பயிர் காப்பீட்டு் ::திட்டத்தின் குறிக்கோள்கள்

திட்டத்தின் குறிக்கோள்கள்

 • புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும் போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி அளித்தல்.
 • விவசாயத்தில் முற்போக்கான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் வழிமுறைகள் மற்றும் அதிக விலையுள்ள இடு பொருட்கள் உபயோகப்படுத்த ஊக்கமளித்தல்.
 • பண்ணை வருமானத்தை நிலைப்படுத்துதல் (பொதுவாக பெரும் பயிர் சேதம் ஏற்படும் வருடங்களில் பண்ணை வருமானத்தை உறுதிப்படுத்துதல்).
 • உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை பெருக்குதல் மற்றும் ஊக்கமளித்தல்.

திட்டத்தின் முக்கிய விவரங்கள்:

1. காப்பீடு செய்யப்படும் பயிர்கள்:
 • நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயிறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை.
 • இதர வருடாந்திர தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் மூன்று வருடத்திற்குள்ளாக இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்.

2. திட்டத்தில் சேர்க்கப்படும் விவசாயிகள்:

 • காப்பீடு செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் (குத்தகைக்கு பயிரிடுவோர் உட்பட) இத்திட்டத்தில் சேரலாம்.
 • பயிர்க்கடன் பெறுபவர்கள் - கட்டாயத்தின்  அடிப்படையில்(Compulsory Basis)
 • பயிர்க்கடன் பெறாதவர்கள் - விருப்பத்தின் அடிப்படையில் (Voluntary Basis)

3. காப்பீடு செய்யப்படும் இழப்புகள்/சேதங்கள்:

 • புயல், வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, பூச்சி, நோய், இயற்கைத் தீ, மின்னல்

4. காப்பீடு செய்யப்படும் தொகை (Sun Insured)

 • பயிர்க் கடன் வரை குறைந்தபட்ச காப்பீடு
 • கடன் பெறுபவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் உத்திரவாத மகசூலின் மதிப்பிÞ வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
 • விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரிலும் கூடுதலாக காப்பீட்டுத் தொகை (Actuarial Premium) செலுத்தி சராசரி மகசூலின் 150% மதிப்பு வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
 • உத்திரவாத மகசூல் அளவை விட கூடுதலாக காப்பீடு செய்யப்படும் தொகையை அதிகரிக்க விரும்புவோர் அதற்காக அதிகப்படியான காப்பீட்டுக் கட்டணத்தை (Extra Premium at Actuarial rates) பெறா விவசாயிகளுக்கான கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும்.

5. காரீப், ராபி பருவ காலத்திற்கு பயிர்களுக்கு ஏற்ப கட்டண விகிதம் மாறுபடும்:
வருடாந்திர தோட்டக் கலை மற்றும் பணப்பயிர்கள், இன்சூரன்ஸ் தொழில் நுட்ப   முறைப்படி கணிக்கப்பட்ட காப்பீட்டுக் கட்டணம் (Actuarial rates) வசூலிக்கப்படும்.

6. காப்பீட்டுத் தொகை மானியம்:

 • விவசாயிகளுக்கு காப்பீட்டு கட்டணத் தொகையில் வழங்கப்படும் அரசு மானியம் அவ்வப்பொழுது அறிவிக்கப்படும்.

7. திட்டம் செயல்படும் முறை:
(அ) பரவலான பாதிப்புகள்:

 • பரவலான பாதிப்புகளுக்கு இத்திட்டம் பகுதிவாரி (Area Approach) அடிப்படையில் செயல்படுகிறது.
 • ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் இத்திட்டம் செயல்படும்.
 • வரையறுக்கப்பட்ட பகுதியானது கிராம பஞ்சாயத்து அல்லது பிர்கா அல்லது தாலுக்கா அல்லது கோட்டம் என்று மாநில அரசால் தீர்மானிக்கப்படும். தற்போது இத்திட்டமானது கோட்ட (Block) அளவில் செயல்படவுள்ளது.

