பயிர் பாதுகாப்பு : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கண்ணாடி இறக்கைப் பூச்சி: ஸ்டெஃபனைட்டிஸ் டிபிகஸ்

சேதத்தின் அறிகுறி:

  • இலைகளின் கீழ்ப்புறத்தில் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலையின் மேற்புறத்தில் வெள்ளைப்புள்ளிகள் ஏராளமாக இருக்கும்.
  • மரம் வளர்ச்சி குன்றி காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகள் மஞ்சள் நிறமாகவும் இலைகளின் கீழ்ப்புறத்தில் காணப்படும்
  • பூச்சி சிறியதாக பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்ற பளபளப்பான இறக்கைகளுடன் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட இலைகள், பூக்கள், மற்றும் பழங்களை சேகரித்து அழித்துவிட வேண்டும்
  • மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி (15 / எக்டர்) வைத்து அழிக்கலாம்
  • டைமிதோயேட் 30 இ.சி 850 மி.லி / எக்டர் தெளித்து கட்டுப்படுத்தலாம்
  • மிதைல் டெமடான் 25 இ.சி 2 மி.லி / லிட்டர்் 1 மி.லி / லிட்டர் தெளித்து கட்டுப்படுத்தலாம்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015