உயிரித் தொழில்நுட்பம் :: உயிரித் தொழில்நுட்பம் - அறிமுகம்


முக்கியப் பகுதிகள் : உயிரித் தொழில்நுட்பங்கள்

உயிரித் தொழில் நுட்பம் - ஒர் அறிமுகம்

‘உயிரியல் முறைகள், உயிர்க் காரணிகள் ஆகியவற்றில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சில குறிப்பிட்ட பயன்களுக்காக பொருட்களை மாற்றிவிடவோ(அ) உருவாக்கவோ செய்தல் ஆகும்’.  உயிரித் தொழில் நுட்பம் என்பது தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்காரணிகளான பாக்டீரியா முதலியவற்றைக் கொண்டு சில உயிரியல் முறைகளை மேற்கொள்ளுதல் ஆகும்.  பழங்களைப் பழுக்க வைத்தல், பாக்டீரியாவைக் கொண்டு மக்கச் செய்தல் ஆகியன மனிதனுக்குக் கிடைக்கும் பயன்கள் ஆகும்.

வரலாற்று அளவில் உயிரித் தொழில்நுட்பமானது, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண்மை தொழிற்சாலைகளில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.  சில தொழில்நுட்பங்கள் இவற்றில் மிகவும் பழமையானது.  உதாரணமாக நொதித்தல் மூலம்  நுண்ணுயிரிகளைக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீர், ஒயின், பாலாடைக் கட்டி, பிரட் மற்றும் ‘யோகர்ட்’ முதலியன உற்பத்தி செய்துள்ளது தெரியவந்துள்ளது.  மேற்கத்திய அறிவியல் ஆராய்ச்சியில் உட்கரு அமில மாற்றுத் தொழில்நுட்பமானது தற்போது பயன்படுத்தப்படுகிறது.  இந்த உட்கரு அமில மாற்றுத் தொழிற்நுட்பம் மூலம், உட்கரு அமிலம் (அ) திசு வளர்ப்பு முறையின் மூலம். மரபணு மாற்றமானது தாவரங்களில் ஓம்புயிரிகளைக் கொண்டு (உ.தா. அக்ரோ பாக்டீரியம் ஆனது மாற்று உட்கரு அமிலம் மூலம் தேவையான காரணிக்கு மாற்றப்படுகின்றது.

நவீன உயிரியல் தொழில் நுட்பம் என்பது கீழ்கண்டவற்றைச் செயல்படுத்துதல் ஆகும்

  • ஆய்வகத்தில் செய்யப்படும் நியூக்ளிக் அமில தொழில்நுட்பம், இதனுடன் உட்கரு அமிலம் மற்றும் நேரடியாக செல்லில் (அ) உயிரிகளில்  நியூக்ளிக் அமிலத்தைச் செலுத்துதல்
  • செல்லின் இணைவுகள், வகைப்பாட்டுக் குடும்பங்களில், இயற்கையாக உற்பத்தி செய்வதைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகிறது.  இவை, மரபுவழி பயிர்  இனப்பெருக்கத்தில் இத்தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதில்லை.

வாட்சன் மற்றும் கிரிக் பல ஆண்டுகளுக்கு முன்பு உட்கரு அமிலத்தின் வடிவத்தைக் கண்டறிந்தவுடன், நவீன உயிரித் தொழில்நுட்பமானது உருவானது.  அனைத்து உயிர்ப்பொருட்களான தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றில் உள்ள உட்கரு அமிலமே மரபணுத் தகவல்களைக் கொண்டுள்ளன.  இவை, எப்படி நாம் இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.

உட்கரு அமில வடிவம் கண்டறியப்பட்டவுடன், சில குணங்களான நமது தோலின் நிறம் மற்றும் சந்ததிக்கு சந்ததி பரவும் மரபணு நோய்கள் முதலியவற்றைப் பற்றி அறியப்பட்டது.  செய்யப்படும் ஆய்வுகள் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களும் சேர்ந்து நவீன உயிர்த் தொழில்நுட்பம் ஆகும்.

உயிர் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள்

நவீன உயிர்த் தொழில்நுட்பத்தின் முக்கியப் பயன்களில் சில :

  • தாவர மற்றும் விலங்குப் பொருட்கள் மேம்படுத்தப்படுவதுடன், அதன் தரமும் உயர்த்தப்படுகிறது - வேளாண்மை உயிர் தொழில்நுட்பம்

  • மேம்படுத்தப்பட்ட சில மருந்து வகைகள் (சில எதிர் உயிரிப் பொருள் மற்றும் இனக்கலப்பு மருந்துகள்) -மருத்துவ உயிர் தொழில்நுட்பம்

  • உயிரியல் தீர்வு மூலமாக மண் மற்றும் நீரை சுத்தம் செய்தல் - சுற்றுச்சூழல் உயிர்  தொழில்நுட்பம்

  • தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்தல் - தொழிற்முறை உயிர் தொழில்நுட்பம்

வேளாண்மை உயிரித் தொழில்நுட்பம்

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தின் வருமானத்தை நம்பியே வாழ்கிறார்கள்.  முன்பு அதிகரித்து காணப்பட்ட உற்பத்தித் திறன், தற்போது உலக சராசரி விளைச்சலுக்கும் குறைவான அளவையே இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள்.  மேற்கண்ட காரணங்களால், தற்போது பெரும்பான்மை நிலத்தில்,  பிழைப்பு மட்ட விவசாயமே நடைபெற்று வருகிறது.  எனவே இக்காரணங்களால் விளைச்சலை அதிகரிக்க தகுந்த இரகத்தினைக் கொண்ட, பிழைப்பு மட்ட விவசாயத்திற்கு மாற்றாக, செறிந்த வேளாண்மை சில சமயங்களில் செய்ய முடிவதில்லை. அவ்வாறு உருவாக்கப்படும் பயிரானது, குறைந்த நீரிலும், பூச்சி மற்றும் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் இருந்தால் மட்டுமே, விளைச்சல் நஷ்டம் குறையும்.  மரபு வழியில் செய்யும் பயிரை மேம்படுத்த, உருவாக்கப்படும் வகையினங்கள் உயிர் மற்றும் உயிரற்ற சூழலைத் தாங்கும்படி உருவாக்கவேண்டும்.  எப்படிப் பார்த்தாலும் இவற்றின் பயன்கள், பண்பகத் தொகுதி- கிடைக்கப்பெறாமை மற்றும் எதிர்ப்புத் திறன் நீங்கவிடுதல் இவைகளைப் பொறுத்து எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.  பயிர் மரபணுப் பொறியியல் (அ) மூலக்கூறு குறியீடு மூலம் பயிர் இனப் பெருக்கம் - இவைகள் மூலம் பயிர் இனப் பெருக்கமானது அவற்றின் எல்லை வரைமுறைகளைக் கடந்து விட முடியும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013