8. உத்திரவாத மகசூல் (Threshold yield)

 • ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தின் சராசரி மகசூலை உறுதியளிக்கப்பட்டு நஷ்டஈட்டு விகிதத்தோடு (60%, 80%, 90%) பெருக்கும் போது கிடைக்கும் மகசூலின் அளவாகும்.
 • உத்திரவாத் மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிர்களும் ஐந்து வருட சராசரி மகசூலும் எடுத்துக் கொள்ளப்படும்.

9. சாகுபடி செய்யும் பயிர்களை எவ்வாறு காப்பீடு செய்யலாம்?

 • காப்பீடு செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்வதற்காக பயிர்கடன் விவசாயிகள் (Loanee Farmers) தாங்கள் கடன் வாங்கும் வங்கியிலேயே கட்டயமாக பயிர்காப்பீடு செய்யப்படுவர்.
 • பயிர்கடன் வாங்காத ஏனைய விவசாயிகள் (Non Loanee Farmers)  வங்கிகளில் தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.

10. இழப்பீடு கணித்தல் மற்றும் இழப்புத் தொகை வழங்குதல்:
(Loss Assessment and Payment of Indenmity)

 • பரவலான பாதிப்புகள்: ஒரு குறிப்பிடப்பட்ட பகுதியில் ( தற்போது வட்டாரம் - Block) காப்பீடு செய்யப்பட்ட பயிரின் மகசூல் (அதாவது மாநில அரசு நடத்தும் பயிர் அறுவடை சோதனைகளின் மூலம் கணிக்கப்பட்ட மகசூல்) உத்திரவாத மகசூலின் அளவை காட்டிலும் குறைவாக இருந்தால் அப்பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பு ஏற்பட்டதாக கருதப்பட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்.
 • உத்திரவாத மகசூலை ஒப்பிடும் போது நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி நஷ்டஈடு வழங்கப்படும்.

11. திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம்:

 • பயிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அதன் மூலமாக பயிர் உற்பத்தியை அதிகப்படுத்துதல்.
 • விவசாயிகளை முற்போக்கான சாகுபடி முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்த ஊக்குவித்தல்.
 • விவசாய கடன் வழங்கும் முறையினை தடையின்றி வைத்திருக்க உதவுதல்.
 • காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சமுதாயம் முழுவதற்கும் பயன் ஏற்படும் படி செய்தல். இத்திட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்தல், வேலை வாய்ப்பு பெருகுதல், அங்காடி வரி மற்றும் இதர வரிகளின் மூலம் அரசுக்கு வருமானம் முதலியவை ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி காண உதவுதல்.

12. திட்டத்தினால் ஏற்படும் பயன்கள்

 • பயிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அதன் மூலமாக பயிர் உற்பத்தியை அதிகப்படுத்துதல்.
 • விவசாயிகளை முற்போக்கான சாகுபடி முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்த ஊக்குவித்தல்.
 • விவசாய கடன் வழங்கும் முறையினை தடையின்றி வைத்திருக்க உதவுதல்.
 • காப்பீடு செய்த் விவசாயிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சமுதாயம் முழுவதற்கும் பயன் ஏற்படும்படி செய்தல். இத்திட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்தல், வேலை வாய்ப்பு பெருகுதல், அங்காடி வரி மற்றும் இதர வரிகளின் மூலம் அரசுக்கு வருமானம் முதலியவை ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி காண உதவுதல்.

13.  இத்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இதரதுறைகள்
மத்திய அரசு - (வேளாண் மற்றும் கூட்டுறவு துறை), மாநில அரசு - (வேளாண் துறை புள்ளியியல், கூட்டுறவு, தோட்டக்கலைத்துறை), வங்கிகள் - (ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி, வர்த்தக மற்றும் கிராம வங்கிகள்).

முக்கிய குறிப்பு
கடன் பெறா விவசாயிகளின் விண்ணப்பம் வங்கிகளில் நிராகரிக்கப்பட்டால் உடன் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவிலான பயிர் காப்பீட்டு கண்காணிப்புக்குழு/ வேளாண்துறை இணை இயக்குநர் அவர்களுக்கு தெரிவிக்கவும்.

