மஞ்சள் இலை நோய் : பைட்டோ பிளாஸ்மா
அறிகுறிகள்:
- குருத்து இலை 2 அல்லது 3 இலைகளின் சுற்றுவட்ட அடுக்கில் மஞ்சள் நிறமாக இருக்கும்.
- இலைகளில் பழுப்பு நிற இணை கோடுகள் இருக்கும்.
- இலை பரப்பில் மத்தியில் மஞ்சள் நிறமாக இருத்தல். முதிர்ந்த நிலையில் வெளிறிய இலைகள் காயந்து பின் முழுவதும் மஞ்சளாக மாறிவிடும்.
- இறுதியாக மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்துவிடும். வேர்கள் படிப்படியாக கருப்பு நிறத்திற்கு மாறிவிடும்.
 |
 |
 |
இலை நுணி மஞ்சள் நிறமாதல் |
மஞ்சள் நிறமாதல் |
பாதிக்கப்பட்ட மரம் |
கட்டுப்பாடு:
- வீரியமுள்ள விதை மரங்களை பராமரிக்க வேண்டும்.
- எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களான மங்களா மற்றும் தென்கனரா போன்ற ரகங்களை வளர்க்க வேண்டும்.
- பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பொட்டாசியம், மெக்னீசியம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
Image Source:
http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html |