பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

மஞ்சள் தேமல் நோய் நச்சுயிரி நோய்

நோயின் அறிகுறிகள்

  • நோயின் முதல் அறிகுறியாக இளம் இலைகளின் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும்.
  • பின்னர் இலை முழுவதும் திட்டுதிட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்து பகுதிகள் தோன்றும்.
  • சிலசமயம், நோயுற்ற இலைகள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படும்.
  • நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகி கொண்டே வந்து சில துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகி விடும்.
  • நோயுற்ற செடிகள் தாமதமாகி காய்ப்பிற்கு வருவதுடன் குறைந்த எண்ணிக்கையில் காய்க்கும் சில சமயங்களில் காய்களும், விதைகளும் மஞ்சளாக மாறிவிடும்.
  • செடிகளின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால் முழு மகசூல் இழப்பு ஏற்படும்.

பரவுதல்

  • பெமிசியா டபாசி வெள்ளை ஈயினால் இந்நோய் பரவுகிறது


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2019