விவசாயிகளின் நலனை நாடும்
மண்டல மேலாளர்
அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட்.,
(பழைய எண். 156), புதிய எண். 323, ஆந்திரா இன்சூரன்ஸ் பில்டிங்
முதல் தளம், தம்புசெட்டி தெரு, பாரிமுனை, சென்னை - 600 001
Phone : 044 - 42053303 / 42051349 / 42051350
E-mail : Chennai.ro@aicofindia.org Website : www.aicofindia.org

தேசிய வேளாண்மை பயிர்காப்பீட்டுத் திட்டம்
மத்திய அரசின் தேசிய வேளாண் பயிர் கரப்பீட்டுத் திட்டம் 1999 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் (Agriculture Insurance Company of India Ltd.,) மூலம் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் (National Agricultural Insurance Scheme) அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டு மாநில அரசுடன் இணைந்து இத்திட்டம் கீழ்க்கண்ட பயிர்களுக்கு கரப்பீடு செய்யப்படுகிறது.

 • நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி போன்ற தானியப் பயிர்கள்
 • உளுந்து, பச்சசை பயிறு, துவரை போன்ற பயறு வகைகள்
 • நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்கள்
 • கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மஞ்சள், வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய்

திட்டத்தின் நோக்கம்

 • புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும் போதும் பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி அளித்தல்.
 • விவசாயத்தில் முற்போக்கான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் வழிமுறைகள் மற்றும் அதிக விலையுள்ள இடுபொருட்கள் உபயோகப்படுத்த ஊக்கமளித்தல்.
 • பண்ணை வருமானத்தை நிலைப்படுத்துதல் (பொதுவாக பெரும் பயிர் சேதம் ஏற்படும் வருடங்களில், பண்ணை வருமானத்தை உறுதிப்படுத்துதல்).
 • உணவு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களின் உற்பத்தியை பெருக்குதல் மற்றும் ஊக்கமளித்தல்

திட்டத்தில் சேர்க்கப்படும் விவசாயிகள்
காப்பீடு செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் (குத்தகைக்கு பயிரிடுவோர் உட்பட) இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர்.

 • கட்டாயத்தின் அடிப்படையில் காப்பீடு செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்வதற்காக கூட்டுறவு வங்கிகள், வர்த்தக வங்கிகள், கிராம வங்கிகளிடமிருந்து பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் பெறுபவர்கள் கட்டாயமாக இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர் ( கடன் பெற்ற விவசாயிகள்)
 • விருப்பத்தின் அடிப்படையில் பயிர்க்கடன் வாங்காமல் காப்பீடு செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

காப்பீட்டுத் தொகை மான்யம்
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு காப்பீட்டுக் கட்டணத் தொகையில் 10% மான்யம் மத்திய மாநில அரசுகளால் 50 : 50 மற்ற மாநிலங்களில் வழங்கப்படுகிறது.

திட்டம் செயல்படும் முறை

 • பரவலான பாதிப்புகளுக்கு இத்திட்டம் (Area Approach) அடிப்படையில் செயல்படுகிறது.
 • ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் இத்திட்டம் செயல்படும்.
 • வரையறுக்கப்பட்ட பகுதியானது கிராம பஞ்சாயத்து அல்லது பிர்கா அல்லது தாலுக்கா அல்லது கோட்டம் என்று மாநில அரசால் தீர்மானிக்கப்படும். தற்போது இத்திட்டமானது நெல், பருத்தி மற்றும் கரும்பு பயிர்களுக்கு பிர்கா அளவிலும் இதர பயிர்களுக்கு வட்டார அளவிலும் செயல்படுத்தப்படுகிறது.

உறுதியளிக்கப்பட்ட நஷ்டஈடு விகிதம்
ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தின் சராசரி மகசூலை உறுதியளிக்கப்பட்டு நஷ்ட ஈடு விகிதத்தோடு (60%, 80%, 90%,) பெருக்கும் போது கிடைக்கும் மகசூலின் அளவாகும். இத்திட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் (Block / Firka) காப்பீடு செய்யப்பட்ட பயிரின் மகசூல் உத்திரவாத மகசூலை (Threshold yield) காட்டிலும் குறைவாக இருந்தால் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பு ஏற்பட்டதாகக் கருதப்பட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவர், உத்திரவாத மகசூழர கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிர்களுக்கு ஐந்து வருட சராசரி மகசூலும் எடுத்துக் கொள்ளப்படும். உத்திரவாத மகசூலை ஒப்பிடும் போது நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி நஷ்டஈடு வழங்கப்படும்.

