பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் அழுகல் மற்றும் இலை கருகல்: ரைசக்டோனியா சொலானி

அறிகுறிகள்

  • விதை அழுகல், வேர் அழுகல், நாற்றழுகல், நாற்று கருகல், தண்டு சொறி, இலை கருகல் ஆகியவை தோன்றும்.
  • பொதுவாக காய் பிடிக்கும் நிலையில் இந்த நோய் தோன்றும்.
  • நோயின் ஆரம்ப நிலையில், விதை அழுகல் , நாற்று கருகல், வேர் அழுகல் அறிகுறிகள் தோன்றும்.
  • தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.இலைகளில் ஒழுங்கற்ற பழுப்புற்ற புள்ளிகள் தோன்றும்.
  • இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய கருகல் தோன்றி, இலைகள் வளர்வதற்கு முன்பே உதிர்ந்து விடும்.
  • வேர் மற்றும் தண்டின் அடிப்பகுதி கருப்பு நிறமாக மாறும். பட்டைகள் எளிதாக உரியும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்கள் வாட ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட பயிரின் ஆணி வேரை பிரித்துப் பார்த்தால், உள்ளே உள்ள திசுக்கள் சிவப்பு நிறமாக உள்ளது தெரியும்.
  • மண் மூலம் பரவும்.

கட்டுப்பாடு

  • டிரைக்கோடெர்மா விரிடியுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015