பயிர் பாதுகாப்பு :: ஆப்பிள் பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: போடோஸ்போரா லுக்கோட்ரிகா

அறிகுறிகள்:

  • இலையின் மேற்புறப் பகுதிகளில் சிறிய திட்டுக்கள் வெள்ளை நிற துகள் போன்று வளர்ந்து காணப்படும்.
  • நோய்த் தாக்குதல் தீவிரமாக இருக்கும் பொழுது இலையின் இருபுறமும் அறிகுறிகள் தோன்றும்.
  • கொம்புகளும் தாக்கப்படும். பாதிக்கப்பட்ட இலைகளில் தாக்குதல் அதிகமாக இருந்தால் இலைகள் உதிர நேரிடும்.
  • பழ மொட்டுக்களும் பாதிக்கப்படும், இவை நிலை மாறியும், சிறியதாகவும் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • 0.05% டைனோகேப் (அ) 0.1% சைனோமீதியோனேட்டை தெளிக்கவும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015