பயிர் பாதுகாப்பு : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
கிழங்கு துளைக்கும் கூன் வண்டு: காஸ்மோபொலைட்டஸ் சார்டிட்டஸ்
சேதத்தின் அறிகுறி:
- புதிதாக நடவு செய்யப்பட்ட வயல்களில் இதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இவ்வண்டு இளம் மற்றும் வளர்ந்த மரங்களைத் தாக்கி பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும்.
- தாய் வண்டு வாழைக்கிழங்கின் கழுத்துப்பகுதியில் உள்ள இலையுறையில் துளையிட்டு முட்டையைத் தனித்தனியாக இடும். வெளிவரும் புழுக்கள் கிழங்கை குடைத்து தின்னும்.
- பின்பு இவை நடுத்தண்டில் சேதம் ஏற்படுத்தி, கிழங்கையும் தாக்குகின்றன. கிழங்கின் அடிப்பகுதியில் இவை வேர்வரை செல்கின்றன.
- கீழே விழுந்த தண்டினை வெட்டிப் பார்த்தால், அதன் முழு நீளத்திற்கும் புழு குடைந்து சென்றிருப்பதை காணலாம்.
- பாதிக்கப்பட்ட வாழையின் இலைகள் மஞ்சள் நிறமாகி, வளர்ச்சி குன்றி, வேர் பாதிக்கப்பட்டு, மகசூல் குறையும்
- கூண் வண்டினால் பாதிக்கப்பட்ட கிழங்குகள் வளர்ச்சி குன்றி பின்பு உதிர்ந்து விடும்.
- இலேசாக காற்று வீசினாலும் மரம் சாய்ந்து விடும்.
- பொருளாதார சேத நிலை : மரம்\கிழங்கை வெட்டிப் பார்க்கும் போது 3 வண்டிற்கு அதிகமாக இருந்தால் உடனே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கவேண்டும்.
- இவை ரொபஸ்டா மற்றும் கற்பூரவள்ளி இரகங்களை அதிகம் தாக்குகின்றன.
|
|
|
பழங்களின் உற்பத்தி குறைந்துவிடும் |
கிழங்கு துளைகளுடன் அழுகி காணப்படும் |
இளங்கன்றுகள் வளராது |
பூச்சியின் விபரம்:
- முட்டை : நீள்வட்ட வடிவ 2-3 மிமீ நிறத்தில் வெண்மை நிறம் கொண்டது. தண்டின் அடிப்பகுதியில், தரைப் பகுதிக்கு சற்று மேலே பெண் வண்டுகள் குடைந்து, மென்று துப்பிய துளையினுள் முட்டைகள் காணப்படும். மேலும் கிழங்கின் மேல்பகுதி, வேருக்கு அருகில் மற்றும் வெட்டப்பட்ட தண்டு பகுதி போன்ற பகுதிகளிலும் முட்டைகளைக் காணலாம். வெப்பநிலையைப் பொறுத்து 4 ழுதல் 36 நாட்கள் முட்டை நிலையில் இருக்கும்.
- புழு : வெண்ணிற கால்களற்ற புழுக்கள், வளைந்த வடிவில் நடுபகுதி சற்றுபருத்த நிலையில் நன்கு தடித்து காணப்படும். வலுவான வாய்ப் பகுதியுடன் தலையானது செம்பழுப்பு நிறத்தில் இருக்கும், வளர்ந்த புழுக்கள் 12 மி மீ நிளம் கொண்டவை. புழுக்காலம் 20-25 நாட்கள்.
- கூட்டுப்புழு : 12 மிமீ நிறத்தில் வெண்மை நிறமானது. வண்டுகளின் துளைகளில் இக்கூட்டுப் புழுக்களைக் காணலாம். காலம் 5-7 நாட்கள்.
- முதிர்ந்த வண்டு : கடின ஓடினால் மூடப்பட்ட உடலில் மூக்கு நீண்டு வளைந்திருக்கும். 10-16-மிமீ நீளம் உள்ளவை. இளம் வண்டுகள் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். பின்பு சில நாட்களிலேயே கருமை நிறமாக மாறிவிடும்.
|
|
|
புழு |
கூட்டுப்புழு |
முதிர்ந்த வண்டு |
கட்டுப்படுத்தும் முறை:
- நடும்போது பூச்சி தாக்காத கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
- தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்.
