தண்டு சொறி: மேக்ரோபொமினா பேசோலினா
அறிகுறிகள்
- நெல்லை தொடர்ந்து, உளுந்து நடவு செய்யும் வயல்களில், வெள்ளை நிற சொறிகள் தண்டின் அடிப்புறத்தில் 4 வாரமான உளுந்து பயிரில் தோன்றும்.
- இந்த சொறிகள் பெரிதாகி, பழுப்புற்ற கோடுகள் போன்று மேல்நோக்கி பரவும்.
- பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன், இலைகள் அடர் பச்சை நிறத்தில், பல வண்ண நிறமாக மாறி, அளவு சிறிதாகித் தோன்றும்.
- தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் திடீரென்று உதிர்ந்து, காயும்.
- பூத்தல் மற்றும் காய்த்தல் பெரிதளவு குறையும்.
கட்டுப்பாடு
- கோடையில் ஆழமாக உழவு செய்தல்.
- பயிர் சுழற்சியை மேற்கொள்ளுதல்
- பண்ணை எரு 12.5 டன்/ஹெக்டர் என்ற அளவில் இட்டு பண்ணை சீரமைத்தல்.
- நோய்தாக்கப்பட்ட பயிர்க் குப்பைகளை மண்ணில் புதைத்து எரித்தல்.
- டிரைக்கோடெர்மா விரிடி 4 கி/கிலோ விதைக்கு (அ) ப.ப்ளோரோசென்ஸ் 10கி/கிலோ விதை (அ) கார்பென்டசிம் அல்லது திரம் 2கி/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- கார்பெண்டசிம் 1 கிராம்/லிட்டர் (அ) ப.ப்ளோரெசன்ஸ்/டி.விரிடி 2.5 கிலோ/ஹெக்டர் + பண்ணை எரு 50 கிலோ என்ற அளவில் குறிப்பிட்ட இடத்தில் அமிழ்த்தி வைக்க வேண்டும்.
|
|
|