பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

செர்கோஸ்போரா இலைப்புள்ளி: செர்கோஸ்போரா லக்னேகஸன்ஸ்

அறிகுறிகள்

  • சிறிய, எண்ணற்ற புள்ளிகள் நடுவில் பழுப்பு நிறத்திலும், சிவப்பு கலந்த பழுப்பு நிற விளிம்புடன் காணப்படும்.
  • இதே போல புள்ளிகள் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும்.
  • சாதகமான சூழ்நிலையில், புள்ளிகள் அதிகமாகி, பூக்கும் சமயம் மற்றும் காய் உருவாகும் சமயத்தில் இலைகள் உதிரும்.
  • பூஞ்சாண் விதை மூலம் பரவும், பயிரின் குப்பைகளில் உயிர் வாழும்.
  • அதிக ஈரப்பதம் இந்த நோய் உருவாக சாதகமாகிறது.

கட்டுப்பாடு

  • உயரமாக வளரக் கூடிய தானியங்கள் மற்றும் சிறு தானியங்களுடன் ஊடுபயிர் செய்தல்
  • சாகுபடி முறையை சரியாக பின்பற்றுதல்
  • நோயற்ற விதைகளை பயன்படுத்துதல்
  • குறைந்த பயிர் எண்ணிக்கை மற்றும் அதிக இடைவெளி விட்டு பயிரிடவேண்டும்.
  • நிலப்போர்வை செய்வதால் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
  • கார்பன்டசிம் 0.5கிராம் / லிட்டர் (அ) மான்கோசெப் 2 கிராம் /லிட்டர் என்ற அளவில் விதைத்து 30 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015