பயிர் பாதுகாப்பு : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு கூன் வண்டு: ஒடாய்போரஸ் லாங்கிகோலிஸ்

சேதத்தின் அறிகுறி :

 • இவ்வண்டு 5வது மாத வாழை மரங்களிலிருந்தே தாக்கத் தொடங்கும். கன்றுகளை இது தாக்குவதில்லை.
 • தண்டின் மீது சிறிய குண்டூசி அளவு துளைகளை ஏற்படுத்துகிறது.
 • இத்துளையிலிருந்து பழுப்பு நிற பிசுபிசுப்பான பிசின் போன்ற திரவம் வெளிவந்து கொண்டிருக்கும். இலையுறையின் அடிப்பகுதியிலிருந்து நார் போன்ற கழிவுகள் வெளிப்படும்.
 • புழுக்கள் தண்டுப்பகுதியை குடைந்து சென்று திசுக்களை உண்ணுகின்றன. பாதிக்கப்பட்ட தண்டினை பிளந்து பார்த்தால் திசுக்கள் நீண்ட அளவில் குடைந்து காணப்படும்.
 • இவ்வண்டுகளின் அதிகளவு தாக்குதலால் தண்டுப் பகுதி அழுகி, துர்நாற்றம் வீசும்.
 • இதன் தாக்குதலால் பூ வெளிவருவது மற்றும் காய்கள் முதிர்ச்சியடைவது தடைபட்டு, மகசூல் இழப்பு அதிகளவில் ஏற்படுகின்றது.
 • இத்தகைய மரங்களிலிருந்து பெரும்பாலும் குலைகள் தோன்றுவது இல்லை. ஒரு வேளை தோன்றினாலும் குலைகள் சிறுத்தும், காய்கள் சிறுத்து எண்ணிக்கையில் குறைந்தும் காணப்படும்.
தண்டில் சிறிய குண்டூசி வடிவ துளைகள் தண்டிலிருந்து கருமை நிற கழிவுகள் வெளிவரும் பசை போன்ற திரவம் காணப்படும் தண்டில் துளைகள் காணப்படும்

பூச்சியின் விபரம்

 • முட்டை : முட்டைகள் உருளை வடிவில் ‌வெண்மை நிறத்தில் தட்டையான நுனிப்பாகத்தைக் கொன்டிருக்கும். இதன் அடைகாப்புப் பருவம் 3லிருந்து 8 நாட்கள்.
 • புழு : புழுவானது சதைப்பற்றுடன்‌, மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், கால்களற்றுக் காணப்படும். இவை தண்டுகளைத் துளைத்துக் குடைந்து கொண்டே சென்று நடுத்தண்டைத் தாக்குகின்றது.
 • கூட்டுப் ‌புழு : தண்டினுள்ளேயே, இவை நார்போன்ற கூடை கட்டி கூட்டுப் புழுவாக மாறுகின்றன‌. இவை இக்கூட்டுக்குள்ளேயே வளர்கின்றன.
 • முதிர்ந்த வண்டு : முதிர்ச்சியடைந்த கூன் வண்டானது கருமை நிறத்தில் 23‌‌‌‌-39 மி.மீ. அள‌வு இருக்கும். இவை தண்டின் அழுகிய பாகங்களுக்கு‌ள் காணப்படும். இவ்வண்டுகள் 1 வருடம் வரை வாழ்கின்றன.
முட்டை புழு கூட்டுப் புழு முதிர்ந்த வண்டு

கட்டுப்படுத்தும் முறை

 • அவ்வப்போது காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தி, நிலத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்
 • ஒவ்வொரு மாதமும் பக்க கன்றுகளை நிக்கவும்
 • பாதிக்கப்பட்ட பகுதிகளை வே‌ரோடு பிடுங்கி அழித்து விட வேண்டும்.
 • அறுவடை முடிந்த பின் தண்டுகளை பிடுங்கி அழித்தபின், கையோடு குலையினை நீக்கி விட்டு, இ‌‌‌‌‌‌‌‌தன் மூலம் அதில் மற்ற வண்டுகள் பெருகுவதை தவி‌ர்க்கலாம்.
 • வண்டுகள் அதிகம் காணப்படும் இடங்களில் மட்டாக்கி எனும் அறுவடைக்குப் பின் இலைகளை உரமாக வயலில் இடும் முறையினை தவி‌ர்க்கலாம்.
 • கு‌‌‌‌‌‌ழி ஒன்றுக்கு நடவு சமயத்தில், பியூராடான் 3 G 20 கி அல்லது திம்மெட் 10 G - 12 கி அல்லது வேப்பம் புண்ணாக்கு ½ கிகி என்ற அளவில் இடவும்.
 • வெட்டப்பட்ட இலைக்காம்பினை குளோர்பைரிபாஸ் (2.5 லி/லி)‌‌‌‌‌+ 1 மி.லி ஒட்டுந் திரவத்தில் கலந்த கலவை கொண்டு நனைக்க வேண்டும்.
 • வா‌‌‌‌‌‌ழைக் குலையினை அறுவடை செய்த பின்‌‌‌‌‌‌பு, வாழை மரத்தினை வெட்டிய அடிப்பகுதியில் 100 மி.லி கார்பரைல் (2 கி/லி) அல்லது பிவேரியா பேரியானா 10 கி என்ற அளவில் மருந்தினை இடவும்.
 • வெட்ட‌ப்பட்ட (நீளவாக்கில்) பகுதியின் மீது 20 கி. பிவேரியா பேசியானா பூஞ்சை அல்லது ‌‌‌‌ஹெப்பிடி‌ரோ ரே‌‌ப்‌டிடிஸ் இன்டிகா எனும் நூற்புழுவினை கொண்டு தடவவேண்டும்.
 • இக்கூண்வண்டுகள் நோய் வாய்ப்பட்டு இறந்து விடும்.
 • நீளவாக்கில் பிளக்கப்பட்ட தண்டு பொறிக்கப்படு‌ம். இப்‌‌பொறியானது (45 செ,மீ நீளம்) வாழையின் தண்டினை இரண்டாக நீளவா‌க்கில் பிளந்து தயா‌ரிக்கப்படுகிறது. இத்தகைய பொறிகள் வயலில் ஆ‌ங்காங்கு ஏக்கருக்கு 25 என்ற வீதத்தில் வைத்து இக்கூன் வண்டுகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015