மாநில அரசின் பயிர் காப்பீட்டிற்கான சிறப்புத் திட்டம்
தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சாதரணமாக கடன் பெறும் விவசாயிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு பயனடைந்து வந்தார்கள். ஆனால், பயிர்ககடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கு பெற்று பதிவு செய்ய முன் வருவதில்லை. பயிர்க்கடன் பெறாத அனைத்து விவசாயிகளையும், இத்திட்டத்தில் பங்கேற்க வைத்து, காப்பீட்டு வசதியினை வழங்க வேண்டி அரசு காப்பீட்டு தவணைத் தொகையில் 50 சத மானியத்தை வழங்குவதற்காக மாநில அரசு 2006 - 07 ஆண்டு å.8 கோடி ஒப்புதல் அளித்தது.
அரசாணை எண். 363, வேளாண்மை (ஏபி1) துறை, நாள் 28.11.2006 ன் படி பயிர்க்கடன் பெறாத விவசாயிகளுக்கு 2006-07ம் ஆண்டில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற 50 சதவீத மான்யத் தொகையாக å.8 கோடி நிதியினை ஒப்புதல் அளித்தது. இதில் 1.05 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டடு å.116.50 லட்சம்  செலவிடப்பட்டுள்ளது.

2007-08 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டமாக வறட்சி வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், அரசு 10 லட்சம் கடன்பெறும் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கு, காப்பீடு தொகையில் 50 சத மானியமாக å.15.00 கோடி செலவிட அரசாணை எண். 402, வேளாண்மை (ஏபி1) துறை, நாள் 15.10.08ன் படி, ஒப்பளித்துள்ளது.  31.03.2008 முடிய 5.34 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு å.1113.835 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மேலும் 2007-08 ம் ஆண்டில் இத்திட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நஷ்டஈடு  தொகையாக å.300 கோடி வரை உள்ள திட்ட செயலாக்கம் செய்யும் வேளாண் காப்பீடு கழகத்தால் (Agriculture Insurance Company) வழங்கப்பட உள்ளது. மேற்படி தொகையில் இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் பெற்ற பிரிமியத் தொகை மீள அரசுக்கு செலுத்தப்பட்ட அதனுடன் இதரத் தொகை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து 50:50 விகித அளவில் பெறப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2008-09ம் ஆண்டில் தேசிய வேளாண்மை கரப்பீடு திட்டத்தின் கீழ் கடன் பெறும், கடன் பெறா விவசாயிகள் பயன் பெறும் வகையில் காப்பீடு தொகையில் 50% மானியமாக å.40 கோடி செலவிட அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் பெறப்பட உள்ளது. 25 லட்சம் வேளாண் மற்றும் தோட்டப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளும் பயன் பெறும் வகையில் இக்காப்பீடு திட்டம் அமைந்துள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்தும் அரசுகடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு துறை வங்கி பதிவாளர்களுக்கு இத்திட்ட செயல்பாடுகள் தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியர் கருத்தரங்கில், கடன்பெறும் விவசாயிகள் கட்டாய அடிப்படையிலும், கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் சேர ஊக்குவிக்கும் அடிப்படையிலும் இப்பணி பற்றி வரிவாக விவாதிக்கப்படும்.
இத்திட்ட துகவக்கம் 2000 ஆண்டு முதல் சுமார் å.72 கோடி பிரிமியம் வசூலிக்கப்பட்டு இதுவரை å.173 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் å.300 கோடி வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் (NAIS)
கடன் பெறா விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்ப்பதற்கான வழிமுறைகள்

1) தேர்ந்தெடுக்கப்பட்ட பிர்க்காவில் நெல் மற்றும் பருத்திப் பயிர் சாகுபடி செய்பவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் சேர அனுமதி உண்டு.

2) விண்ணப்பதாரர் பேரில் கட்டாயம் சேமிப்பு கணக்கு கூட்டுறவு, வர்த்தக அல்லது கிராமிய வங்கிகளிலோ வைத்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு சேமிப்பு கணக்கு இல்லையெனில் இத்திட்டத்திற்காக வங்கிகள் புதிய சேமிப்பு கணக்கு (No frill account) அல்லது ரு.10/- முதலீட்டில் திறக்கப்பட வேண்டும்.

