தியே பெற முடிகிறது. இந்தியா பருத்தி உற்பத்தி பரப்பளவில் முதலிடமும், உற்பத்தி அளவில் சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடமும் பெறுகிறோம். இந்தியாவில் 4 வளைகள், பயிரிடப்படுகிறது. ஃகாசிஃபியம் ஹைர்சூட்டம், ஃகாசிஃபியம் பார்மன்ஸ், ஃகாசிஃபியம் ஆர்போரியம், மற்றும் ஃகாசிஃபியம்ஹெர்பேசியம் ஆகும். கலப்பின இரகப் பருத்தியானது மொத்தப்பரப்பில் 45%மும், உற்பத்தியில் 55%மும் உள்ளது. 

பருத்தியின் உற்பத்தித்திறன் மற்றும் தரமானது சுதந்திரம் பெற்ற காலத்தில் 2.79 மில்லியன் பேல்கள், 170 கிலோ கிராம் ஒரு பேல் அளவு. இவ்வாறு இருந்தது, 24 மில்லியன் பேல்களாக உற்பத்தி பெருகியது. தற்போது இந்தியாவில் 6 முதல் 120 “கவுண்ட்கள்” கொண்ட பல்வேறு வகைகளில் சுருளில்லாத நடுத்தரமானது, நீளமானது, மிக நீளமானது, மற்றும் நயமான பருத்தியில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் 460 கிலோகிராம் “லிண்ட்கள்” ஒரு ஹெக்டேருக்குப் பெறப்படுகிறது.

Cotton

பருத்தியானது பல்வேறு பூச்சியினங்களரல் பாதிக்கப்டுகிறது. அவைகள்:

  1. சாறு உறுஞ்சும் பூச்சிகள்: அசுவினிப்பூச்சி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ
  2. மென்று திண்ணும் பூச்சிகள்: காய்ப்புழுக்கள், இலை திண்ணும் புழுக்கள்

முதலியனவாகும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் 45% அளவுக்கு பருத்திக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. ஆகவே பூச்சிக்கொல்லி அளவைக் கட்டுப்படுத்த “ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை”, பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறன் பி.டி. பருத்தி தொழில்நுட்பமானது. காய்ப்புழுக்களை ஒழிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

பி.டி.பருத்தியின் தேவை: 

மரபணு எதிர்ப்புத்திறமானது பூச்சிக்கட்டுப்பாடு மேலாண்மையில் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, வெள்ளைஈ, முதலியவற்றைக் கட்டுப்படுத்த எதிர்ப்புத் திறன் கொண்ட கலப்பின் இரகம் கொண்டு இந்தியாவில் கட்டுப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் மண்ணில் உள்ள “பேசில்லஸ்: எனும் பாக்டீரியாவின் மரபணுவைக் கொண்டு “பி.டி” புரத நஞ்சு படிகம் “S”- “என்டோ டாக்சின்” மூலம் மரபணு மாற்றப்பட்ட பருத்தி “போல்கார்டு –மான்சாண்டோ” வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இவை பருத்தியில் காய்ப்புழுக்களை அழிக்கும் தண்மை கொண்டதாக உள்ளது. (90 நாட்கள் வரை).

முதலில் வர்ததக ரீதியாக வந்த பி.டி பருத்தியானது அமெரிக்காவின் “மான்சான்ட்டோ” நிறுவனத்தின் “போல்கார்டு” இவற்றில் :கிரை 1 ஏ.சி” மரபணு “பேசில்லஸ் துரின்சியன்சிஸ்” மூலமும், உருவாக்கப்பட்டது. பி.டி. பருத்தியானது, சீனா, ஆஸ்த்திரேலியா, மெக்ஸிகோ, தென் ஆப்ரிக்கா, அர்ஜென்டைனா, இந்தியா, இற்தோனேசியா ஆகிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது. உலக அளவில் பி.டி பருத்தியின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தற்போது 12% பருத்தியானது உலகில் மரபணு மாற்றப்பட்ட கலப்பின இரகமே ஆகும். இது 5-7 ஆண்டுகளில் 50% அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதற்கு முன்னர் பி.டி.பருத்தியின் நிலை: 

மார்ச் 10, 1995 இந்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையானது, 100 கிராம் அளவுள்ள மரபணு மாற்றப்பட்ட “மஹிகோ” விதையின் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது. இந்த இரகத்தில் “பேசில்லஸ் துரின்சியன்சிஸ்” ன் “கிரை 1.ஏ.சி” எனும் மரபணு உள்ளது.

