பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

உருளைக்கிழங்கு பயிர் காப்பீடு

நம் நாட்டில உருளைக்கிழங்கு பயிரிடப்படும் இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த காப்பீடு வழங்கப்படுகிறது.

காப்பீடு பாதுகாப்பு

பயிரிட்ட ஒரு வாரம் முதல் அறுவடைக்கு முன்னர் 7 நாட்கள் வரை இடுபொருட்களுக்கு ஆகும் செலவைத்தருகிறது.
பயிர்கள் அழிந்து விடும் நிலை/மொத்த சேதம் ஏற்பட்டு பயிரின் எண்ணிக்கை மிகவும் குறையும் போது இடுபொருள்களுக்கு பயிரின் செலவை இந்தக் காப்பீடு  வழங்கப்படுகிறது, விளைச்சல் குறைந்தால் அதற்கு காப்பீடு வழங்கப்படுவதில்லை. புயல், மழை, பனி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பயிர்கள்காப்பீட்டு காலத்தின் போது மடிந்தால் காப்பீட்டுத் தொகை அளிக்கப்படுகிறது.

காப்பீடு வழங்கும்முறை

பயிர்களுக்கு ஏதாவது இழப்பு(அ) ஏற்பட்டால், 48 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவத்திற்கு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து சேதம் ஏற்பட்டு 15 நாட்களுக்குள், ஒரு கோரிக்கை மனு சமர்ப்பிக்க வேண்டும். வேளாண் காப்பீட்டு நிறுவனத்துக்கு அனைத்து காரணங்களையும், நகல்களையும் சமர்ப்பித்து கோரிக்கை எழுப்ப வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013