3) வங்கிகள் தற்காலிக கணக்கு “NAIS - Non-Loanee Farmers PremiumCollection Account” என்ற சிறப்பு சேமிப்பு கணக்கு திறக்கப்பட வேண்டும்.

4) விவசாயிகள் இந்த கணக்கில் ப்ரீமியம் கட்ட வேளாண் அலுவலர்களும், வங்கிகளும்  உதவ வேண்டும்.            
5) வேளாண் துறையினர் இத்திட்டத்தைப் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய உதவுவார்கள்.

6) எந்தெந்த விவசாயி எந்தெந்த வங்கியில் சேமிப்பு கணக்க வைத்திருக்கிறாரோ, அதை அனுசரித்து அதே வங்கியில் ப்ரீமியம் செலுத்த வேண்டும்.

7)  விவசாயி எந்த பிர்க்காவில் உள்ள கிராமத்தில் சாகுபடி செய்கிறாரோ அந்த பிர்க்காவை மிகச் சரியாக முன் மொழிவு படிவத்தை (Proposal form) பூர்த்தி செய்து வங்கிகளில் ப்ரீமியத் தொகையுடன் கொடுக்க வேண்டும்.

8) வேளாண்துறை மற்றும் விவசாயிகள் பிரீமியத் தொகையினை AICக்கு நேரடியாக செலுத்த இத்திட்டத்தில் (NAIS) அனுமதி இல்லை.

9)  இது மத்திய அரசு திட்டமாதலால்  (NAIS) இத்திட்டத்தில் பிரீமியம் மாவட்ட அளவில் உள்ள அந்தந்த வங்கிகளின் மூலமாக அனுப்பப்பட வேண்டும். இதற்கான கிராம அளவிலான வெவ்வேறு வங்கிகள் அவர்களது மாவட்ட அளவிலான வங்கிக்கு 15      நாட்களுக்கு ஒரு முறை DD in favour of “Agriculture Insurance Company of India     LKtd., Axis Bank Account No. 006010200018027” (Payabel at Chennai) என்று எடுத்து DDயையும், Declaration (படிவத்தையும்), பூர்த்தி செய்து AIC,Chennai க்கு  அனுப்பி வைக்க வேண்டும்.

10)  விவசாயிகள் குறிப்பிட்ட கடைசி தேதிக்கு மேல் இத்திட்டத்தில் கண்டிப்பாக  சேர்க்கப்பட மாட்டார்கள். 

கடன் பெறா விவசாயிகள் இத்திட்டத்தில் வங்கிகள் மூலம் சேர கடைசி நாள்

வ.எண்.

பயிர்

கடைசி நாள்

1.

நெல் II (சம்பா, தாளடி, பிசானம்)

15.12.2008

2.

கம்பு, சோளம், ராகி, நிலக்கடலை, எள்ளு, மக்காச்சோளம்

15.08.2008

3.

பருத்தி

31.10.2008

4.

உருளை II

30.11.2008

5.

வெங்காயம், மஞ்சள், வாழை, மரவள்ளி / குச்சி

15.08.2008

11)  விவசாயிகள் மற்றும் வேளாண்துறையினர் செலுத்திய ப்ரீமியத் தொகையை வங்கிகள் AICக்கு கடைசி தேதிக்குள் அனுப்பி விட்டார்களா என உறுதி செய்து கொள்ளவும்.

12) வங்கிகள் ஒத்துழைப்பு இல்லையெனில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், முன்னோடி வங்கி மேலாளர் ஒத்துழைப்போடு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் சேர உதவி செய்யலாம். (அ) சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட வங்கிகளுக்கும் தகவல்    அனுப்பி நகலை AICக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் தகவல்களுக்கு
மண்டல மேலாளர்
அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்.,
எண்.323, முதல் தளம், ஆந்திரா இன்சூரன்ஸ் வளாகம்,
தம்புச்செட்டித் தெரு, பாரீஸ் கார்னர்,
சென்னை - 600 001
போன் 42051349 / 1350

அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்., மண்டல அலுவலகம், சென்னை
தேசிய வேளரண் பயிர் காப்பீட்டுத் திட்டம் (NIAS)
காபீஃப் - 2008 – தமிழ்நாடு

 ஒரு ஏக்கருக்கு மட்டும்    

எண்

பயிர்

உத்திரவாத
மகசூல்
மதிப்பு அளவு வரை (ரூ.)

