பயிர்ப்பெருக்கம்:: மரபியல் வேறுபாடுகளுடைய தாவரங்களின் தொகுப்பு (அல்லது) விதைக் கருவூலம்

பயிரிடக்கூடிய மற்றும் பாரம்பரிய இனப்பயிர்களின் ஜீன்களின் தொகுப்பு சேகரிக்கப்பட்டு, அவை பாதுகாப்பாக வைக்கப்படும் இடம் விதைக் கருவூலம் எனப்படும். இவை கீழ்க்கண்ட சில சிறப்புகளைப் பெற்றுள்ளன.

  1. பயிர்களின் ஒட்டுமொத்த மரபுக்கூறு வேறுபாடுகளைக் கொண்ட பெட்டகமாகத் திகழ்கிறது
  2. பாரம்பரிய இனத்தைச் சேர்ந்த பயிர்கள், பயிரிடப்படும் பயிர்கள், நவீன இரகங்கள் மற்றும் பலவற்றின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது
  3. ஜீன் வங்கி, பயிர் வேறுபாடுகளைக் கொண்ட இடங்கள், உழவர்களின் வயல்வெளிகள், விதைக் கம்பெனிகள் மற்றும் சில இடங்களிலிருந்தும் விதைக்கருவூலம் சேகரிக்கப்படுகிறது.
  4. இவைகள் உள்நாட்டிலிருந்தும் மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலிருந்தும் சேகரிக்கப்படுகிறது.

விதைக் கருவூலப் பாதுகாப்பு
மரபுக்கூறின் வினைத் தடுத்து பயிர்களின் மரபியல் பண்புகளை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இதில் இரு வகைகள் காணப்படுகின்றன.

  1. இயற்கை வழியிலேயே பாதுகாத்தல்
  2. ஜீன் வங்கிகளில் பாதுகாத்தல்

1.விதைவங்கி

வெவ்வேறு ஜீனோடைப்களின் விதைகள் சேமித்து வைக்கப்படுகிறது. சேமித்து வைப்படுவதை பொறுத்து விதைகள் இருவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1.ஆர்த்தோடாக்ஸ் விதைகள்

2.ரீகால்சிட்ரன்ட் விதைகள்

ஆர்த்தோடாக்ஸ் விதைகள்

இவ்வகை விதைகள் குறைந்த ஈரப்பதம் குறைந்த வெப்பநிலையில் நீண்ட காலம் அவற்றின் முளைப்புத்திறன் கெடமால் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது.
எ.கா. நெல், மக்காச்சோளம், சூரியகாந்தி, கோதுமை, கேரட், பப்பாளி, பருத்தி மற்றும் பல

ரீகால்சிட்ரன்ட் விதைகள்

இவ்வகை விதைகள் 12 முதல் 13 டிகிரி செல்சியசுக்கு கீழே சேமிக்கப்படும் பொழுது அவற்றின் முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது.
எ.கா எலுமிச்சை வகைகள், கோ கோ, காபி, ரப்பர், எண்ணெய் பனை, மா, பலா மற்றும் பல

விதைச் சேமிப்பு

சேமிக்கப்படும் காலத்தைப் பொறுத்து அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது

  1. 50 முதல் 100 ஆண்டுகள் வரை
  2. 10-15 ஆண்டுகள் வரை
  3. 3-5 ஆண்டுகள் வரை

2.தாவர வங்கி
வயல்வெளி அல்லது பழத்தோட்டங்களில் தாவரங்கள்  அல்லது பழமரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

குறைகள்

  1. பெரியகாய் இடம் தேவைப்படுதல்
  2. அதிகச் செலவு
  3. பூச்சி மற்றும் நோய்த் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்
  4. இயற்கைச் சீற்றங்கள்
  5. மனிதர்களின் தவறுகள்

3.கனு மற்றும் தண்டின் நுனிக்கான வங்கி
மெதுவாக வளரக்கூடிய தண்டின் நுனி மற்றும் கனு போன்றவைகளும் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

4.செல் மற்றும் செல் உறுப்புகளின் வங்கி
திரவ நைடாகணில் எம்ரியானிக் செல், சொடாட்டிக் செல் மற்றும் சிலவகைகள் சேமித்து வைக்கப்படுகிறது.