ஏப்ரல் 1998: 
மான்சான்ட்டோ- மஹிகோ இடையே ஒப்பந்தம். “மான்சான்ட்டோ” சிறிய சோதனை வயல் மூலம், பி.டி.பருத்திவிதை 100 கிராம் அளவுக்கு ஒரு சோதனை வயல் வீதம் அளித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. 

ஜனவரி 1999:
மரபணு மாற்றியமைக்கும் மறுபரிசீலனைக்குழுவானது, 40 இடங்களில் மேற்கொண்ட சோதனையில் மிகவும் திருப்தி அடைந்தது. ஏப்ரல் 12 அன்று நேரடியாக மஹிகோ 10 இடங்களில் சோதனையை மேற்கொண்டது.

2000-2002: 
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது சோதனைக்காக பல்வேறு வகைகளில் அனைத்திந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டு திட்டம் மூலமாக மத்திய மற்றும் தென் மண்டலங்களில் நடத்தின.

பிப்ரவரி 20,2002:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது பி.டி. பருத்தியை பயிரிடுவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித கெடுதலும் இல்லை என ஆதாரங்களை சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அளித்தது. அதேபோல் மரபுப் பொறியியல் மற்றும் அனுமதி அளிக்கும் கழகமானது, பி.டி.பருத்தியை வர்த்தகரீதியாகப் பயிரி அனுமதி அளிக்க வேண்டி “சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அளித்தது”. 

மார்ச் 25, 2002:
வர்த்தகரீதியாகப் பயிரிட பி.டி.பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மரபுப்பொறியியல் மற்றும் அனுமதி அளிக்கும் கழகத்தின் மூலம் “மஹிகோ” நிறுவனம் 2002ல் 29,307 ஹெக்டேராக இருந்தது. 2005ல் 12,50,833 ஹெக்டேராக உயர்ந்தது. 2006ல் 30,00,000 ஹெக்டேராக உயர்ந்தது. மாநிலம் வாரியான வளர்ச்சி பரப்பு அட்டவனை 2ல் உள்ளது.

Cotton

இதன் மூலம் மொத்த சாகுபடியில் 40% அளவுக்கு பி.டி.பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இவை 40 லட்சம் பாக்கெட்டுகள், ஒவ்வொரு வருடமும், 640 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. எனவே 52 வித்தியாசமான பி.டி.பருத்தி கலப்பின இரகங்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன (அட்டவணை 3).

பி.டி.பருத்தியும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பும்: 

பி.டி.பருத்தியானது “ஹெலிக்கோவெர்பா சியா” மற்றும் “ஹெலியோதிஸ் வைரசன்ஸ்” முதலிய காய்ப்புழுக்களை மிக நன்றாக கட்டுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீமையும் இன்றி விளைச்சலும் அதிகரிக்கிறது. பி.டி.மரபணுவானது ஆரம்பகட்ட வளர்ச்சியிலேயே அதன் காய் உருவாகும்போதே அதிக வீரியத்தன்மையுடன் உள்ளது. 1/3 பங்கு அளவு தரமான நயமான நூலிழைகளை பயிரானது கொள்கிறது. 

பி.டி.பருத்தி மற்றும் பி.டி.பருத்தி அல்லாத பருத்தி முதலியவற்றுடன் ஆராயும்போது காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் “பொருளாதார நிலையை” ஆராயும்போது பி.டி.பருத்தியானது நன்கு கட்டுப்படுகிறது. அதேபோல் பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு முதலியவற்றில் ஆராயும்போது குறைந்த அளவு செலவே பி.டி.பருத்தியினை பயிரிடுவதால் ஆகின்றது. இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால், உலக அளவில் மக்களின் பாதுகாப்பு, பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் கேடுகள், காற்றுமாசுகேடு முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு அதேபோல் வயலில் வேலை செய்வோர் மற்றும் அண்டை அயலாருக்குப் பாதுகாப்பாக உள்ளது.

