பயிர் பாதுகாப்பு :: பீன்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்
ஆந்த்ராக்நோஸ் : கொல்லட்டோடிரைக்கம் லின்டிமித்தியானம்

அறிகுறிகள்:

  • பீன்ஸ் காய்களில் கருப்பு நிற நீரில் அமிழ்ந்தது போன்ற புள்ளிகள் (அ) சிவப்பு கலந்த பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். இந்த நோய் கொல்லட்டோடிரைக்கம் லிண்டிமித்தியானம் என்ற பூஞ்சான் காரணியில் தோன்றுகிறது
  • தண்டுகள், காய்கள், நாற்றிலைகளில் (வித்திலைகள்) கருப்பு நிற நீரில் அமிழ்நாதது போன்ற புள்ளிகள் காணப்படும். ஆனால் காய்களில் நன்றாகத் தெரியும். இந்த புள்ளிகளிலிருந்து சால்மன் நிறத்தில் பிசின் வடியும். இலையின் அடிப்புறத்தில் உள்ள நரம்புகள் கருப்பு நிறமாக மாறும். லிமா பீன்ஸ் வகைகளின் மீது, இலை மற்றும் காய்களின் மீது கரும் புகை பூசணம் போன்ற புள்ளிகள் தோன்றும்
  • வசந்த காலத்தின் போது ஆந்திராக்நோஸ் உருவாகும். பின் குளிர் மற்றும் ஈரப்பதம் உள்ள வானிலை நிலவும் போது உதிர்ந்து விடும். ஆனால் வறண்ட சூடான வெயில் காலங்களில் உருவாகாது. குறிப்பாக லிமா பீன்ஸ் நோய் தாக்கக் கூடியவை.

கட்டுப்பாடு:

  • தரச்சான்று பெற்ற விதைகளை பயிரிட பயன்படுத்த வேண்டும்
  • பயிர் குப்பைகளை அறுவடை முடிந்த பின் அகற்ற வேண்டும்
  • மண்ணில் 2 வருட காலத்திற்கு பயிர் குப்பைகளின் மீது (அ) நோயுள்ள விதைகளின் மீது உயிர் வாழும்
  • 2 முதல் 3 வருடங்களுக்கு இந்த நோய் இருந்தால் பீன்ஸ் விதைகளை பயிரிட வேண்டும். செடிகளின் மீது தண்ணீர் பாய்ச்சுவதோ தெளிப்பதோ கூடாது
  • தாமிர பூஞ்சாணக் கொல்லிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

 

 

   

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015