பயிர் பாதுகாப்பு : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கம்பளிப்புழு: பேரிக்காலியா ரிசினி

சேதத்தின் அறிகுறி:

  • புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டித் தின்னும், இலைகளில் ஜன்னல் போன்ற துளைகள் காணப்படும்

 

பூச்சியின் விபரம்:

  • புழுக்கள் கருப்பு கலந்த வெளுப்பு நிறத்தில் நீல முடிகளுடன் காணப்படும்
  • பூச்சியின் முன்னிறக்கை வெளுப்பு நிறத்தில் கரும் புள்ளிகளுடன் காணப்படும். பின்னிறக்கை இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • முட்டை குவியல்களையும், புழுக்களையும் சேகரித்து அழிக்க வேண்டும்
  • கூட்டமாகக் காணப்படும் புழுக்களை தீப்பந்தம் கொழுத்தி அழிக்க வேண்டும்
  • வியக்குப்பொறி அமைத்து கவர்ந்து அழிக்கலாம்
  • குளோர்பைரிபாஸ் 20இ.சி (அ) குயினால்பாஸ் 25 இ.சி 2 மி.லி / லிட்டர்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015