BT Cotton BT Cotton

காய்ப்புழு பாதிப்பிலிருந்து குறைதல், மற்றும் பூச்சிக்கொல்லி அடித்தலின் குறைப்பு: 

90 நாட்களுக்கு பிறகே, அனைத்து செய்தி தொகுப்புகளும் பி.டி.பருத்தி கலப்பின் இரகத்தின் பொருளாதார சேதநிலை தெரியவந்தது. அதேபோல் பி.டி.பருத்தி அல்லாத இரகங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனைகளில் பொருளாதார சேதநிலை அளவுகோல் 60 நாட்களுக்குப் பிறகே தெரிய வந்தது. “ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜிரா” எனும் காய்ப்புழுவானது, பி.டி.பருத்தியைவிட பி.டி. அல்லாத பருத்தியில் அதன் தாக்குதல் அதிகமாகவும் இருந்தது. பி.டி.கலப்பின இரகத்தினை மெக்-184, மற்றும் மெக்-12 இவற்றில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறிய காய்களாகவும் அதிக தாக்குதலுக்கு ஆளாகியும் இருந்தது. ஆனால் பி.டி.கலப்பின இரகமானது அவ்வாறு தாக்குதல் அடையவில்லை. 50% அளவுக்கு ஹெலிக்கோவெர்பா காய்ப்புழுவானது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் போல்கார்டு மெக்12, போல்கார்டு மெக்162, போல்கார்டு மெக்184. இவற்றின் மூலம் புள்ளி காய்புழு 30-40% இளஞ்சிவப்பு காய்ப்புழு 60-80% அளவுக்கு தென் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டது. 

அதே போன்று அதிகபரப்பளவில் பி.டி.பருத்தியினை பயிரிடும்போது பூச்சிக்கொல்லிகளுக்கான செலவினம் குறைகிறது. 40-60% பணம் மிச்சமாகிறது. அவ்வாறு அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகம் குறைவதால், மகசூல் அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே உலகளவில் அதன் சாகுபடி பரப்பு அதிகரிக்கின்றன. அதேபோன்று முன்எச்சரிக்கை பூச்சிக்கொல்லி தெளிப்பானது ஒரு பருவத்திற்கு 7-10 முறையும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் பகுதியில் 1986-2001ம் ஆண்டுகளில் 16-20 முறையும் தெளிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் தீங்கு ஏற்படுகின்றன. விளைச்சலானது, பி.டி.பருத்தி பயிரிடுவதால் அதிகரிப்பதோடு, 2-3 முறை மட்டுமே பூச்சிக்கொல்லி தெளிப்பும் நடைபெறுகிறது. 

கடந்த 4 ஆண்டுகளில் காய்ப்புழுவானது தாக்குதல் இல்லாமையால், பூச்சிக்கொல்லி தேவையும் குறைந்துள்ளது. சீனாவில் பி.டி.பருத்தியினால் 14 முறை பூச்சிக்கொல்லி தெளிப்பு குறைவாகவும், தென் ஆப்ரிக்காவில் 7 முறையும். இந்தோனேசியாவில் 5 முறையும், ஆஸ்த்திரேலியாவில் 6 முறையும் குறைந்துள்ளது (அட்டவணை 5).
உயிர்ப்பாதுகாப்புச் சோதனை மற்றும் இலக்கு - இல்லாத உயிரினங்களின் நஞ்சு அளவு மதிப்பீடு. உயிர்ப்பாதுகாப்புச் சோதனை என்பது ஆடுகள், மாடுகள், எருமைகள், மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு உண்டான பாதுகாப்பு பற்றியதாகும். உணவு - பாதுகாப்பு ஆய்வானது, பி.டி.பருத்திவிதைத் தூளானது, ஆடுகள், எருமைகள், பசுக்கள், முயல்கள் மற்றும் மீன்களுக்கு அளிக்கப்பட்டன. அச்சோதனையின் முடிவுகளில் எவ்வித பாதிப்பும் மேற்கண்ட விலங்குகளுக்கு தற்படவில்லை. இதே போன்ற சோதனைகளை
  1. தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி நிறுவனம். கர்னால்

