பயிர் பாதுகாப்பு :: பீன்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

நீர் மென்மை அழுகல் நோய்: ஸ்கிளிரோசினியா ஸ்கிளிரோசியேரம்

அறிகுறிகள்:

  • சிறிய, மென்மையான நீரில் ஊறிய புள்ளிகள் தண்டுகள், இலைகள், காய்களின் மீது காணப்படும்
  • இந்தப் புள்ளிகள் குளிர், ஈரப்பதம் உள்ள நிலைகளில் பெரிதாகி, ஒன்றிணைந்து, தண்டுப் பகுதி பிளவுப்படும்
  • தாக்கப்பட்ட காய்கள் மென்மையாக நீர் ஆழ்ந்து, படிவதற்கு முன் பழுப்பு நிறமாக மாறும். தாக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளைநிற பூஞ்சாண் வளர்ச்சி சூழ்ந்திருக்கும்

கட்டுப்பாடு:

  • பயிர்களுக்கிடையில் காற்றோட்டமாக இருக்க வேண்டும்
  • அதிகப்படியான உரங்கள் இடக்கூடாது
  • பரிந்துரைக்கப்பட்ட இரசாயனக் கட்டுப்பாடு முறைகள் ஏதுவுமில்லை.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015