பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

வானிலை காப்பீடு

மோசமான வானிலை நிகழ்வுகளால் தனிப்பட்டவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஏற்படுமு் இடர்பாடுகள் (அ) இழப்புக்களை ஈடு செய்ய உதவும் காப்பீடு ரபி  வானிலை காப்பீடு ஆகும்.
1.மோசமான வானிலை நிகழ்வுகளை தனித்தனியாக சோதனை செய்து, அளவிடப்படுகிறது
2.இந்த காப்பீடு மிக விரைவாக இழப்பீடுகளை சரி செய்கிறது.
3.அனைத்து உற்பத்தியாளர்கள், குறிப்பாக சிறிய/நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள் (அ) குத்தகைக்காரர்கள் இந்த வானிலை காப்பீட்டைப் பெறலாம்.

காப்பீட்டு பாதுகாப்பு

மிக அதிக வெப்பநிலை /வெப்பனிலை அளவுகளில் இயல்பான நிலையை விட அதிக வேறுபாடு /மிகக் குறைந்த வெப்பநிலை/4 செ.க்கும் கீழே நிலவும் வெப்பநிலை /(அ) மழை அதிகமாகும் போது/ இயல்பான நிலையை விட சூரிய வெளிச்சம் அதிகமாகும் போது ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுசெய்ய வேளாண் காப்பீட்டு நிறுவனம் காப்பீடு தருகிறது.

காப்பீட்டுக் காலம்

டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை நிலவும் மாறுபட்ட வானிலை அளவீடுகள் மற்றும் பயிர்களில் மாற்றம் ஏற்படும் காலங்களில் வழங்கப்படுகிறது.

காப்பீட்டுக் கட்டணம்

உண்மையில்நிலவும் மிக அதிக வெப்பநிலை, மிகக் குறைந்த வெப்பநிலை, மழையின் அளவைப் பொறுத்து ஒவ்வொரு பயிருக்கு தகுந்தாற்போல் காப்பீட்டு கட்டணம் செலுத்தப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013