  2. மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம். பார்லி

  3. தொழிற்துறை நஞ்சு ஆராய்ச்சி மையம். லக்னோ

  4. தேசிய ஊட்டச்சத்து நிறுவனம். ஹைதராபாத்

  5. தேசிய மீன் வளபடிப்பக நிறுவனம். மும்பை

  6. ஜி.டி.பந்த் வேளாண்மைப் பல்கலைக்கழகம், பந்த் நகர்

முதலியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கிரை 1 ஏ.சி. முக்கிய நஞ்சாக பருத்தி காய்ப்புழுவிற்கும் (இளஞ்சிவப்பு மற்றும் புள்ளி காய்ப்புழு). காவடிப்புழு மற்றும் கம்பளிப்புழுக்கும் உள்ளது. பி.டி.இலக்கு இல்லாத உயிரினங்களான உதவிகரமான பூச்சிகள், பறவைகள், மீன், விலங்குகள், மற்றும் மனித உயிரினங்களுக்கு எவ்வித தீங்கானது கிடையாது. இதே ஆய்வை உலகம் முழுவதும் செய்யப்பட்டதில், ஒரே மாதிரியான தீர்வுகளே வந்துள்ளன. 

சில ஆய்வுகளில், பூச்சியின் ஒட்டுண்ணிகளும், இரை விழுங்கிகளும் அழிவதாக தீர்வுகள் வந்துள்ளன. ஆனால் நன்மை செய்யும் இரை விழுங்கிகளான “வண்டுகள்” அதன் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. சாதாரன பருத்தியில் பூச்சிகளைக் கொல்வதற்கு 3-5 தடவை மட்டுமே மருந்தானது தெளிக்கப்படுகிறது. மரபு வழியில் அடிக்கப்பட்ட மருந்துத் தெளிப்புடன் ஒப்பிடும்போது, மிகக்குறைந்த அளவே பக்க விளைவுகள் தோன்றுகிறது.

BT Cotton

வயல்வெளியில் நன்மைகள் மற்றும் பொருளாதார முக்கியத்துவம்:

1998 லிருந்து 2001 வரையிலான பி.டி.பருத்தியில் மேற்கொண்ட சோதனை ஆய்வில் கிரை1. ஏ.சி.மரபணு வீரியமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் காய்ப்புழுக்களை அழிப்பதில் உள்ளது. பி.டி.பருத்தியானது, 40% அதிக மகசூலைத் தருகிறது. அதே போன்று 50% அளவுக்குப் பூச்சிக்கொல்லி தேவையும் குறைகிறது. இதனால் ரூபாய் 2500 / ஒரு  ஹெக்டேருக்கு மிச்சப்படுத்துவதுடன் ரூபாய் 3500 லிருந்து ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேலும் ஒரு  ஹெக்டேருக்கு இலாபம் கிடைக்கின்றது. 

மஹிகோ நடத்திய தேசிய அளவிலான சர்வேயில், மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில் நடததியதன் தீர்வுகள் அட்டவணை 6ல் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மகசூல் 29% அதிகரித்தும், இரசாயண மருந்துகள் தெளிப்பு 60% குறைந்தும் உள்ளது. நிகர இலாபமானது ரூபாய் 7.724 கோடிகள் கிடைக்கின்றது. மஹிகோ தன்னிச்சையாக நடத்திய 3000 விவசாயிகளிடமும் நிகர இலாபமானது ரூபாய் 18,325 (15,854-20,196) ஒரு ஹெக்டேருக்கு கிடைத்தது. 

