பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: கத்தரிக்காய்
ஆந்த்ராக்நோஸ்: கொலிட்டோடிரைக்கம் மேலோங்கினே
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பழங்களில் வேறுபட்ட அளவில் மூழ்கிய புண்கள் தோன்றும்
  • 1.3 cm அகலம் அளவில் புண்கள் தோன்றி பின்பு ஒன்றாக கூடிவிடும்
  • பழுப்பு நிற பூஞ்சை  நுண்மங்கள் புண்களில் தோன்றும்
  • பழம் காய்ந்த கருப்பு நிறமாக மாறி உதிர்ந்துவிடும்
 
  பொதுமைய வளையங்கள் சிதைந்து போன பழம் தீவிர தொற்று நோய்

நோய் காரணி:

  • மைசீலயம் குறுக்கு மற்றும் நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு, கிளைகளுடன் இளஞ்சிவப்பு முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • அசெர்விலை எளிய உருண்டையாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • கோநிடியோஸ்போர்கள்- நிமிர்ந்த மற்றும் கண்ணாடி போன்று  இருக்கும்
  • கோநிடியோ கண்ணாடி போன்று, ஒரு அணுவை கொண்டு முட்டை அல்லது நீள்சதுர வடிவில் இருக்கும்

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • பாதிக்கப்பட்ட செடிகளில் அசெர்விலையாக உயிர் வாழும்
  • மழைத்துளிகள் மூலம் இந்நோய் பரவுகிறது 

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • ஈரப்பதம்- 100 %
  • வெப்பநிலை- 21 முதல் 29 °C
கட்டுப்படுத்தும் முறை:
  • சுத்தமான தோட்ட பராமரிப்பு- பாதிக்கப்பட்ட செடி, கொடி கழிவுகளை அழித்தல்
  • ச. டோர்வம் போன்ற மாற்று புரவலன் செடியை வளர்க்கவும்
  • பழங்களை சரியான நேரத்தில் அறுவடை செயவும்
  • பத்து நாட்கள் இடைவெளியில் ஜைனப அல்லது பெர்பாம் தெளித்தல்
Source of Images:
http://www.infonet-biovision.org/default/ct/116/crops#_1793_903
http://www.extension.umn.edu/garden/diagnose/plant/vegetable/eggplant/fruitspots.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015