காப்பீடு
கட்டணம்
(%)

மொத்த
பிரிமியம்
(ரூ.)

கடன் பெறும் விவசாய
பிரிமியம்
(ரூ.)

கடன் பெறாத விவசாய
பிரிமியம்
(ரூ.)

கடன் பெறாத
ஏனைய
விவசாய
பிரிமியம்
(ரூ.)

கூடுதல்
மதிப்பு 
காப்பீடு
தொகை
(ரூ.)

காப்பீடு
கட்டணம்
(%)

மொத்த
பிரிமியம்
(ரூ.)

கடன் பெறும் சிறு குறு விவசாயி
பிரிமியம்
(ரூ.)

கடன் பெறாத சிறு குறு விவசாயி
பிரிமியம்
(ரூ.)

கடன் பெறாத
ஏனைய
விவசாயி
(ரூ.)

1.

நெல் I (கார், குறுவை, சொர்ணவாரி)

13668

2.50

342

171

154

171

9112

2.65

242

121

109

121

2.

நெல் II (சம்பா, தாளடி, பிசானம்)

10312

2.00

206

103

93

103

9024

3.50

316

158

142

158

3.

சோளம்

980

2.50

25

13

11

13

1472

7.55

111

56

50

56

4.

கம்பு

1576

3.50

55

28

25

28

2368

5.95

141

70

64

70

5.

ராகி

2404

2.50

60

30

27

30

2104

3.20

67

34

30

34

6.

மக்காச்சோளம்

2896

2.25

65

33

29

33

4344

2.25

98

49

44

49

7.

நிலக்கடலை

6292

3.50

220

110

99

110

5504

5.05

278

139

125

139

8.

எள்ளு

1328

3.50

46

23

21

23

1992

9.45

188

94

85

94

வருடாந்திர பணப்பயிர் மற்றும் தோட்டக் கலை பயிர்கள்

9.

பருத்தி

6788

10.50

713

357

321

357

10.

உருளை

112104

3.85

4316

2158

1942

2158

11.

வெங்காயம்

68936

2.75

1896

948

853

948

12.

மஞ்சள்

122344

6.20

7585

3793

3413

3793

13.

வாழை

234892

4.10

9631

4816

4334

4816

14.

மரவள்ளி / குச்சி

116624

4.50

5248

2624

2362

2624

15.

இஞ்சி

742864

5.80

43086

21543

19389

21543

16.

அண்ணாசி

232908

2.15

5008

2504

2254

2504

 குறிப்பு

 1. கடன்பெறும் விவசாயிகளுக்கு பிரிமீயத் தொகையை கூடுதல் கடனாக வழங்கப்பட்டு கண்டிப்பாக வங்கிகள் ப்ரிமியத்தினை பிடித்தம் செய்ய வேண்டும்.
 2. கூடுதல் ப்ரிமியமானது, விவசாயிகளுக்கு, கூடுதல் நஷ்ட ஈட்டினைக் குறிக்கும். இது 150% சராசரி மகசூலின் அளவினை மதிப்பாகப் பெற்றது. ஆகையால் ப்ரிமியம் கூடுதலாகவே காணப்படும்.
 3. கடன் பெறும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச காப்பீடாக அவரவர் பெறப்படும் பயிர் கடனிலேயே கண்டிப்பாக பிடித்தம் செய்ய வேண்டும். எனினும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேல் காப்பீடு செய்ய இயலாது.
 4. கடன் பெறா விவசாயிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் மேலே கூறியுள்ள அட்டவணைப்படி எவ்வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்களோ அவ்வங்கியில் ப்ரீமியத்தை செலுத்தி சேரலாம்.

மானியம் வழங்கும் முறை

                                             சிறு விவசாயிகள்                ஏனைய விவசாயிகள்
கடன் பெறும் விவசாயிகள்         -           50%                                                      50%
கடன் பெறா விவசாயிகள்           -           55%                                                     50%

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013