பயிர் பாதுகாப்பு :: கார்நேசன் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி நோய்: ஆல்டர்னேரியா டயாந்தி
அறிகுறிகள்:

  • இலையின் அடிப்புறம் காய்ந்தும், கணுக்களைச் சுற்றி வெட்டுப்பட்டு காணப்படும். இலையின் மீது உள்ள புள்ளிகள் நீர்ப்பூத்த வெண்மை நிறமாக இருக்கும்.
  • புள்ளிகளின் மையப்பகுதியில் அடர் பழுப்பு நிறத்திலிருந்து அதில் கறும் பூஞ்சை வளர்ச்சி சூழ்ந்து காணப்படும்.
  • இலைகள் சுருங்கி, முறுக்கப்பட்டு நுனிப்பகுதிகள் இறந்துவிடும் வாய்ப்பும் உள்ளது.
  • கிளைகள் வெட்டு கச்சைய  பகுதிகள் கருகி அதில் கருப்பு கொண்டியா மேலோடமாக் காணப்படும்.
 
இலையில் புள்ளி மொட்டில் புள்ளி பூவில் புள்ளி  

மேலாண்மை:

  • ஈரப்பதம் மற்றும் சரியான காற்றோட்டம் செடிகளுக்கு கிடைக்குமாறு செய்வதன் மூலம் இந்நோயின் தாக்கம் குறையும்.
  • நோயற்ற நடவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
  • நடவு பொருட்களை 2 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் ஒரு லிட்டர் தண்ணிரில் நனைத்து உபயோகிக்கவும்

Image Source: University of Agricultural Science, GKVK, Bangalore


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015