பயிர் பாதுகாப்பு :: பீன்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்
சாம்பல் நோய்: எரிசிபே பாலிகோனி

அறிகுறிகள்:

  • இந்த பூஞ்சை நோய், செர்கோஸ்போரா இனங்கள் மூலம் ஏற்படுகிறது. இது முதலில் இலைகளின் அடியில் ஒழுங்கற்ற பழுப்பு புள்ளிகளாக தோன்றுகிறது.
  • கடுமையான தொற்று அதிகப்படியான இலை உதிர்தல் மற்றும் தாவரத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது.
  • தொடர் மழைக் காலங்களில் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை 75 முதல் 85°F இருக்கும்பொழுது தொற்று அதிகமாக இருக்கும்.

 

கட்டுப்பாடு:

  • நடவிற்கு நோய் தொற்று இல்லாத விதைகளை பயன்படுத்த வேண்டும். அறுவடைக்குப்பின் தோட்டத்தில் உள்ள பயிர் குப்பைகளை முழுவதுமாக நீக்க வேண்டும்.
  • ஒரே இடத்தில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பீன்ஸ் விதைக்கக் கூடாது. வீட்டுத் தோட்டத்தில் உண்டாகும் நோய்களுக்கு இரசாயனங்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை.

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015