பயிர் பாதுகாப்பு : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கன செதில் பூச்சி: ஏஸ்பிடியோட்டஸ் டெஸ்டாக்டர்

சேதத்தின் அறிகுறி:

  • குஞ்சுகளும் பூச்சிகளும் இலைகள், தண்டு மற்றும் பழங்களை தாக்கும்
  • இலைகளில் மஞ்சள்நிற திட்டுகளாக காணப்படும்
  • வளர்ச்சி குன்றி காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகள் உருளையாகவும் ஒளி ஊடுரக்கூடியதாகவும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் மெழுகு தடவியதுபோல் காணப்படும்
  • பெண்பூச்சி வட்டவடிவாகவும், அரை ஒளி ஊடுரக்கூடியதாகவும் வெளுப்பு நிறத்துடன் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழித்து விடவும்
  • மோனேபகுரோட்டோபாஸ் 0.04 சதவிதம் மருந்தினை தெளிக்கலாம்
  • பொறிவண்டுகளாகிய கைலோகோரஸ் நைக்ரிடஸ், ஸ்கிம்னஸ் காக்கிவோரா களத்தில் விடலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015