5.டீ என்ஏ வங்கி
விதைக் கருவூலத்திலுள்ள டீஎன்ஏக்கள் இவற்றில் சேகரித்து வைக்கப்படுகிறது.

விதைக் கருவூலத்தை மதிப்பிடுதல்
புறத் தோற்றப்பண்புகள், மரபியல் பண்புகள், பயிர் வினையியல் மற்றும் உயிர் வேதியியல் மட்டுமல்லாமல் மற்றும் பல பண்புகளைக் கொண்டு விதைக்கருவூலம்  மதிப்பீடு செய்யப்படுகிறது.

விதைக்கருவூலத் தகவல்களை பராமரித்தல்
ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நம்பர் கொடுக்கப்பட்டு, அவகைளின் பெயர், தோன்றிய இடம், சிறப்பியல்புகள் மற்றும் பல தகவல்கள் குறிப்பிடப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகின்றன.

தேசிய விதைக்கருவூல மையம் தேசிய தாவர மரபுக்கூறு நிறுவனம்
இது 1976 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டு தாவரங்களின் மரபுக்கூறு ரீதியான பல்வேறு தகவல்கள் மேலும் பல்வேறு பயிர்களுக்கான மரபுக்கூறு சார்ந்த முறையான திட்டங்கள் செல்கள் பராமரிக்கப்படுகின்றன. அவையாவன
எ-கா

  1. கத்தரி, தக்காளி, மிளகாய்
  2. பூசணி, குஜர்பிட்ஸ் வகைகள், வெள்ளரி
  3. பயறு வகைகள்
  4. வெங்காயம், பூண்டு
  5. கேரட், முள்ளங்கி
  6. முட்டை கோஸ், (சீனா வகை) மற்றும் சில

 இந்தியாவில் காணப்படும் ஜீன் வங்கிகள்

  1. மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம், நாகிபூர்
  2. மத்திய மலைப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், காசர்கோடு, கேரளா
  3. மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் சிம்லா
  4. மத்திய கிழங்கு வகை ஆராய்ச்சி நிலையம் ராஜமுந்திரி
  5. மத்திய கிழங்கு வகை ஆராய்ச்சி நிலையம் திருவனந்தபுரம்
  6. மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம் கட்டாக்
  7. மத்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் ஹைதராபாத்
  8. மத்திய கோதுமை ஆராய்ச்சி நிலையம் கர்னால்
  9. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், புதுடெல்லி
  10. இந்திய தீவனப்புல் ஆராய்ச்சி நிலையம் ஜான்சி
  11. தேசிய சோளம் ஆராய்ச்சி நிலையம் , ஹைதராபாத்
  12. உலக பகுதி வறண்ட காலநிலைப்பயிர்களுக்கான ஆராய்ச்சி நிலையம், ஹைதராபாத் ( நிலக்கடலை, கம்பு, சோளம், துவரை கொண்டக்கடலை)

உலகளாவிய முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

  • உலக நெல் ஆராய்ச்சி நிறுவனம், பிலிப்பைன்ஸ்
  • உலக கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்
  • உலக வெப்பமண்டலப்பயிர் ஆராய்ச்சி நிலையம் (மரவள்ளிக் கிழங்கு, மொச்சை) கொலம்பியா
  • வெப்பமண்டலப் பயிர் ஆராய்ச்சி நிறுவனம், நைஜீரியா
  • உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிலையம், பெரு
  • உலக பகுதி வறண்ட காலநிலைப் பயிர்களுக்கான ஆராய்ச்சி நிலையம், ஹைதராபாத்
  • மேற்கு ஆப்பிரிக்க நெல் மேம்பாட்டுச் சங்கம், இத்தாலி
  • உலக தாவர மரபுக்கூறு நிறுவனம், இத்தாலி
  • ஆசிய காய்கறிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தைவான்
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015