சோதனை வயல் ஆய்வுகளை 2001ம் ஆண்டு 157 வயல்களில் 25 மாவட்டங்களில் மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மற்றும் தமிழ்நாடு முதலியவற்றில் உறிஞ்சும் பூச்சிகளை பி.டி. தொழில்நுட்பமானது கட்டுப்படுத்தியது என்று கணடறியப்பட்டது. பி.டி.பருத்தியினால் அமெரிக்காவில் 50 அமெரிக்கா டாலர் / ஒரு ஹெக்டேருக்கு அதிகமாகவும், 357 அமெரிக்கா டாலரிலிருந்து 549  டாலர் / ஒரு ஹெக்டேருக்கு, சீனாவிலும் 25-51 அமெரிக்கா டாலர் / ஒரு ஹெக்டேருக்கு தென் ஆப்பிரிக்காவிலும் கிடைத்தது.


BTCotton

எதிர்கால வாய்ப்புகள்:

கிரை 1 ஏ.சி.மரபணுவின் எதிர்பாற்றலை அதிகரிக்கச் செய்து, அதன் வீரியத் தன்மை குறையாமல் இருக்கும் படி செய்வது போல்கார்டு II மான்சான்டா (கிரை 1 ஏ.சி + கிரை 2 ஏ.பி) வி.ஜ.பி. கோம் சின்ஜென்டா (வி.ஜ.பி. 3G) மற்றும் டவ் அக்ரோ மூலம் புதிய கலப்பின பி.டி.பருத்தி இரகங்களாவது உற்பத்தி செய்யப்படுகிறது. 

அட்டவணை 4: 
பி.டி.பருத்தியின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் சோதனைகள் 2001:

கலப்பினம் மகசூல் குவிண்டால்/ ஹெக்டேர் மொத்த வருமானம் ரூபாய்/ ஹெக்டேர் பூச்சிக்கொல்லி விலை ரூபாய்/ ஹெக்டேர் நிகர வருமானம் ரூபாய்/ ஹெக்டேர்
மெக்-12 பி.டி. 11.67 21,006 1,727 16,854
மெக்-12 பி.டி. 13.67 24,606 1,413 20,768
மெக்-12 பி.டி. 14.00 25,200 1,413 21,362
லோக்கல் செக் 8.37 15,066 2,845 12,221
நேசனல் செக் 7.31 13,158 2,001 11,157

அட்டவணை 5: பி.டி.பருத்தியினால் நேர்ந்த பூச்சிக்கொல்லி தெளிப்பு குறைவு அளவு 2002-2003 ஆண்டு:

நாடு வருடம் மொத்த பருத்தி பரப்பு (லட்சம் ஹெக்டேர்) பி.டி.பருத்தியின் சாகுபடி பரப்பு பூச்சிக்கொல்லி தெளிப்பு எண்ணிக்கை
  லட்சம் ஹெக்டேர் % பி.டி.அல்லாதது பி.டி.பருத்தி
அமெரிக்கா 1996 62 20 33 5 2
மெக்சிகோ 1996 0.8 0.3 35 4 2
சீனா 1997 48 15 31 20 7
ஆஸ்திரேலியா 1997 4 1.5 36 11 6
அர்ஜென்டைனா 1998 1.7 0.1 5 5 2
தென்ஆப்ரிக்கா 1998 0.4 0.2 45 11 4
இந்தோனேசியா 2001 0.2 0.1 18 9 3
கொலம்பியா 2002 0.4 0.1 10 6 2
இந்தியா 2002 85 2.8 3 5 2
BT Cotton

அட்டவணை 6: 

சி. நில்சன் நிறுவன சர்வே முடிவு 2003:

மாநிலம் பூச்சிக்கொல்லி குறைப்பு மகசூல் அதிகரிப்பு நிகர இலாபம்
ரூபாய்/ ஹெக்டேர் % குவிண்டால்/ ஹெக்டேர் % ரூபாய்/ ஹெக்டேர் %
ஆந்திரா 4,594 58 4.9 24 12,717 92
கர்நாடகா 2,930 51 3.3 31 6,222 120
மகாராஷ்டிரா 2,591 71 3.6 26 5,910 66
குஜராத் 3,445 70 2.9 18 8,564 164
மத்தியபிரதேசம் 2,200 52 5.4 40 9,594 68
சராசரி 3,202 60 4.2 29 7,737 78

