பயிர் பாதுகாப்பு :: பீன்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்
பாக்டீரியல் இலைக் கருகல் நோய்: சேந்தோமோனஸ் கம்பஸ்டிரிஸ் வகை பேசோலி

அறிகுறிகள்:

  • 2 வகையான பாக்டீரியா இலைக்கருகல் உள்ளன. அவை பொதுவான கருகல் (சேந்தோபோனாஸ் கம்பஸ்டிரிஸ் வகை பேசோலி) மற்றும் ஹாலோ கருகல் (சூடோமோனாஸ் ஸிரின்ஸே வகை பேசியோலிகோலோ)
  • தண்டுகள், இலைகள், பழங்கள் தாக்கப்படும். மழை மற்றும் பனிக்காலங்கள் இந்த நோய் உருவாக சாதகமாகிறது
  • ஹாலோ கருகல் வெப்பநிலை குளிரும் போது உருவாகும்
  • செடிகளின் மீது இளம் பச்சை கலந்து மஞ்சள் நிற வட்டங்கள் பார்ப்பதற்கு வளையம் போன்று பழுப்பு நிறம் சுற்றியும் உள்ள புள்ளிகள் காணப்படும். பயிரின் வயது அதிகமாகும் போது, இந்த புள்ளிகள் ஒன்றிணைந்து, இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, மெதுவாக மடியும். தண்டில் புள்ளிகள் நீளமாக, சிவப்பு நிறம் கலந்த புள்ளிகளாகத் தோன்றும். இலைகள் கருகல் ஆரம்பித்து, பழுப்பு நிறமாக மாறி, பின் விரைவாக உதிர்ந்துவிடும்
  • பொதுவான கருகல் காய்களைத் தாக்கும். இதில் பச்சை கலந்த மஞ்சள் நிற வளையம் காணப்படாது. சூடான வானிலை நிலவும் போது இந்த நோய் தோன்றும்

கட்டுப்பாடு:

  • இரண்டு நோய்களும் தாக்கப்பட்ட விதைகளிலிருந்து பரவுகின்றன. ஈரப்பதம் இருந்தாலும் இந்த நோய் பரவும்
  • செடிகளின் மீது நீர் பாய்ச்சக் கூடாது. இலைப்பரப்பு ஈரமாக இருக்கும் போது தொடக்கூடாது. பாக்டீரியா மண்ணில் 2 வருடங்களுக்கு பயிர்க்குப்பைகளின் மீது உயிர் வாழும்
  • ஒவ்வொரு மூன்றாவது வருடத்திற்கு பிறகு அதே இடத்தில் பீன்ஸ் பயிரிடக்கூடாது. ஒவ்வொரு வருடமும் புதிய விதைகளை வாங்க வேண்டும்
  • தாமிர பூஞ்சாணக் கொல்லியை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். அறுவடைக்கும் தெளிப்புக்கும் இடையில் ஒரு நாள் காத்திருந்து தெளிக்க வேண்டும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015