- ரொபஸ்டா, கர்பூரவள்ளி, மால்போக், சம்பா மற்றும் அடுக்கர் ஆகிய இரகங்களை பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- பூச்சி தாக்குதல் குறைவாக காணப்படும் இரகங்களான பூவன், கதலி, குன்னன், பூம்காளி போன்றவற்றை நடலாம்.
- காஸ்மோலியூர் பொறியை எக்டர்க்கு 5 என்ற கணக்கில் வைக்கலாம்.
- தண்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி குவியலாகப் போட்டு வைத்து, வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
- கன்றுகள் நடும்போது ஒவ்வொரு குழியிலும் கார்போஃபியுரான் 40 கிராம் (அ) போரேட் 5 கிராம் மருந்தை ஒவ்வொரு கிழங்கிற்கும் மணலுடன் கலந்து போட்டு நட வேண்டும்.
- நடுவதற்கு முன்னால் வாழைமரக்கன்றுகளை 0.1 சதவிதம் குயினால்பாஸ் மருந்தினுள் முக்கி எடுக்க வேண்டும்.
- தீவிர தாக்குதலின் போது டைமித்தோயேட்் (அ) மிதைல் டெமட்டான் மருந்தினை தெளிக்கலாம்.
- நடுவதற்கு முன்னால் ஒரு குழிக்கு ஆமணக்கு புண்ணாக்கு 250 கிராம் (அ) கார்பரில் பவுடர் 50 கிராம் (அ) போரேட் 10 ஜி 5 கிராம் இடுவதால் இப்பூச்சியின் தாக்குதலை தடுக்கலாம்.
- பெருந்தலை கொண்ட ஊண் உண்ணி எறும்பு இனங்களான (பெய்டோல் மகொசெப்பாலா) மற்றும் டெட்ராமோரியம்
ஸ்பீசிஸ் என்பவை முட்டைகள், புழுக்கள் போன்றவற்றை உண்ணக் கூடியவை.
- பிவேரியா பேசியாயனா, மெட்டாரைசியம் அனிசோபிலே போன்ற பூச்சிக் கொல்லி பூஞ்சைகள் இக்கூன் வண்டினை 90 சதவீதம் அழிக்கின்றன.
- ஸ்டெய்னெர்மா மற்றும் ஹெட்டிரோ ராபிடிஸ் ஸ்பீசிஸ் போன்ற நூற்புழுக்கள் கூன் வண்டு மற்றும் அதன் புழுக்களையும் தாக்குகின்றன.
- 60-100 கி வேப்பங்கொட்டைப் பொடி அல்லது வேப்பம் புண்ணாக்கினை கிழங்குகளை நடும்போதும் பின்பு 4 மாதங்கள் கழித்து ஒரு முறையும் இடுவதால் பூச்சித் தாக்குதல் குறைவதோடு, நல்ல மகசூல் பெறலாம். 100 கிராமிற்கு அதிகளவோ அல்லது வேப்ப எண்ணெய் இடுவதோ வாழைப் பயிரினையே பாதிக்கக் கூடும்.
- பிரமோன் அல்லது இனக் கவர்ச்சிப் பொறியினை எக்டருக்கு 25 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம்.
- வட்ட வடிவ தண்டுப் பொறியில் தண்டிற்கு பதில் கிழங்கினை வெட்டி வைப்பதால் கூன் வண்டுகள் இவ்வாசனையால் கவரப்பட்டு முட்டையிடவும் உண்ணவும் அப்பகுதிக்கு வரும். இவ்வண்டுகளை சேகரித்து அழிக்கலாம். எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு பயன்மிக்கது.
- வாழை நீளத்தண்டு கவர்ச்சிப் பொறியினை எக்டருக்கு 100 என்ற அளவில் பயன்படுத்தலாம்.
|
|