  பி.டி.பருத்தி கலப்பின இரகமானம் 2006-07ல் லட்சம் ஹெக்டேரில் சாகுபடிப் பரப்பின் அளவுகள்:

மாநிலம் மொத்த மாநிலப் பரப்பு பி.டி.பருத்தி கலப்பின  பரப்பு % பி.டி.பருத்தி பரப்பளவு
பஞ்சாப் 6.18 2.81 45.5
ஹரியானா 5.33 0.42 7.9
ராஜஸ்தான் 3.08 0.05 1.6
குஜராத் 23.90 4.07 17.0
மகாராஷ்டிரா 31.24 16.55 53.0
மத்தியப்பிரதேசம் 6.66 3.02 45.3
ஆந்திராப்பிரதேசம் 9.48 6.57 69.3
கர்நாடகா 3.56 0.80 22.5
தமிழ்நாடு 0.94 0.32 34.0
மொத்தம் 91.37 34.61 37.9

கலப்பின இரக வெளியீடு - தென் மண்டலம்:

வருடம் 2006 2007
பி.ஜி. I இன்ட்ரா ஹிர்சுட்டம் கலப்பினம் 22 27
பி.ஜி.II இன்ட்ரா ஹிர்சுட்டம் கலப்பினம் 2 8
பி.ஜி.I இன்டர் ஸ்பெசிவிக் கலப்பினம் 2 5

BT Cotton

 பி.டி.பருத்தியைப்பற்றி விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்வது என்பது மிகவும் சவாலான விசயம். மேலும் பி.டி. பருத்தியைப்பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து ஆவணங்கள் செய்யப்பட்டுள்ளது. நன்கு கற்ற விவசாயிகள் பி.டி.பருத்தியைப்பற்றி அறிந்துள்ளார்கள். மேலும் பி.டி.பருத்தியின் முழுமையான அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து, அவை அனைத்து வகைப் பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதில்லை என்று அறிவுறுத்த வேண்டும். மேலும் வளர்ந்து வரும் உயிரித் தொழில்நுட்ப வளர்ச்சியால் விவசாயிகளுக்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்களை மேம்படுத்துவதுடன், விவசாயிகளுக்கு அப்பயிர்கள் பற்றிய அறிவுத்திறனைப் பெற வழிவளை செய்ய வேண்டும். மத்திய அரசானது, அறிவியலார்கள் மூலமாக, பொது விழிப்புணர்வை உயிரித் தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திட வேண்டும்.

References
Barwale, R. B., V. R. Gadwal, U. Zehr and B. Zehr. 2004. Prospects for Bt cotton technology in India.AgBioForum, 7(1&2): 23-26.
Jayaraman, K.S., Jeffrey L. Fox, Hepend Ji and Claudia Orellana. 2005. Indian Bt gene monoculture: Potential time bomb. Nature Biotech., 23(20): 158.
Manjunath, T. M. 2004. Bt-cotton: Safety Assessment, Risk Management and Cost-benefit Analysis. International Symposium on “Strategies for Sustainable Cotton Production- A Global Visison” 1. Crop Improvement, 23-25 Nov. 2004, UAS, Dharwad, Karnataka, pp: 366-369.
Mayee, C.D., P. Singh, Punit Mohan and D.K. Agarwal. 2004. Evaluation of Bt transgenic intra hirsutumhybrids for yield and fibre properties. Ind. J. Agric. Sci., 74(1):46-47.
Mohan, K. and T. M. Manjunath. 2002. Bt cotton – India’s first Transgenic Crop, Crop J. Pl. Biol., 29(3):225-236.
Fig2: http://www.nysaes.cornell.edu/ent/biocontrol/pathogens/bt.diag.GIF
Fig3: http://www.thehindubusinessline.com/2006/05/20/images/2006052002550801.jpg

மேலே

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013